ஹேக்கர்களின் ராஜ்ஜியம். மிகக் கொடூரமான சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சிகள் நடக்கும், இணையத்தின் மறுக்கம் இந்த டார்க் நெட்.

நாம் பயன்படுத்தும் இணையதளம் இரண்டாக பிரிக்கப்படுகின்றது. 1). சர்ஃபேஸ் வெப் (Surface web), 2). டீப் வெப் (Deep web). நாம் இப்போது பயன்படுத்தும் கூகுள் தேடல்கள், முகநூல், பாடல் தளங்கள், அமேசான், இன்ன பிற தளங்கள் எல்லாம் சர்ஃபேஸ் வெப்பில் வருபவை. இ மெயில், பாஸ்வேர்டுகள், வங்கிப் பண பரிமாற்றங்கள் போன்ற வெளிப்படையாக காட்ட முடியாதவை டீப் வெப்பில் வருபவை. சர்ஃபேஸ் வெப் 5 % மட்டும்தான். மீதி 95% டீப் வெப்.

இந்த டார்க் நெட் என்பது டீப் வெப்பின் ஒரு பாகமாகும். இந்த டார்க் நெட்டில் நம் அடையாளத்தை மறைத்துக் கொள்ளலாம். அதாவது நம்முடைய இடம், அடையாளம், போன்றவற்றை மற்றறவர்களால் ட்ராக் செய்ய இயலாது. இது போதுமே சமூக விரோதிகளுக்கு..

பல சட்டவிரோதமான நிகழ்ச்சிகள் , தொடர்புகள், வர்த்தகங்கள் இதில் நடக்கின்றன. பல ப்ளாக் மார்க்கெட் தளங்கள் இந்த வெப்பில் இயங்குகின்றன. போதைப் பொருட்கள் விற்பனை, ஆயுதங்கள் விற்பனை போன்றவை அமோகமாக நடக்கின்றது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள், கொலை செய்யப்படும் நேரலை வீடியோக்கள் போன்ற மிகக் குரூரமான விஷயங்கள் இதில் உலா வருகின்றன. இவற்றை பார்ப்பதற்கு பணம் செலுத்த வேண்டும். இதையும் அதிகப் பணம் செலுத்தி ரசிக்கும் சைக்கோ கூட்டமும் இருக்கிறது. கொலை செய்வதற்கு கூட ஆட்களை இதில் புக் செய்கிறார்கள். இந்த இணையங்களைப் பயன்படுத்துபவர்களையும், நடத்துபவர்களையும் கண்டறிய இயலாது.

அது சரி. பணப்பரிமாற்றம் எப்படி நடக்கின்றது? இந்த ப்ளாக் மார்க்கெட் தளங்களில் பணப்பரிவர்த்தனைகள் பிட் காய்ன் போன்ற க்ரிப்டோ கரன்சியின் மூலம் நடக்கின்றது. இதில் பணம் செலுத்துபவரும், பணத்தை வாங்குபவரும் யார் என்று தெரியாது.
பொதுவாக இந்த இணையதளங்களை கூகுள் க்ரோம், மொசில்லா போன்ற ப்ரவுசர்கள் வைத்து நம்மால் கண்டறிய இயலாது. இந்த இணையதளங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இதற்கென்று தனியே உள்ள ப்ரவுஸர்களை கொண்டுதான்உள்நுழைய முடியும். Tor, retroshare, syndie என பல உள்ளன.
டார்க் நெட்டில் முதன்முதலில் Silkroad என்ற ப்ளாக் மார்க்கெட் 2011ல் வந்தது. அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் பெருமுயற்சிக்குப் பிறகு 2013ல் இந்த இணையதளம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்டாலும் Silkroad 2, 3 என்ற பெயர்களில் உலா வந்தது. இந்த மார்க்கெட்டுகள் க்ரிப்டோ கரன்சியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றது.
டார்க் நெட் சில நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது. எப்படியிருந்தாலும் பெரும்பாலும் சட்ட விரோத செயல்களுக்கு தான் பயன்படுத்தப்படுகின்றது. தனிநபரின் விபரங்கள், கிரெடிட்கார்டு எண்கள், பாஸ்வேர்டுகள் போன்றவை திருடப்பட்டு இதில் விற்கப்படுகின்றன. 2016 ம் ஆண்டு மிகப்பெரிய கால் டாக்சி நிறுவனமான ஊபர் (Uber) ன் வலைதளத்திலிருந்து கிட்டத்தட்ட 5 கோடி பேரின் தொலைபேசி எண்கள், இமெயில் முகவரிகள் போன்றவை திருடப்பட்டுள்ளன. தகவல்களை வெளியிடாமல் இருக்க இந்நிறுவனம் ஹேக்கர்களுக்கு பணம் வழங்கியது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எச்சரிக்கை: டார்க் நெட் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதோடு மட்டும் விட்டுவிட்டு , தேவையில்லாமல் முயற்சி செய்து பிரச்சினைகளுக்குள் சிக்க வேண்டாம்.
0 comments:
Post a Comment