-

சுய முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது என்ன?

ஒரு மனிதன் முன்னேற்றம் அடைய தடையாக இருப்பது தன்நம்பிக்கை இல்லாமை, முயற்சி இன்மை.உங்களை நீங்கள் அறியாமை (not knowing yourself). இது தான் நம்மில் முதல் முட்டுகட்டை.

உங்களை அறிதல் மிக மிக அவசியம் Knowing yourself is very important.இந்த ஆமையை மாதிரி மிகவும் கெட்டதை நீங்கள் எங்கேயும் பார்க்ககே முடியாது, இது தண்ணீரில் வாழும் ஆமையை விட கொடூரமானது. ஆனால் மற்றவர்களை பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள். பிரபலமானவர்களை (celebrities) பற்றி இன்னும் நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள். இதில் நடிகர்களின் ஆடியோ (அ) வீடீயோ ட்ரெய்லர் வருமுன்னே அதனுடைய எதிர்பார்ப்பு; பின் பறந்து விழுந்து வாங்குதல், download இப்படி இத்தியாதிகள் அனைத்தும் நடக்கும். அவர்களுக்கு எவ்வளவு வருமானம், அடுத்த புராஜக்ட் என்ன, அவர்கள் உலக Forbes பட்டியலில் எத்தனையாவது இடத்தில் உள்ளார்கள்? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் நீங்கள், ஒவ்வொரு நாளும் உங்களை பற்றி நினைக்க சில மணித்துளிகள் செலவு செய்தாலே, நீங்கள் உங்கள் முன்னேற்ற பாதையில் ஒரு படி மேலே வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்வது மிகவும் அவசியம். அவர்களும் சாதாரண மனிதர்களாக இருந்து தான், பிரபலமானவர்களாக (celebrities) ஆனவர்கள்.இதனை எத்தனை பேர் நினைத்து சிந்திப்பார்கள்? அவர்கள் பலகோடி உங்களை வைத்து சம்பாதிக்கின்றார்கள். நீங்கள் குறைந்தது எத்தனை ஆயிரம் சம்பாதிக்கின்றீர்கள்? என்று சற்றே சிந்தியுங்கள். நாம் நிறைய சிந்திக்க கூடியவர்கள், செயலாக்கம் செய்பவர்கள். ஆனால் நம்மை அதை செய்ய விடாமல் தடுப்பது எது? இதே கதை தான் விளையாட்டு, மூயூசிக், அரசியல் இப்படி பல தரப்பட்ட பிரபலமானவர்களை (celebrities) நாம் கொண்டாடும் போது.

என்னாலும் முடியும் என்று உங்களை நீங்கள் நம்புங்கள். மற்றவை உங்களுக்காக நடக்க ஆரம்பிக்கும்.

கீழே ஸ்டார்டிங் ட்ரபில் (starting trouble) பற்றி மார்ட்டின் லூதர் என்ன சொல்கின்றார் பாருங்கள்:

நீங்கள் உயரமான படிக்கட்டுகளை பார்த்து பயப்பட வேண்டாம். முதல் படியில் ஏறினாலே போதும்.

இங்கு தான் நாம் யோசித்து, தாமதித்து ஏறாமல் மீண்டும் தாமதித்து கொண்டே இருக்கின்றோம்.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். உங்கள் வாழ்வில் ஒரு இருப்பு தன்மை இருக்கின்றது (existence moment), அது உங்களுக்காக நீங்கள் மட்டுமே பேசும் போது உணர முடியும். வேறு யாரும் உங்களுக்காக பேச மாட்டார்கள் என்றார், மார்ட்டின் லூதர்.

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் , உங்களுடைய தரம் ஒன்று மட்டுமே முக்கியம் என்கின்றார், மார்ட்டின் லூதர். அதை நீங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்.

இதவே உங்கள் முன்னேற்றத்திற்கு முதல் படிகட்டு.
Source

0 comments: