-

இலக்குகள் மீது முழு கவனம் - Focus on target


நீங்கள் உறங்கப்போகும் முன்பும் காலையில் எழுந்த பின்பும் உங்கள் இலக்கை அடைந்த பின் எப்படி உணர்வீர்கள்? உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? உங்கள் வாழ்க்கை தரம் எப்படி மாறும்? உங்களை பற்றி இழிவாய் பேசியவர்கள் அப்போது என்ன பேசிக்கொள்வார்கள்? என மனதில் காட்சிப்படுத்துங்கள்(Visualization). இது உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க தேவையான உத்வேகத்தை கொடுக்கும்.

தினமும் கவனச்சிதறல்(Distraction) இல்லாத 1 மணி நேரம் உங்கள் இலக்குக்காக ஒதுக்குங்கள். இந்த ஒரு மணி நேரத்தில் உங்கள் கவனத்தை சிதைக்கக்கூடிய எதற்கும் நீங்கள் இடம் கொடுக்க கூடாது. 1 மணி நேரம் என்பது உங்கள் இலக்குக்கு குறைவான நேரமாக தெரியலாம். ஆனால் கவனச்சிதறல் இல்லாத 1 மணி நேரம், 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்கள் அன்றாட வாழ்வில் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும், தினமும் இந்த நேரத்தை உங்கள் இலக்குக்காக செலவிடுவதை தவிர்க்காதீர்கள். மற்றவர்களுக்கு "யார்ரா இவன், இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துட்டு இருக்கு ஒருத்தன் உக்காந்து மிக்ஸ்சர் சாப்டுட்டு இருக்கான்" என்பது போல தான் தோன்றும். பரவாயில்லை, ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு இந்த மனிதரை போல.

உங்கள் இலக்கை அடைய 5 வருடங்கள் ஆகும் என்றால், அதை சிறிய இலக்குகளாக(Short Term Goals) பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு நாளுக்கான, ஒரு வாரத்திற்கான, ஒரு மாதத்திற்கான, ஒரு வருடத்திற்கான சிறிய சிறிய இலக்குகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். அந்த நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தீர்களோ, அதை செய்து முடித்தவுடன், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். இது பெரிய இலக்கின் நினைவுகளில் உங்களை மூழ்கடிக்காமல்(Overwhelming) பார்த்துக்கொள்ளும்.

கடைசியில், உங்கள் இலக்கை எவ்வளவு தீவிரமாக(Desperately) அடைய விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தே இலக்கின் மீது உங்கள் கவனம் அமையும்.

நீங்கள் தீவிரமாக ஒரு இலக்கை அடைய ஆசைப்படுகிறீர்கள் என்றால், முழு கவனமாக அதை நோக்கி எப்படி பயணிப்பது என்பதை நீங்களே ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். கோராவில் கேள்வி கேட்டு அதில் வரும் பதில்களை வைத்து நீங்கள் இலக்கை அடைய முயற்சிப்பீர்கள் என்றால், உங்கள் இலக்கை அடைவது கடினம்.

இதற்கு ஒரு கதை மூலம் தான் கூறமுடியும்.

ஒரு முறை சத்ரபதி சிவாஜி சிறுவயதில் தனக்கான நாட்டை அமைப்பதற்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போதும் ஒரு முயற்சி எடுத்து அதில் தோற்றுவிட்டு தலைமறைவாக இருந்த போது ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி வீட்டில் சாப்பிடும் சூழ்நிலையில் மிகவும் சூடான உணவை நடுவில் தொட்டு விட்டு சூடு தாங்காமல் கையை உதறிய போது அந்த பாட்டி கூறுவார்,"என்னப்பா எங்கள் மன்னன் சிவாஜி போல் அல்லவா செயல்படுகிறாய்.சூடான உணவை ஓரத்தில் இருந்தல்ல வா உண்ண ஆரம்பிக்கவேண்டும்.அப்போதுதான் சூடு குறைய குறைய உண்ணமுடியும்.

நாட்டை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் பக்கத்தில் உள்ள நாடுகளில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.சிறுசிறு நாடுகளை ஆக்ரமித்து பின்னர் தான் கோட்டையைப்பிடிக்கமுடியும்.எடுத்தவுடன் கோட்டையில் கைவைத்தால் எப்படி?என்று பாட்டி கூறியதால்.

அப்போது தான் சிவாஜிக்கு தன்னுடைய முயற்சி யின் தோல்வியின் காரணம் புரிந்ததாம்.

இந்த பாட்டியின் பதில்தான் உங்களுக்கும்.

உங்கள் கேள்வி இரண்டு எதிர் எதிர் முனைகளைக் கொண்டுள்ளது.

  1. எனது இலக்கை அடைய முடியா விட்டால், ஏன் வாழ வேண்டும்? இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிறக்கிறார்கள். அடைய முடியாமல் போகும் இலக்கிற்காக நீங்கள் உயிரை விடுவதை விட, அடையக்கூடிய இலக்கை அமைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவதே ஆகச் சிறந்த செயல்.
  2. சரியான திட்டமிடல், விடா முயற்சி, தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், இறை நம்பிக்கை, தியானம், நல்ல நிலையில் மனதையும் உடலையும் பயிற்சி மூலம் வைத்தல், மூத்தவர் அறிவுரை/ஆலோசனை கேட்டு நடத்தல், வேலை நேரத்தில் வேலை, மற்ற நேரத்தில் மற்றது என்பதில் மன உறுதியுடன் செயல்படுதல், மன அழுத்தம்/உளைச்சலை எக்காரணம் கொண்டும் அனுமதியாது வேறு பயனுள்ள வழியில் மனதைச் செலுத்துதல், குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் தரம் மிக்க நேரத்தை செலவு செய்தல், முன் யோசனையோடு பணம் மற்றும் பொருட்கள் செலவிடுதல், எந்த முக்கியமான முடிவுகள் எடுத்தாலும் ஒன்றுக்கு பத்து அல்லது நூறு முறை யோசித்து செயல்படுத்துதல்: இவைகள் எல்லாம் உங்கள் இலக்கை நீங்கள் அடைய 100 சதமானம் உதவியாக இருக்கும்.


0 comments: