-

டிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது?

டிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutter) திறக்கப்படுகிறது.அங்கே உள்ள துவாரத்தின்-aperture -ஊடாக ஒளிக்கதிர்கள்.பிம்பங்கள் வில்லையினூடாக-lens- உள்ளே செல்கிறது.இதுவரைக்கும் இரண்டு நிழற்படக்கருவிகளும் ஒன்று போல் செயல்படுகிறது.


சாதாரணக் காமெராவில் இந்த ஒளிக்கதிர்கள் படச்சுருளில் -film- விழுகிறது.டிஜிட்டல் காமெராக்களில் இந்த சுருள் இல்லாததால், ஒளிக்கதிர்கள் CCD க்குச் சென்று, மின் காந்தக் குறிகளாக-electrical signals- (அனலொக்-டிஜிட்டல்)மாற்றப்படுகிறது. இப்படி மாற்றும் கருவி -light detector-charge-coupled device (CCD) எனச் சொல்லப்படுகிறது.

Enlarge this image


சில காமெராக்களில் இந்த ccd க்குப் பதில் Complimentary Metal Oxide Semiconductor (CMOS) என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.இரண்டுமே ஒரே வேலையை செய்கிறது.


படம் பிடிக்கும் போது வெளியில் இருந்து வரும் பிம்ப -picture-ஒளிக்கதிர்கள் CCD ஐ அடையும் போது,CCD அவற்றை பல மில்லியன் பிக்சல்களை உருவாக்கும்.ஒவ்வொரு பிக்சல்களின் color and brightness அளவீடு செய்து,அவற்றை இலக்கங்களாக compression முறையில்(உதாரணமாக jpg-J-PEG-Joint Photographic Experts Group )  மாற்றி சேமிப்பதால், குறைந்த இடத்திலும் சேமிக்க முடிகிறது..
இப்படி மாற்றப்பட்ட தொகுதி இலக்கங்கள் கொண்ட படத்தை,கணினி,கைத்தொலைபேசி,சிம்காட் போன்ற வேறு எந்த இடத்தில் சேமிக்க,அல்லது கருவிகளுடனும் USB இணைப்பின் மூலம் சேமிக்கப்பட, எடிட்,பிரிண்ட் செய்ய கொண்டு செல்லலாம்.கூடிய மெகபிக்சல்கள் கொண்ட காமராக்கள் மூலம் எடுக்கும் படங்கள் பெரிதாக்கும் பொழுதும் தரம் குறையாதிருக்கும்.

கணினியில் சாதாரண படம் ஒன்றைப் பெரிதாக்கும் போது,கட்டங்களாக அல்லது புள்ளிகள் போல் வருவதைக் காணலாம்.இதற்குக் காரணம் குறைந்த எண்ணிக்கையுடைய பிக்சல்களாகும்.

டிஜிட்டல் காமெராக்களில் உள்ள சில வில்லைகள் உள்ளும் வெளியேயும் அசைந்து (optical zoom) படங்களை சிறிதாக்கி அல்லது பெரிதாக்கி CCD க்கு கொடுக்கிறது. இப்படிப் பல சிறப்பான அம்சங்களை பணத்திற்கேற்ப தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள்.
இவை அடிப்படைச் செயற்பாடுகளாகும்.CCTV,Webcam, மோபைல் காமெராக்களும் இதன் அடிப்படையிலேயே செயற்படுகிறது.

256x256 – என்பது 65,000 pixels மிகக் குறைந்த விலையிலான,தரத்தில் குறைந்த காமெராவாகும்.இதில் எடுக்கப்படும் சிறந்ததாக இருக்காது.
640x480 – இந்த காமெரா மினஞ்சல்,படங்களை எடுத்து இணையப்பக்கங்களுக்கு அனுப்புவது போன்றவற்றுக்குச் சிறந்தது.
1216x912 - 1,109,000  pixels  கொண்ட megapixel காமெராவாகும்.இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் பிரிண்ட் செய்வதற்கு உகந்ததாகும்.
1600x1200 -  2  மில்லியன் pixels கொண்ட உயர்ரக காமெராவாகச் சொல்லலாம்.  4x5 அங்குல பிரிண்ட் செய்யும் போது தரம் குறையாதிருக்கும்.
2240x1680 - 4 megapixel cameras – 16x20 அங்குல அளவில் பிரிண்ட் செய்யும் போதும் தரம் குறையாமல் இருக்கும்.
4064x2704 - 11.1 megapixels  இதில் எடுகப்படும் படங்கள் பெரிய அளவில் பிரிண்ட் செய்யும் போதும் தரம் குறையாமல் இருக்கும்.
இதைவிட  12 million pixels, 16 million pixels, 20 million pixels காமெராக்கள் மிகச் சிறந்த தரத்தில் உய்ர்ந்ததாக இருக்கும்.

0 comments: