-

ஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு

 ஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம்.  இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுகிறார்.

இவரது குடும்பம் வியட்நாம் திரைப்பட துறையில் பங்காற்றுகிறது. இவரது பாட்டனார் லியன் ஃபெங் வான் என்ற தற்காப்புக்கலையை உருவாக்கியவர். இவரது அண்ணன் சார்லி ஙுயென் ஒரு திரைப்பட இயக்குநர். இவரது தாய் சீனாவை சேர்ந்தவர். மேலும் இவருக்கு ஒரு தமக்கையும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.

இவர் இதுவரை 24 திரைப்படங்களில் நடிகராகவும் 17 திரைப்படங்களில் சாகசராகவும் பணியாற்றியிருக்கிறார்.


* தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் வந்த கிரீன் காப்லின் கதாப்பாத்திரத்திற்கு இவர் டூப் போட்டிருக்கிறார்.
* டோனி ஜா நடித்த டாம் யம் கூங் திரைப்படத்தில் ஜானி என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்தவர் இவரே.
* இவர் வில்லனாக நடித்த 7ஆம் அறிவு என்ற தமிழ் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
2 comments:

SURYAJEEVA said...

நன்றி

Kousalya Raj said...

He is the best ! thank u for sharing sathish !! :))