-

சீசர் ஒரு பக்க வரலாறு

டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு அல்லது முதலாம் குளோடியசு (ஆகஸ்ட் 1, கிமு 10– அக்டோபர் 13, கிபி 54) என்பவன் நான்காவது ரோமப் பேரரசன். இவன் ஜனவரி 24, கிபி 41 முதல் இறக்கும் வரை கிபி 54 வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய பிரான்சில் பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன்.அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. பிரித்தானியாவைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

2 comments:

Advocate P.R.Jayarajan said...

//நான்காவது மனைவியால் கொல்லப்பட்டான்.//
சாதனை படைத்த ஆண்களுக்கு பெண்கள் பலமாக நின்றிருக்கிறார்கள். ஆனால் பல்வேறு ஆண்களின் சாதனைகள் பெண்களால், மனைவிகளால் முடிவுக்கும் வந்துள்ளது. அதற்கு இவர் சாட்சி.

bandhu said...

ஒரு பக்க வரலாறு என்று ஒரு பாரா வரலாறாக சுருக்கி விட்டீர்களே! (இந்த அளவு வரலாறு கூட எனக்கு தெரியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்!)