அவருடைய மந்திர சக்தி நாம் மிரண்டு போகிற இடியும் மழையும். வறட்சி அதிகமாகிற போது தானாகவே மழை பெயும்படி பூமியின் இயற்கை அமைப்பையே மாற்றம் செய்தார். அவருடைய அசாத்திய சக்தி அதுமட்டும் இல்லை, இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அவருடைய முரட்டு சுத்தியல். அதை தோர் நல்ல விதமாகவே பயன் படுத்தினார். இன்றும் அவரை கடவுளாக வழிபாடும் சமூகம் இருக்கிறது. இப்போது Avengers படத்தின் முக்கிய பாத்திரமாகவும் இருக்கிறார். :-)
30 நாட்களில் 3 முறையாவது மழை பேயும் படி பார்த்து கொண்டார். அதை தான் நம் முன்னோர்கள் மாதம் மும்மாரி பேயும் மழை என்று சொன்னார்கள். வாரத்தில் ஒருநாள் அவர் நினைவாக இருக்கும்படி பார்த்து கொண்டார்கள். அந்த நாள் Thor's day என்பது தான். அதுவே பின்னாளில் Thursday ஆனது. அந்த அற்புதமான வியாழன் இன்று.

0 comments:
Post a Comment