-

தமிழ் மொழியில் ங அழிந்த கதை

தமிழில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ இந்த எழுத்துக்களில் வார்த்தைகள் உண்டா?
Image result for ங word
1950 - 1960 காலங்களில் எழுதும் மடல்களில் இப்படிக்கு என்று எழுதாமல் இங்ஙனம் என்றேஎழுதுவார்கள்.

தமிழ்நாட்டில் தேங்காய் என்பதை உச்சரிக்கும் விதத்தையும் மலையாளத்தில் உச்சரிக்கும் வித்த்தையும். உற்று நோக்கினால் எவ்வாறு இந்த எழுத்துள்ள வார்த்தைகளைத் தொலைத்துள்ளோம் எனப் புரியும்

கசடதபற வல்லினம்.

ஙஞணநமன மெல்லினம்

எனப்பிரித்து குறைவான எழுத்துக்களைக் கொண்டு பல வார்த்தைகளை பல வித உச்சரிப்பு இயல்பாகவே வர வழைக்கும் அற்புதம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிச் சென்றுள்ளார்கள். அதனருமை தெரியாமல் , எழுத்து பெரும்பாலான மக்களுக்குத் தேவைப் படாத காரணத்தாலும் இவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றைய தமிழ் வல்லுனர்களும் ஒன்று கவலைப்படவில்லை அல்லது அவர்களால் இயல வில்லை.

இப்போது ங வுக்கு வருவோம்.

க வுக்குகந்த மெல்லினம் ங.

ச வுக்கந்தது ஞ

ட வுக்குகந்தது ண

த வுக்குகந்தது ந

ப வுக்குகந்தது ம

ற வுக்குகந்தது ன.

இவ்வாறிருக்க , எங்ஙனம் ங உள்ள வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது?

ச வுக்குகந்த ஞ வை சரியாக உச்சரிக்காமல், க வுக்குகந்த ங வை ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த இடத்தில் ஞ வை நுழைத்து ஞ வை ங என உச்சரித்தால் வந்த செயல்.

இப்போது ஞ வை க வுக்கந்தாகக் கொண்டு , ங வை மறந்து ,

ச வுக்குரிய ஞ வைத் தேடி அது கிடைக்காததால் புதிதாக ஜ என்ற ஒன்றை தேவையின்றிப் புகுத்தி தமிழை அழித்து வருகிறோம்.

அறிஞ்ஞவர் எனபதை அறிஞர் என எழுதி க என உச்சரிக்கிறோம்.

கலைங்ஙர் என சொல்லவேண்டியதை கலைஞர் என்று உச்சரித்துப் பழகி விட்டோம் . இதை சரியாக வாசித்தால் கலைஜர் என்று தான் வர வேண்டும். ஆனால் எழுத்து மாறி இருப்பினும் சரியாக உச்சரிக்கிறோம் . ( ஆங்கிலம் போல)

மெஞ்ஞானபுரமா? மெஜ்ஜான புரமா? மெங்ஙானபுரமா?

விஞ்ஞானமா? விங்ஙானமா? விஜ்ஜானமா?

செஞ்சோற்றுக்கடன், விஞ்ஞானம், அஞ்ஞானம், ஏன் இந்த வேறுபாடு. உச்சரிப்பு இயற்கையாக வர வேண்டும். இங்கு அனைத்தும் செயற்கை.

பஞ்சம், தஞ்சம், மஞ்சள்,வஞ்சம். நெஞ்சம் .

ஆக இயற்கையாக ச வுக்குகந்த உச்சரிப்பு இது ,

இதை க வுக்கந்தமாகவும் உச்சரிக்கிறோம்,


ஙப் போல் வளை

என்பது

மெய் எழுத்தான “ங்” என்ற எழுத்தின் உயிர்மெய் வடிவங்கள் எங்கும் பயன்பாட்டில் இல்லை. எனினும், “ங்” என்ற ஓரெழுத்து அதன் உயிர்மெய் எழுத்துக்களை காலத்தில் புதைந்துவிடாமல் காத்து வருகிறது. இந்த “ங்” எப்படி தன் வரிசையைக் காக்கிறதோ, அவ்வாறே நாமும் நம் உற்றார் உறவினர் அனைவரையும் கனிவுடன் காக்க வேண்டும்.

எனக்கு தெரிந்த வரை இந்த சொல் (ஙப் போல் வளை) உள்ளது.


இங்ங வாங்ங என்றுதான் கூப்பிடுகிறோம். எழுதும் போது இங்க வாங்க என்று எழுதுகிறோம். இது இயல்பாகத்தான் தெரிகிறது.

மஞ்சப் பையை மஞ்ஞப் பை என்றால் மலையாள வாடை அடிக்கவில்லை…

இப்போது அறியாமையால் பஞ்சு மிட்டாயை பஞ்ஜி மிட்டாய் என்றும் வஞ்ஜிர மீன் மஞ்ஜள் என்றும் எழுதுவதைப் பார்க்கத்தான் வேதனையாக இருக்கிறது.

ங அழிந்த கதை. மேலும் எழுத பொறுமை இல்லை.

0 comments: