-

தெரிந்து கொள்ள சில கேள்வி பதில்கள்

+++Jimmy Doolittle,On September 25, 1929, முதலில் விமானம் பறக்க மனிதக் கண்கள் தேவையற்றது எனக் கண்டார்.இது தான் இன்று யுத்தத்திற்கு ஆளீல்லா விமனங்களை பயன்படுத்த காரணமாயிற்று. blind" flight.

+++Elusive element என்பது நாம் பள்ளியில் படித்ததுதான். 1940 ல் முதல் தனிமத்தைக் கண்டு பிடித்தனர். தற்போது ஜப்பானிய ஆய்வாளர்கள் 113 வதைக் கண்டு பிடித்துள்ளனர். ஒரு அற்றம்.atom, 113 ப்ரொடொன் களைக் கொண்டிருக்கும்.இதற்கு அவர்களே பெய ர்வைக்க இருக்கிறார்கள்.இத்துடன் மொத்தம் 119. ununoctium. -118 வது.RIKEN Nishina Center for Accelerator-Based Science in Japan said today (Sept. 26) ஒன்று தெரியுமா? இதன் ஆயுட்காலம் ஒருசில மணிகளே.
???அல்பர்ட் ஐன்ஸ்டயின் புதிரின் முடிவில்,நான்கு தலைகள் கைவிரலை மேல் நோக்கி காட்டியது ஏன்?
எனக்கு தெரியாது.


சில கேள்விகள்.....................
???DRACO என்றால் என்ன தெரியுமா?
??? Astrolabe ஐக் கண்டு பிடித்தவர் யார்? முதலில் அது என்ன?
??? உலகின் அதி சிறிய குரங்கு என்ன நீளம் உடையது?
??? பெற்றோல் நிலையத்தில் இருந்து கைத்தொலைபேசியில் பேசினால் வெடிக்குமா?
???ஒருவர் ஒரு இடத்தில் நின்றபடி காலை வளைக்காது நிலத்தில் உள்ள பொருளை எடுக்க முடியும்.ஆனால் அவர் சுவரின் முன் நின்று அதாவது சுவருடன் சேர்ந்து நிந்று காலை மடக்காது ஒரு பொருளை எடுக்க முடியுமா?
??? ஒரு கடதாசியை எத்தனை முறை மடிக்க முடியும்?
??? அடுப்பு ஊதும் போது எரிகிறது,மெழுகுதிரியை,விளக்கை ஊதும் போது அணைகிறது ஏன்?
??? ஐஸ் நடனம் ஆடுகிறார்களே,அந்த தரை எத்தனை டிகிரி வெப்ப நிலையில் இருந்தால் ஆட முடியும்?
??? எப்படி தீ மிதிக்கிறார்கள்?
??? Mathematics என்ற சொல்லுக்கு கணிதம் என நாம் சொல்லுவோம்.ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?
???ஒரு பொருளைத் தொடும் போது குளிருகிறது ஏன்?

பதில்கள்.....................
DRACO என்றால் என்ன தெரியுமா?
புதிய ஒரு வைரஸ் அழிப்பு முறையை கண்டு பிடித்துள்ளார்கள். அதன்படி இந்த முறையில் வைரசால் தாக்கப்பட்ட செல் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுடன், அந்த வைரசும் சேர்ந்து அழிந்து போகும்.ஆனாலும் இந்த ஆய்வு செயலுக்கு வர சில ஆண்டுகள் ஆகும்.

??? Astrolabe ஐக் கண்டு பிடித்தவர் யார்? முதலில் அது என்ன?
வானவியல் ஆய்வாளர்களும் சோதிடர்களும் இதைக் கொண்டு கிரகங்கள் இருக்கும் இடங்களையும் அளவுகளையும் கண்டு கொள்ள பயன்படுத்துகிறார்கள்.ஆதியில் இஸ்லாமியர்கள் சாலா பிரார்த்தனை நேரங்களைக் கண்டு கொள்ளவும் பாவித்தனர். எகிப்தில் கணிதவியல் கற்பித்துக் கொண்டிருந்த Hypatia of Alexandria என்ற பெண்ணே முதலில் உருவாக்கினார்.380 ஆண்டளவில்.

??? உலகின் அதி சிறிய குரங்கு என்ன நீளம் உடையது?
அமேசன் காடுகளில் உள்ள குரங்கினம் 15 சென்டிமீற்றர் மட்டுமே நீளமுடையது.

??? பெற்றோல் நிலையத்தில் இருந்து கைத்தொலைபேசியில் பேசினால் வெடிக்குமா?
இல்லை.ஆனால் இரண்டு பொருட்கள் உராய்வினால் ஏற்படலாம்.

???ஒருவர் ஒரு இடத்தில் நின்றபடி காலை வளைக்காது நிலத்தில் உள்ள பொருளை எடுக்க முடியும்.ஆனால் அவர் சுவரின் முன் நின்று அதாவது சுவருடன் சேர்ந்து நிந்று காலை மடக்காது ஒரு பொருளை எடுக்க முடியுமா? உலகில் எத்தனை வீதத்தினர் இதை செய்ய முடியும்? 0 %

??? ஒரு கடதாசியை எத்தனை முறை மடிக்க முடியும்?
7 முறை,ஆனாலும் சிறிது பெரிதாக இருப்பின் 8 முறையும்,அதைவிட பெரிதாவும் மெல்லியதாக இருப்பின் 11 1/2
முறையும் மடிக்கலாம்.

??? அடுப்பு ஊதும் போது எரிகிறது,மெழுகுதிரியை,விளக்கை ஊதும் போது அணைகிறது ஏன்?
ஊதும் போது அடுப்பு எரிய தேவையான ஆக்சிஜின் வாயு கிடைப்பதால் எரிகிறது.மெழுகுதிரியில் எரிவதற்குரிய மெழுகு ஆவியின் தொடர்பு அற்றுப் போவதால் அணைகிறது.

??? ஐஸ் நடனம் ஆடுகிறார்களே,அந்த தரை எத்தனை டிகிரி வெப்ப நிலையில் இருந்தால் ஆட முடியும்?
0 டிகிரி செல்சியுஸ். அப்போது தான் அந்த ஐஸ் கரந்து கொண்டிருக்கும். 0 பாகைக்கு கீழே செல்லுமானால் கரையாது இருக்கும் போது ஓடவோ,ஆடவோ முடியாது.

??? எப்படி தீ மிதிக்கிறார்கள்?
அறிவியல் முடிவின்படி,தண்ணீரில் குளித்த பின் உடனே தீயில் இறங்கினால்,அந்த சூட்டில் உருவாகும் தண்ணீர் ஆவி ஒரு சில வினாடிகளுக்கு உடலைக் சுற்றி பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்தும்.அந்த சில வினாடிகளில் வேகமாக தீயில் நடந்து சென்றுவிட வேண்டும்.இதை தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் செய்து காட்டினார். அவர் செய்தது, ஒரு கொதிக்கும் அலுமினிய குழம்பினுள் தன் கைகளை தண்ணீரால் கழுவி விட்டு, உடனே கைகளை அந்த கொதிக்கும் குழம்பினுள் அமிழ்த்தி உடன் வேகமாக வெளியே எடுத்துக் காட்டினார். நாம் எரியும் விளக்கு தீபத்தில் வேகமாக கை விரலை அசைக்கும் போது நமக்கு சூடு தெரிவதில்லை.இது போன்றதே. இதில் ஆன்மீகம் எதுவுமில்லை.

??? Mathematics என்ற சொல்லுக்கு கணிதம் என நாம் சொல்லுவோம்.ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?
இது கிரேக்க சொல்.இதன் பொருள், தெரிந்து கொள்வது,கற்றுக் கொள்வது என்பதாகும்.

???ஒரு பொருளைத் தொடும் போது குளிருகிறது ஏன்?
எமது உடலில் இருக்கும் உஸ்னம் அதிகமாக இருந்து பொருளின் உஸ்னம் குறைவாக இருப்பின்,நமது உடலில் இருந்து உஸ்னம் பொருளுக்கு கடத்தப்படுகிறது.அதனால் குளிருகிறது. இந்த நிலை எதிர்மாறாக அதாவது குறைந்த உஸ்னத்தில் இருந்து கூடிய உஸ்னத்திற்கு செல்ல முடிவதில்லை.

தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டவையில் சில...........................

???Saccharin என்ற இனிப்புப் பொருள் சர்க்கரை நோயாளிகள் பாவிப்பது Constantin Fahlberg என்பவரால் தற்செயலாக,1879 ல் கண்டுபிடிக்கப்பட்டது.தனது ஆய்கூடத்தில் ஏற்பட்ட கறையை கழுவ முடியாது சிரமப்பட்ட போது தற்செயலாக இனிப்பாக இருந்ததைத் தொடர்ந்து உருவானது.

???Jamie Link, University of California, San Diego,இராசயண ஆய்வுகூடத்தில் இருந்த போது உடைந்த சிலிகோன் துகள்கள் -smart dust - தான் கடல் நீரை சுத்தப்படுத்தும் போது பாவிக்கப்படும் சென்சொர்,sensor, ஆக உருவெடுத்தது.இது வேறு பலவற்றுக்கு இன்று பயன்படுகிறது.

???coke எனப்படும் கோலா பானத்தை Atlanta pharmacist John Stith Pemberton ,தலைவலிக்காக மருந்து தயாரிக்கும் போது ஏற்பட்டதுதான் இந்த கலவையாகும்.பல பொருட்களை சேர்த்து உருவாக்கப்பட்ட இது இன்றும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.மே 8 1886 ல் Jacob's Pharmacy ல் 5 சத்திதிற்கு ஆரோக்கிய பானம் என கூறி விளம்பரப்படுத்தினார்.பெயர் -coca leaf and the kola nut ல் இருந்து பெயர் உருவானது.

???1907 ல் இராசயணவியலாளர் Leo Hendrik Baekeland ஆல் தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டது தான் பிளாஸ்டிக் ஆகும்.

???1896 ல் பௌதீகவியலாளர் Henri Becquerel தற்செயலாக கண்டு பிடித்ததுதான் கதிர்வீச்சாகும்.குளிர் கால ஆய்வுகளை முடித்து விட்டு,கோடைகால ஆய்வுக்காக எல்லா பொருட்களையும் வைத்து விட்டு திரும்பி வந்த போதுதான் அதைக் கண்டார்.

???விடுமுறையில் சென்ற Alexander Fleming 1928 ல் திரும்பிய போது தற்செயலாக அங்கே அவர் கண்டதுதான் பென்சிலின் ஆகும்.

0 comments: