-

நாளந்தா பல்கலைக்கழகம் மறைக்கப்பட்ட வரலாறு

 
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம்

மனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த மதமானது, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவின் சிந்து, வங்காளம் போன்ற பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்தது.


ஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)

தங்களுக்கு எதிரான அத்தனை மத நம்பிக்கைகளையும் வன்முறை மூலம் அழித்தொழிக்கும் செயலை தங்களின் அடிப்படை மதக் கடமையாகக் கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னால் பௌத்தம் பேரழிவைச் சந்தித்தது. ஆம்; இஸ்லாம் பரவிய வழிகளில் இருந்த பௌத்தம் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டது.

இஸ்லாமிய வரலாற்றிசிரியரான அல்-புரூனி இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1203-ஆம் வருடம் இந்தியாவின் பிகார் பகுதியிலிருந்த பௌத்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட பக்தியார் கில்ஜியைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு இஸ்லாமிய வரலாற்றிசிரியரான இப்ன்-அசிர், “எதிரிகள் அறியாதவண்ணம் திடீர்த் தாக்குதலை மேற்கொண்ட முகமது பக்தியார், மிகுந்த வேகத்துடனும், துணிவுடனும் கோட்டை வாயிலை அடைந்து, பின்னர் எதிரிகளின் கோட்டையைக் கைப்பற்றினான். அதனைத் தொடர்ந்து அளவற்ற செல்வத்தை வெற்றி கொண்ட இஸ்லாமியப் படை கைப்பற்றியது. அந்தக் கோட்டையில் வசித்தவர்களில் பெரும்பாலோர் மொட்டைத்தலைகளை உடைய பிராமணர்கள் (உண்மையில் அவர்கள் பௌத்த பிட்சுகள்). அவர்கள் அத்தனை பேரும் வாளுக்கு உடனடியாக இரையாக்கப்பட்டார்கள்.”

அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தினை அடைந்த பக்தியார் கில்ஜி “ஏராளமான புத்தகங்களைக் கண்டான்” எனக் குறிப்பிடுகிறார் இப்ன்-அசிர். பக்தியார் கில்ஜி பௌத்த பிட்சுகளின் மீது செலுத்திய ஈவு, இரக்கமற்ற படுகொலைகள் காரணமாக அங்கிருந்த புத்தகங்கள் என்ன மாதிரியானவை என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் கிட்டவில்லை எனப் பூரிக்கும் இப்ன்-அசிர், “அங்கிருந்த அத்தனை பிராமணர்களும் (பௌத்த பிட்சுகள்) கொல்லப்பட்டிருந்தார்கள்”

உலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட மிகப் பெரும் நூலகம் என்பதனைக் கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மிகப் பெரும் அவலம்தான். அங்கிருந்த புத்தகங்களில் எதுவும் குரான் இல்லை என்பதனை அறிந்துகொண்ட பக்தியார் கில்ஜி, பின்னர் அத்தனை புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான். கௌதம புத்தரின் காலம்தொட்டு பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வமான புத்தகங்கள் மூடர்களின் கண்மூடித்தனமான மதவெறியால் எரிந்து சாம்பலாகின.

0 comments: