-

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.

படைப்புகள்

  • எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் (புதினம்)
  • கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
  • கலகம் காதல் இசை (கட்டுரை)
  • கோணல் பக்கங்கள் - (பாகங்கள் 1,2,3) (பத்திகள்)
  • சீரோ டிகிரி (புதினம்)
  • தப்புத் தாளங்கள் (பத்திகள்)
  • நேநோ (சிறுகதை)
  • ராஸ லீலா (புதினம்)
  • எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
  • ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (சிறுகதைத்தொகுப்பு)
  • கடவுளும் நானும்
  • சரசம், சல்லாபம், சாமியார்
  • ஆஸாதி ஆஸாதி ஆஸாதி
  • சினிமா சினிமா
  • காமரூப கதைகள்
  • மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
  • மூடுபனிச்சாலை
  • தீராக்காதலி
  • திசை அறியும் பறவைகள்
  • தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
  • ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
  • சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
  • கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
  • கலையும் காமமும் - விவாதங்கள்
  • மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
  • கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்
 வெளி இணைப்புக்கள்
Enhanced by Zemanta

0 comments: