-

வாழ்க்கையில் யாரையும் சாராமல் வாழ்வது

1930 ஆம் ஆண்டில், சென்ட்ரல் அமெரிக்காவில், ஹோண்டுராவின் சோலுடெகா ஆற்றின் குறுக்கே, சோலுடெகா பாலம் கட்டப்பட்டது.

அதற்கும் நான் முன்னேறுவதற்கும் என்ன சம்பந்தம் ?

கடுமையான வானிலை மண்டல பகுதியில் அமைந்திருக்கும் இந்த பாலம், உலகின் மிகப் பெரிய கட்டிடக் கலைஞர்களால் சூறாவளிகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன பாலமாக இருந்தது.

1998 ஆம் ஆண்டில் மிட்ச்" சூறாவளி தாக்கியபோது மற்ற பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அழிக்கப்பட்டாலும், சோலுடெகா பாலம் தொடர்ந்து தாக்கு பிடித்து நின்றது. ஆனால்?

ஒரே ஒரு சிக்கல்…

சோலுடெகா அசையாமல், உறுதியாக, மாறாமல் - நின்றது. ஆனால், கடந்து வந்த நதி நகர்ந்துவிட்டது!

பாலத்திற்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டன. ஒரு காலத்தில் அதிநவீன கட்டுமானம், தற்போது புதிய சூழலுடன் ஒத்துப்போக முடியாது என்று ஆகிவிட்டது மற்றும் பயனற்றதாகி போனது.

வலுவான, உடைக்க முடியாத பாலம் எங்கும் செல்லாததால் யாருக்கு என்ன பயன்?

கீழே படத்தில் சோலுடெகா பாலம், ஹோண்டுராஸ்.

சோலுடெகா பாலம் இப்போது ஒரு சிறந்த அடையாளமாக உள்ளது. எதற்காக?

எல்லாருக்கும் இது ஒரு முக்கியமான பாடமாகிப்போனது.

நீங்களே, உங்களை வாழ்க்கை சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க சோம்பேறித்தனமாக இருந்தால், குண்டு சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு இருந்தால்… என்ன நடக்கும் என்பதற்கான அடையாளம்.

“ஒவ்வொரு அமைப்பும் ஒரு முடிவை பெறுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது”

இது நமது வாழ்க்கை முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தகங்களை தவிர வேறு ஒன்றும் கற்று கொள்ளாமல் தற்போதைய கல்வி முறைகளில் மட்டுமே சிக்கித் தவித்து, எதற்கெடுத்தாலும் குறை மட்டுமே சொல்லி கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதை காட்டுகிறது.

We wants to create best solution for the problem, whereas problem itself might change.



சோலுடெக்காவைப் போலவே, உலகெங்கிலும் உள்ள பல வியாபாரங்கள், கல்வி முறைகள் ‘வெறும் பாலம்’ ஆகிவிட்டது.

மேற்படிப்பு படித்தால் மட்டுமே பற்றாது. ஒரு கிளை தான் இருக்கிறது என்று பல்வேறு கிளைகள் உங்கள் வியாபாரத்தில் ஆரம்பித்தால், ஆன்லைன் பிசினஸ் சக்கை போடு போடுகிறது.

நீங்கள் வெறும் பாலமாக இருக்கக் விரும்புகிறீர்களா?

முன்னெப்போதையும் விட இப்போது நமக்கு தேவை - தேடி சென்று கற்றல்.

Build to last தற்போது இல்லை. Build to adapt என்பது தான் நிஜம்.

Source

0 comments: