Entry · 007sathish.com

மன்மோகன் சிங் ஒரு பக்க வரலாறு

Date
Author
Reading
—
மன்மோகன் சிங் (Manmohan Singh, செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் பதினான்காவது பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச்
சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.


1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பணி அனுபவம்

* பொருளாதாரத்தில் First Class Honours பட்டம் , கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், (1957)
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், இந்தியா
o மூத்த விரிவுரையாளர், பொருளாதாரம் (1957-1959)
o வாசிப்பாளர் (1959-1963)
o பேராசிரியர் (1963-1965)
* பொருளாதாரத்தில் D.Phil பட்டம், Nuffield கல்லூரி at ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், (1962)
* தில்லி பொருளாதார பள்ளி, தில்லி பல்கலைக்கழகம்
o பேராசிரியர் (அனைத்துலக வர்த்தகம்) (1969-1971)
o கௌரவப் பேராசிரியர் (1996)
* பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், இந்தியா (1971-1972)
* முதன்மை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சகம், இந்தியா, (1972-1976)
* கௌரவப் பேராசிரியர் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி (1976)
* இயக்குனர், இந்திய ரிசர்வ் வங்கி (1976-1980)
* இயக்குனர், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (1976-1980)
* செயலர், நிதி அமைச்சகம் (பொருளாதார அலுவல் பிரிவு), இந்திய அரசு, (1977-1980)
* ஆளுனர், இந்திய ரிசர்வ் வங்கி (1982-1985)
* துணைத் தலைவர், இந்தியத் திட்டப்பணி ஆணையம், (1985-1987)
* பொருளாதார விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் (1990-1991)
* இந்திய நிதி அமைச்சர், (ஜூன் 21, 1991 - மே 15, 1996)
* எதிர்க்கட்சித் தலைவர், இந்திய நாடாளுமன்ற மேலவை
* இந்தியப் பிரதமர் (மே 22,2004 - இன்று வரை)

மன்மோகன் சிங்கின் மகள் தாமன் சிங் 


பிற தலைவர்களோடு









—Discussions

Discussions.

Elayaraja Sambasivam January 4, 2011 at 2:29 PM
இந்த வரலாறையும் கொஞ்சம் படிங்க

http://singhisnotking.blogspot.com/2011/01/1.html
பூங்குழலி January 4, 2011 at 3:57 PM
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்


அவமானம்
Anonymous January 4, 2011 at 9:34 PM
படங்களை சரி செய்யவும்...பதிவு சூப்பர்