
இது ஒரு வசீகரமான கற்பனை. நான்காவது பரிமாணம் என்பது இன்டர்ஸ்டெல்லர் காட்டப்பட்ட விதத்தில் ஐந்தாவது பரிமாணத்தில் வேறு ஒரு மக்கள் வாழ்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. அது கண்டிப்பாக நாம் கிடையாது. நம்மால் இந்த முப்பரிமாண உலகைத் தாண்டி மேலே உள்ள ஒரு பரிமாணத்தை புரிந்துகொள்ளவே முடியாது.
உங்களுக்கு இதை விளக்குவது என்றால் 1 2 3 என்று அவ்வையர் மாதிரி வரிசையாக பரிமாணத்தை விளக்கவேண்டும். ஒன்றாம் பரிமாணம் என்பது ஒரு கோடு ஆங்கிலத்தில் "லைன்"!
இரண்டாவது பரிமாணம் என்பது ஒரு சதுரம் அல்லது முக்கோணம் அல்லது வட்டம் போன்று ஒரு 2d ஆப்ஜெக்ட்!
ஒன்றாவது பரிமாணத்தில் உள்ள ஒரு பொருள் இரண்டாவது பரிமாணத்தை பார்க்க முடியாது புரிந்து கொள்ளவும் முடியாது, அதேபோல் இரண்டாவது பரிமாணத்தில் உள்ள ஒரு வட்டத்தைக் கோ சதுரத்துக்கு உயிர் வந்தால்கூட மூன்றாவது பரிமாணம் ஆன உயரம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாது.
எவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமோ அவ்வளவு எளிமையாக சொல்கிறேன்!
அதாவது ஒரு ஒரு 2d சித்திரம் உயிர் பெற்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்,; ஒரு வட்டம் ஒரு சதுரத்தை பார்க்கும் பொழுது ஒரு கோடு தான் தெரியும்! 2 ஸ்கிரீன் மாட்டிக்கொண்ட ஒரு பூச்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள், அந்தப் பூச்சி மேலே பறக்க முடியாது கீழேயும் செல்ல முடியாது,, இதுதான் இரண்டாவது பரிமாண உலகம்!
இப்பொழுது இந்தப் பூச்சி ஒரு மீன் தொட்டி கீழே மாட்டிக்கொண்டு உள்ளது! இந்த பூச்சி தரையோடு தரையாக சுற்றிக்கொண்டிருக்கும்! அது இன்னொரு பூச்சியை பார்க்கும்போது ஒரு கோடு தான் அதற்கு கண்ணுக்குத் தெரியும்!
தனக்கு மேலே ஒரு முப்பரிமாண உலகம் உள்ளது மீன்கள் மேலே கீழே செல்கின்றன மேலே கீழே என்பதன் அர்த்தமே அந்த பூச்சிக்கு புரியாது மேலே கீழே நம்மால் நகர முடியும் என்பது அதை உணர முடியாது! அதன் கண்களுக்கு மீன்களின் அடிப்பாகம் தெரியும், ஒரு வட்டமான ஒரு தட்டு இப்படி அப்படி போய்க்கொண்டு இருக்கும்! உள்ளது மீன் அது ஒரு தொட்டி என்பதை மீன் எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அந்த பூச்சிக்கு புரியாது!
இப்பொழுது இந்த மீன் தொட்டி ஒரு ஆரம்ப நிலை! தனக்கு மேலே உள்ள பரிமாணத்தை புரிந்துகொள்ளமுடியாத ஒரு முப்பரிமாண நிலையிலுள்ளது! உதாரணத்துக்கு ஒரு மீன் தொட்டியில் உள்ள மீனுக்கு மனித வாழ்க்கை அமெரிக்கா லண்டன் பசுபிக் சமுத்திரம் போன்ற இடங்களில் எல்லாம் மீன்கள் உள்ளன மனிதர்கள் தம்மை ஒரு தொட்டியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியாது! இன்னும் சொல்லப்போனால் அந்த மீன் தொட்டியில் உள்ள அறையில் ஒரு ஆணா பெண்ணா அவர் நோக்கம் என்ன தன்னை ஏன் அவர் வளர்க்கிறார் என்று அந்த மீனுக்கு புரியவே புரியாது! அந்த மீனுக்கு தெரிஞ்சதெல்லாம் ஏதோ உருவங்கள் நம் தொட்டிக்கு வெளியே உள்ளன! அவ்வளவுதான்!
ஆனால் அந்த மீனுக்கு பூச்சியை வரைந்து காட்ட முடியும்! மனிதனை பற்றி விளக்கவே முடியாது! எழுத்தாளர் சுஜாதா எழுதுவார் ஒரு விளக்குக்கு அருகே உள்ள பல்லி ஒன்றுக்கு அருகிலுள்ள விளக்கு எப்படி எரிகிறது என்ற விஞ்ஞானம் புரியவே புரியாது! மின்சாரம் என்றால் என்ன அந்த விளக்கு எப்படி எரிகிறது என்று நீங்கள் பாடம் எடுக்க முடியாது. நிறைய மனிதர்களுக்கே விஞ்ஞான பாடம் புரிவதில்லை! அப்படி இருக்கையில் ஒரு பல்லி கண்டிப்பாக விஞ்ஞானம் பாடங்கள் புரிந்துகொள்ளவே முடியாது!
இது நாம் மனிதர்கள் முப்பரிமாண உலகத்தை 2d பரிமாணத்தில் வரைந்து ஒரு கீழ்நிலை பரிமாணத்தில் உள்ள உயிரினத்துக்கு புரிய வைக்க முடியும்! ஆனால் மூன்றாவது பரிமாணத்தில் வசிக்கும் நாம் நான்காவது பரிமாணத்தில் மாட்டிக் கொண்டுள்ளோம்! அந்தப் பூச்சி மூன்றாவது பரிமாணத்தில் மாட்டிக் கொண்டுள்ளது!
நாம் எந்த பரிமாணத்தில் வசிக்கிறோம் அதற்கு மேலுள்ள பரிமாணத்தை புரிந்து கொள்ளவும் முடியாது முப்பரிமாணத்தில் நகர்வது போல் நான்காவது பரிமாணத்தில் நகரவும் முடியாது! அதுதான் காலம்!
மாட்டிக்கொண்ட பூச்சியால் மேலே கீழே போக முடியாது அதுபோல் காலமென்னும் 4 டி பரிமாணத்தில் வசிக்கும் நாம் காலத்தில் முன்னே பின்னே பயணம் செய்ய முடியாது! அதாவது காலப்பயணம் செய்யமுடியாது!
நான்காவது பரிமாணத்தில் வசிக்கும் நாம் மூன்றாவது பரிமாணத்தில் மேலே கீழே போக முடியும் மூன்றாவது பரிமாணத்தை இரண்டாவது பரிமாணத்தில் வரைந்து காட்ட முடியும்!
அதேபோல் ஐந்தாவது பரிமாணத்தில் வசிக்கும் ஒரு நபர் நான்காவது பரிமாணமான காலத்தில் முன்னே பின்னே செல்ல முடியும்! நான்காவது பரிமாணத்தை மூன்றாவது பரிமாணத்தில் வரைந்து காட்ட முடியும்!
அதற்குப் பெயர்தான் " டெச ராக்ட்" ! நான்காவது கால பரிமாணத்தை முப்பரிமாணத்தில் வரைந்து காட்டும் ஒரு சித்திரம்தான் அது! இன்டர்ஸ்டெல்லர் படத்தில் ஒரு நம்மை விட மேம்பட்ட 5டி கிரகத்தில் வசிக்கும் சிலர் இப்படி படம் வரைந்து அந்த திரைப்படத்தில் கூப்பர் என்ற கேரக்டருக்கு போட்டுக் காட்டுவார்கள். அதன்மூலம் அவர் காலப் பயணம் செய்வார்!
ஐந்தாவது பரிமாணத்தை விளக்குவதற்கு நான் ஒரு இன்டர்ஸ்டெல்லர் கதை சொல்ல வேண்டி இருக்கிறது! நான்காவது பரிமாணத்தில் உள்ள நாமொரு பூச்சி என்றால் ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளவர் ஒரு முழு மனிதன்!
ஒரே நேரத்தில் ஒரு பூச்சி பூச்சியாகும் மனிதனாகவும் இருக்க முடியுமா! அதுபோல்தான் மனிதன் ஐந்தாவது பரிமாணத்தில் வசிக்க முடியாது என்பது மட்டுமல்ல அதைப்பற்றி மனிதனால் புரிந்து கொள்ளவே முடியாது!
அதற்கான முயற்சிகள் மனிதன் ஆரம்பித்திருக்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்! கனவு காண ஆரம்பித்திருக்கிறோம்! ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை கனவுதான்! அதனால் எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம்!
உலகம் 5D என்கிற பிப்த் டைமென்ஷன் நோக்கி போய் கொண்டிருப்பது உண்மையே . இதை பற்றி பல ஆராய்ச்சிகள் , கண்டுபிடிப்புகள் நடக்கின்றன.
இயற்பியல் மற்றும் ஆன்மிகம் இரண்டிலும் இதற்கு சான்றுகள் உண்டு. நம்முடைய உடல், மனம், ஆழ்மனது, புத்தி இவை ஐந்து நிலைகளில் பிரதிபலிக்கின்றன .
முதலாவது நிலை அன்னமயகோசம் என்பது . சுருக்கமாக சொன்னால் உடல் வெளித்தோற்றம் மற்றும் பொதுவாக பஞ்ச பூதங்களால் ஆன உடல் பற்றியது இந்த நிலை .
அடுத்த நிலை பிராணமயகோசம் . பிராணன் என்கிற சுவாசமே இந்த நிலையின் அதிகாரம். கதிர்வீச்சுகளால் ஆனது. உயிர் இருப்பதற்கும், இறந்து விடுவதற்கும் இந்த பிராணனே காரணம். சிலருடைய விருப்பு வெறுப்பு தன்மையை அவர்கள் சொல்வதை தாண்டி நம்மால் உணர முடியும். அவர்களுடைய பிராணனின் கதிர்வீச்சால். புத்தர் மற்றும் மகான்கள் சில இடங்களில் தியானம் செய்து கொண்டிருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள சிங்கம் புலி கூட பிற உயிர் இனங்களை அடித்து சாப்பிடாது. காடே அமைதியில் பூத்து குலுங்கும் என்பர் . அந்த மஹான்களின் பிராண கதிர் அவ்வளவு ஷக்தி வாய்ந்தது.
அடுத்து மனோன்மய கோசம் . முழுக்க முழுக்க மனது சம்மந்தப்பட்டது . மனதை ஆக்கம் மற்றும் அழிவு இரண்டிற்கும் நன்றாக பயன்படுத்தலாம் .
இதை கீதையில் கண்ணன் “உன் நண்பனும் நீ, உன் பகையும் நீ” என்று குறிப்பிடுகிறார். மனது ,ஆழ்மனது , தூக்க நிலை ,விழிப்போடு இருக்கும் நிலை இவற்றை நாம் உணர்வு ரீதியாக தெரிந்து கொள்கிறோம்.
விக்ஞான மய கோசம் அடுத்த நிலை. இது காலம், நேரம் உடல் காரிய காரணத்திற்கு அப்பாற்பட்டது . புத்தி மற்றும் உள்ளுணர்வு , கடவுளின் சக்திக்கு உட்பட்ட நிலை . பல மாமேதைகள் அறிஞர்கள் இந்நிலையில் சென்றுதான் கண்டுபிடிப்புகளை தருகின்றனர். பதில்கள் கிடைக்கும். உடல் மனதை தாண்டியது . புத்திக்கும் அப்பாற்பட்டது.
அடுத்த இறுதியான, உறுதியான, ஆனந்த மயமான நிலை ஆனந்த மய கோசம். உண்மையை உணர்வது எல்லாவற்றிலும் தன்னை , தன்னை எல்லாவற்றிலும் கண்டு நாம் யார் என்று அறிந்து பிறவாமை, இறவாமை அடையும் உன்னத நிலை . இது முழுக்க யோகிகள் ஞானிகள் மற்றும் இறைவனின் சொந்த இருப்பிடம் !
நம்மால் நான்காம் பரிணாமத்தை புரிந்து கொள்ளவே முடியாது ஏன் கற்பனை கூட செய்யமுடியாது.. காரணம் அதற்கான உதாரணப் பொருட்கள் நமது முப்பரிமாண உலகில் இல்லை.. நாம் நாற்பரிமாணத்தின்நிழலை மட்டுமே காண முடியும்..
உதாரணமாக.. நமது முப்பரிமாணத்தில் நீளம் அகலம் உயரம் என்று மூன்று பரிமாணங்கள்.. அதாவது நீங்கள் ஒரு பேருந்தின் கடைசி இருக்கையில் இருப்பதானால்.. உங்களுக்கு முன்பு இருக்கும் பேருந்தின் நீளம் அகலம் உயரம் உங்களால் உணர முடியும். அதை மீறி அங்குள்ள வெளியினை உணர முடியுமா?.. உணர முடிந்தால் நீங்கள் பத்தாம் பரிணாமத்தை உணரமுடியும்..

நீளம் - ஒரு பரிமாணம்
நீளம் ~அகலம் - இரு பரிமாணம்
நீளம் ~ அகலம் ~ உயரம் - மூன்று பரிமாணம்
நீளம் அகலம் உயரம் கணம் - நான்கு பரிமாணம்
நீளம் அகலம் காலம் உயரம் மாறுதல் - 5 பரிமாணம்
நீளம் அகலம் காலம் உயரம் மாறுதல் பயணம் வெளி புரள்வு கணம் ஈர்ப்பு - 10 வது பரிணாமம்.
0 comments:
Post a Comment