-

ஒசாமா பின் லாடன் ஒரு பக்க வரலாறு

ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957  பொதுவாக ஒசாமா பின் லேடன் அல்லது உசாமா பின் லேடன் என் அறியப்படும் இவர் சவூதி அரேபியாவில் பிறந்த இசுலாமிய போராளியாவர். இவர் அல் கைடாவை தொடக்கியவராக கருதப்படுகிறார்.   இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை

வாபஸ் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் இராணுவத்தினரையும் கொலை செய்யுமாறு முஸ்லிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என் கூறப்படுகிறது. அவர் மொத்த 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா இவரது 10 வது மனைவி அமிதியா அல் அட்டாஸ் என்பவருக்கு ஒரே மகனாக பிறந்த்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.


4 comments:

சமுத்ரா said...

:):)

வினோ said...

நல்லா இருக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு நண்பரே... புகைப்படங்கள் பல பார்க்கததாக உள்ளன..

Speed Master said...

:)