-

தமிழனும் இந்தி திணிப்பும்


 இந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இதை உங்க நண்பன் சதீஷ் சொல்லல, ஆசிரியர் சதீஷ் சொல்றேன். அனுபவத்தில சொல்றேன்.



 பணி நிமித்தமாக தினமும் வடஇந்திய மக்களிடம் பேசிட்டு இருக்கேன். நம்மை பற்றி அவங்க பார்வை வேறுமாதிரி இருக்கு. (அவங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னன்னா திமிரும் அடக்குமுறையும் தான் மத்தபடி திறமைல நமக்கு சலைச்சவங்க இல்ல) பக்கத்து மாநிலங்கள் கூட நம்மை போல தாய்மொழிபற்று இருப்பவர்கள் தான். ஆனால் அங்கு ஹிந்தி இல்லையா? ஆங்கிலம் போல ஹிந்தியும் ஒரு மொழி. அவன் மொழியை கற்று அவனை இங்கு அரசாங்க வேலைக்கு வராமல் தடுக்கவும் நாம் அங்கு வேலைக்கு செல்லவும் இந்தி கற்பது ஒரு நல்ல யோசனை தான்.

 தமிழை வளர்ப்பேன் என்று உரக்க கத்திட்டு இருக்கற அரசியவாதிகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எல்லாம் ஹிந்தி கத்துட்டு டில்லி போய் அரசியல் பண்ணிட்டு இருக்குங்க. இங்க நம்மள வளர விடாம பண்ணியும் இருகாணுங்க. 50 வருஷத்துக்கு முன்னாடி திராவிட கட்சிகள் ஹிந்திய எதிர்தத்துக்கு அவங்க அரசியல் காரணம். இப்பவும் அதையே சொல்லிட்டு இருந்தா நம்மளை விட பெரிய முட்டாள் யாரும் இல்லை. பிற மொழிகாரன் கிட்ட போய் தமிழ் மொழியை பத்தி பெருமையா சொல்லனும்னா கூட நாம அந்த மொழியையும் கத்துகிட்டு தான சொல்லணும். தமிழன் கிட்டயே தமிழ் வாழ்கனு சொல்றது என்ன பிரயோஜனம். அடுத்தவன் கிட்ட சொல்லனும்னா அவன் மொழி எல்லாமே கத்துகிறதுனால ஒன்னும் தப்பில்லை. பிறமொழி கற்பதால் அறிவும் வளரும் அவங்களை பத்தின கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் எல்லாம் புரிஞ்சுக்க முடியும். 

  நாம அன்னைக்கு ஹிந்தி படிச்சு இருந்தா இன்னைக்கு ஹிந்திகாரான் இங்க வேலைக்கு வருவானா? நமக்கு ஹிந்திக்காரன பிடிகலனு அவன் மொழியை கத்துக்காம இருக்கிறது என்ன மாதிரி சிந்தனை. அப்போ 300 வருஷமா நம்மள நசுகிட்டு போன வெள்ளைக்காரனோட மொழியை படிச்சா மட்டும் நமக்கு பெருமைன்னு நினைக்கிறது என்ன முரண்பாடு? குண்டு சட்டில குதிரை ஓட்டுறதை பெருமையா பேசுறது நம்ம தமிழினம் மட்டும் தான். 50 வருஷத்துக்கு முன்னாடி இருந்த கல்வியறிவு கம்மி ஆனா இப்போ அப்படி இல்லை, இருந்தாலும் நிறைய படிப்பறிவு இருந்தும் கூட தமிழனால வடக்கே போய் ஜொலிக்க முடில பாருங்க. அவன் எதிர்ல போய் அவன் மொழியை கத்துகிட்டு அவன் மொழில அவனுக்கு பதில் சொல்றது தான் நம் திறமை. 

  மலையாளம் தெரிஞ்சா கேரளா மட்டும் தான், கன்னடா தெரிஞ்சா கர்நாடகா மட்டும் தான், பஞ்சாபி தெரிஞ்சா பஞ்சாப் மட்டும் தான், தமிழ் தெரிஞ்சா உன் பெருமை இங்க மட்டும் தான், ஆனா எல்லா மாநிலமும் ஹிந்தி தெரிஞ்சு வச்சுறுகாணுங்க. அவங்க எந்த மாநிலம் போனாலும் பிழைக்க தெரிஞ்சுக்குவங்க, நாமளும் தான். அவ்ளோ ஏன், நம்ம ஊர்ல பாருங்க எல்லா மொழிகாரனும் பிழைக்கறான் ஏன்னா இங்க இருக்கற அவன் மொழிகாரன் அவனுக்கு ஆதரவு தந்து வளர்த்து விடுறான். ஆனா தமிழன்? தமிழனுக்கு தமிழன் தான் எதிரினு ஒரு வாய்மொழி சொல்லே இருக்கே. நம்ம தலைமுறை தான் அவங்க அரசியலால் நாசமா போச்சு, நம்ம பிள்ளைகளாச்சும் அதிகமான பிற மொழிகளை கற்று கொள்ளட்டும். என்னைய பொறுத்த வரை ஹிந்தி மட்டும் இல்ல, நம் குழந்தைகள் திறமைக்கு ஏற்ற மாதிரி எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் பேச எழுத படிக்க வைப்போம். எங்க போனாலும் என்ன கத்துகிட்டாலும் நம் தமிழன் என்கிற அடையாளம் மாறபோவதில்லை. பிறமொழி திறமை இருந்தால் மட்டுமே உலகை பார்க்க முடியும். 

பாரதியார் கூட தான் தமிழ்மொழில மட்டும் பாடினார் எழுதினார், ஆனா அவருக்கு எத்தனை மொழிகள் தெரியும்னு யாருக்காச்சும் தெரியுமா? அவர் என்ன ஹிந்தியவா வளர்த்தார்? இல்ல பிரெஞ்சு மொழியவா?  முட்டாள்தனமா கத்துரத விட்டுட்டு கொஞ்சம் முற்போக்குதனமா சிந்திப்போம். பல 100  வருஷத்துக்கு முன்னாடி கூட பல மொழிகளை கத்துகிட்டு உலகம் பூராவும் போய் தமிழை பற்றி பெருமையா சொல்லி தமிழ் வளர்த்தார்கள். இடையில வந்த அரசியல்வியாதிகளால்  தான் நமக்கு நோய் வந்துவிட்டது.

  மற்ற மாநிலங்களில் ஹிந்தி மட்டும் அல்ல, தமிழ் மற்றும் இன்ன பிற மொழிகளும் இடம் பெரும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதற்கான ஆய்வறிக்கை மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது..

 நின்ற இடத்திலேயே சிந்திப்பதை விட்டுட்டு சிந்தனையையும் கண்களையும் கொஞ்சம் அகல விரித்து உலகை பாருங்கள். உலகை உங்கள் கண்களால் பாருங்கள் அப்போது தான் உண்மை புரியும். பிரபலமான ஒருவர்  சொன்னது போல நம் தாய்மொழி நம் வீட்டின் நுழைவாயில், பிறமொழிகள் யாவும் ஜன்னல் போல. எத்தனை ஜன்னல் இருந்தாலும் நாம் சுவாசிக்க நல்ல காற்று வரும் தப்பில்லை, ஆனால் நுழைவாயில் எப்போதும் ஒன்றுதான்.  அதுபோலத்தான் பிற மொழிகொள்கையும். எத்தனை மொழி கற்றாலும் நமக்கு சிந்தனை தமிழ்ல தான வரும்? பிறமொழி மோகம் தான் தப்பு, தமிழ் மொழிபற்றை உள்ளே வச்சுக்கிட்டு பிறமொழி கத்துக்கற மணபக்குவதையும் வளர்த்துக்கறது தப்பில்லை, அந்த மணபக்குவதை முதலில் வளர்த்துக்கொள்வோம். உங்க அரசியல் கட்சி தலைவனுக்காக பேசுரத விட்டுட்டு உங்க பிள்ளையின் எதிர்காலத்தை மனசுல நினைச்சுட்டு இனிமே தெளிவா சிந்திக்கனும். 

சிந்தித்து செயல்படுவோம். 


 நன்றி🌱🌾☔🌴🌳


0 comments: