-

சில கேள்விகள் சில விளக்கங்கள்

பொதுவா தேர்தல் வந்தாலே நமக்கு எப்பவும் ஒரு குழப்பம் இருந்துட்டே இருக்கும். இந்த முறை யாருக்கு ஒட்டு போடலாம், யாருக்கு போட வேண்டாம்னு மனசுக்குள்ளே ஒரு பட்டி மன்றமே நடத்துவோம். ஆனால் இந்த முறை அந்த குழப்பமே இல்லாமல் மக்கள் வாக்களித்து இருகிறார்கள் என்பது நேற்று தெளிவானது. என்னமோ ஜெயலலிதா மீது மக்களுக்கு திடீர்னு பாசம் வந்துருச்சுன்னு யாரும் நினைக்க போறதில்ல. கண்டிப்பா எல்லோருக்கும் தெரியும், அந்த தமிழின துரோகியை வீட்டுக்கு அனுப்பிடுவோம் என்று. எனக்கு அப்பவே பட்சி சொல்லுச்சு, நிச்சயம் காட்சிகள் மாறும்னு.

இந்த நல்ல சந்தர்பத்தை பயன் படுத்தி அம்மா நல்லாட்சி செய்தால் மட்டுமே மக்கள் இனி நல்ல எதிர்காலத்தை மக்கள் பார்க்க முடியும். ஒன்றரை வருடங்களில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவேன்னு சொல்கிறார். பார்ப்போம். பழைய படி ஆணவத்தில் ஆடாமல் இருந்தால் அதுவே போதும். மற்றபடி அம்மாவின் ஆட்சியில் எப்போதும் மக்களுக்கு பாதிப்பு வர போவதில்லை.

சென்ற முறை அரசு அதிகாரிகளை பகைத்து கொண்டதின் விளைவை கடந்த தேர்தலில் அனுபவித்தார் அம்மா. இந்த முறை திருப்பி தருவாரா அல்லது மன்னித்துவிடுவாரா என்று தெரியவில்லை.

வடிவேலுவுக்கு ஆப்பு உறுதி. விஜயகாந்த் மனசு வச்சா பொழசிக்கலாம். கனிமொழி கலி தின்பதும் உறுதி. அது காங்கிரஸ் மனசு வச்சா நடக்கும்.இப்படி ஒரு அவமானத்தை கலைஞர் தன்னுடைய வாழ்கையில் பார்த்து இருக்கவே மாட்டார். கடைசி காலத்தில் இதெல்லாம் தேவையா பெருசு.உங்களை ஒழிக்க தமிழ்நாட்டு அம்மா தேவையே இல்லை, இந்த முறை இத்தாலி அம்மா இருக்கிறார். நீங்கள் கிள்ளு கீரையாய் நினைத்த சீமான் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார் பார்த்தீர்களா?

ஆடாத ஆட்டமென்ன, எழுதாத வசனமென்ன, எத்தனை அறிக்கை, எத்தனை முறை 'கடுதாசி எழுதியிருக்கேன்' வசனம், பணம்,பதவி,ஆர்பாட்டம், கேவலமான அரசியல், கட்டு மரமாக மிதப்பேன் என்று பன்ச்சு டையலாக், ஐந்தாண்டு ஆட்சி காலத்தின் கடைசியில் கூட  'இதற்கெல்லாம் ஆ.தி.மு.க தான் காரணம்' என்று மக்களை ஏமாற்றுவது, பதவியை பெற்ற மகனுக்கு கூட விட்டு தர முன் வராதது, தொடர் மின்வெட்டு இருந்தும் ஆற்காட்டார் "தமிழ் நாட்டில் மின்வெட்டே இல்லை" என பிதற்றியது, இனி இந்த கருமத்தை எல்லாம் கேட்கும் நிலையை நாங்களே மாற்றி கொண்டோம் கருணாநிதி அவர்களே.

அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற பெருந்தலைவர்கள் வளர்த்த கட்சி வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பித்தான் பிரசாரம் செய்ய வேண்டுமா. ஏன் இவ்வளவு கீழ்த்தரமான முடிவுகளை எடுக்குறீர்கள்.

"என் மொழி பேசும் இனம் அங்கே அழிகிறதே உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லையா, இதோ நான் சாகிறேன் பாருங்கள் இப்படிதான் அங்கே தமிழ் மக்கள் துடித்து துடித்து சாகிறார்கள்" என்று முத்துகுமரன் எரிந்து விழுந்த பொது கொஞ்சமும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் "அய்யகோ, இனி என்ன செய்வேன்"என்று நீங்கள் பேசிய பொது எத்தனை தமிழ்நாட்டு நெஞ்சங்கள் எரிந்தது என்று உங்களுக்கு தெரியுமா. இலங்கை பிரச்சனை தேர்தலில் பாதிக்காது என்று நீங்களும் உங்கள் கட்சி சில்லறைகளும் தினம் தினம் மீடியாக்களில் பினாத்தி கொண்டு இருந்த போது, எங்கள் நெஞ்சம் எப்படி வெந்தது என்று உங்களுக்கு தெரியுமா. தமிழகத்தில் முத்துகுமரனுக்கு சிலை வைப்பதில் கூட அரசியல் செய்த தானயதலைவன் தானே நீங்கள்.

அங்கே ஒரு இனம் அழிந்து கொண்டு இருக்கும் போது தன்னுடைய குடும்பம் தான் முக்கியம் என்று பதிவிக்கு பிச்சைஎடுக்க நீங்கள் விமானம் ஏறி பறந்த போது, அதே நாளில் இலங்கையில் எத்தனை உயிர்கள் பலியானது என்று மறந்தீர்களா. ஆனால் நாங்கள் மறக்க வில்லை. உங்கள் மகளுக்கு அங்கே பதிவி கிடைக்க வில்லை என்ற போதும் சிறுபிள்ளையை போல் கோபித்து கொண்டு திரும்பி ஓடி வந்தீர்களே, அப்போது தமிழ்நாட்டில் என்ன பிரச்சனை தலை தூக்கி இருந்தது என்று தெரியுமா? ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. நியாயம் கேட்க ஒரு பிரிவினர் போராடி கொண்டு இருந்தார்கள். நீங்களோ பத்திரிகையிலும் உங்கள் தொலைகாட்சியிலும் சோனியா காந்தியின் முகத்திரையை கிழித்து கொண்டு இருந்தீர்கள். பதவி கொடுக்க வில்லையென்று புலம்பிக்கொண்டு இருந்தீர்கள்.

தமிழகத்தில் சிக்கன் குனியா வந்து செத்தவர்கள் எத்தனை பேர் என்று கூட உங்களுக்கு தெரியாது. அவனவன் வீதிக்கு வீதி ஒருவன் செத்து கொண்டு இருந்த போது, உங்கள் செருப்பை துடைக்கும் சுகாதார துறை அமைச்சர், "தமிழகத்தில் அப்படி ஒரு நோயே இல்லை. அது காலரா மாதிரி தெரியுது" என்று உங்கள் மானத்தை வாங்கி கொண்டிருந்தார். அப்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா? உங்கள் பேரனுக்கு மத்திய சபையில் பதவி வாங்கும் மும்முரத்தில் இருந்தீர்கள்.

அட அந்த கர்மம் கூட வேணாம். வீரப்பனை சுட்டு கொன்ற போது தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போதும் கூட, "வீரப்பனை பிடித்தது நாங்கள் அமைத்த பாதுகாப்பு குழு தான்" என்று தனியாக நின்று கொண்டு சிரித்தீர்கள்.

உங்கள் அமைச்சர் மீது, உலகின் மிக பெரும் ஊழல் குற்றச்சாட்டு வைக்க பட்ட போது, உங்கள் நிலை என்னவென்று உலகமே அறியும். "ராஜா தாழ்த்தபட்டவர் என்பதால் அவர் மீது உங்களுக்கு எல்லாம் பொறாமை" என்று அறிக்கை விட்டீர்களே, அட காவாலி பயலே, இதை விட கேவலமான அறிக்கையை எந்த முதல்வராவது இந்தியாவில் விட்டதுண்டா? எப்போது பார்த்தாலும் ஒரு ஜால்ரா கூட்டத்தை பக்கத்திலேயே வைத்து கொள்ள வேண்டியது, உங்கள் புகழ் பாட சொல்லி கேட்டு மகிழ வேண்டியது, அதை உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பி ஆனந்தம் காண வேண்டியது. உங்கள் டிவியை பார்த்தல் மக்கள் மனசு மாறிவிடும் என்று நினைத்தீரா. நீங்கள் எந்த விழாவிற்கு சென்றாலும் உங்கள் பின்னாலையே சுற்றும் ரஜினி, உங்கள் எதிரிக்கு ஏன் வாக்களித்தார் என்று ஒரு முறையாவது யோசித்தீர்களா.

அரசியல் தான் இப்படி என்றால் மற்ற தொழிலையும் விட்டு வைக்காமல் உங்கள் குடும்பமே எல்லாவற்றிலும் தலையிட்டால் எவன் தான் பொருத்துகொள்வான். உங்களுடைய காப்பீட்டு திட்டம், இலவச தொலைகாட்சி திட்டம் எல்லாம் தோற்று போன திட்டங்கள். ஒரு சிலருக்கோ அல்லது உங்கள் கட்சிகாரர்களுக்கோ கொடுத்து விட்டு எல்லோருக்கும் கொடுக்கிறோம் என்று மார்தட்டி கொண்டது தான் நீங்கள் செய்த பெரிய தவறு. இதில் மட்டுமில்லை எல்லா சலுகைகளிலும் அதையே பின்பற்றியது இன்னும் பெரிய தவறு. எல்லோருக்கும் கொடுக்கிறோம் தமிழ்நாடே எங்களால் தான் சுபிக்ஷமாக இருக்கிறது என்று உங்கள் டிவியில் நீங்கள் உருவாகிய மாயத்தோற்றம் உங்களை இப்போது தோல்வி முகத்தை காட்டி இருக்கிறது.

எங்கோ ஒரு மூலையில் இதை எல்லாம் டிவியில் பார்க்கும் பாமரன் என்ன நினைப்பான். எல்லோருக்கும் கிடைகிறது நமக்கு கிடைக்கலையே என்று தானே நினைப்பான். அதை பலரும் நினைத்து விட்டது தான் உங்களுக்கு தோல்வி. இப்படி செய்வது தப்பாகிவிடும் என்று ஒரு அடிப்படை அறிவு இல்லாமல் இருந்து விட்டீர்களே. முன்பு போல யாரோ ஒருவருக்கு கொடுத்து விட்டு எல்லோருக்கும் கொடுத்தோம் என்று சொல்வது எப்படி ஏற்றுகொள்ள கூடியதாக இருக்கும்.  உங்கள் குடும்பத்தில் ஒருவர் விடாமல் எல்லோரும் பதவி வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போது, மக்கள் எல்லோரும் தங்களுக்கு அரசு சலுகை வேண்டும் என்று நினைத்ததில் என்ன தப்பு. அட என்  அம்மா கூட பல தடவை என்னிடம் புலம்பினார். உண்மையிலேயே செய்யுறாரா அல்லது செய்யுறது மாதிரியான்னு கேட்டார். நான் இரண்டாவதை சொன்னேன்.

இலவசம் கொடுத்தாலே போதும் மக்கள் நாக்கை தொங்கபோட்டு கொண்டு ஓடிவருவான் என்று உங்களிடம் எவன் சொன்னானோ, அவன் இப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருப்பான். அவனை முதலில் அடித்து விரட்டுங்கள். ஸ்டாலினாவது நல்லா இருக்கட்டும். என்னை போல படித்தவர்களை வேலை வாய்ப்பும் கொடுக்காமல்,அரசியலிலும் நுழைய விடாமல், போகும் இடமெல்லாம் லஞ்சம் ஊழல் என்று அலைய விட்டதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்பதை ஒரு முறையாவது உணர்ந்து இருகிறீர்கள?

 இப்போது அம்மாவிடமும் அதையே தான் சொல்கிறேன், உழைப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த இலவசங்களே எங்களுக்கு வேண்டாம். மக்கள் நலம் பெரும் நலத்திட்டங்களை கொண்டு வாருங்கள். இப்போது மக்கள் உழைத்து பழகாமல் இருந்து விட்டால், அடுத்த முறை நிச்சயம் கஷ்டம். ஏன் என்றால் உங்கள் இருவருக்கும் மாற்று சக்தி இப்போது தமிழ்நாட்டில் யாரும் இல்லை.

இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீங்கள், அதன் பின்னர் விஜயகாந்த் மட்டுமே களத்தில் இருப்பார். அவரை நம்பி ஆட்சியை கொடுப்பதும் ஒன்று ஆற்றில் குதிப்பதும் ஒன்று. இப்போதும் அம்மாவிடம் கூட்டணி இல்லையென்றால், இந்நேரம் அவரும் காணாமல் போயிருப்பார். உங்களுக்கு மாற்று சக்தி வரும் வரை நாங்கள் உழைப்போம். அதன் பின்னர் மீண்டும் இலவசம்,ஊழல்,லஞ்சம் என்று தமிழகம் நிச்சயம் தடம் மாறபோகிறது தமிழகம். கருணாநிதி எதாவது தகிடு தத்தம் செய்து மீண்டும் அடுத்த முறை ஆட்சியை பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்குள் ஒரு மாற்று தலைவரும், ஒரு மாற்று எதிர்காலமும் தமிழ்நாட்டுக்கு தேவை.

ஜாதிகட்சிகள் தான் ஒட்டு வங்கி என்று உங்களுக்கு யார் சொன்னது. விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், வன்னியர் ராம தாஸ், கொங்கு ஈஸ்வரன், முஸ்லிம் கட்சி என அதனை போரையும் உள்ளே இழுத்து வைத்து கொண்டு,"எங்கள் கட்சியில் ஜாதி மத பேதம் பார்ப்பதில்லை" என பினாத்துகிறீர்கள். நீங்கள் பெரியார், அண்ணா வழியில் வந்தவரா?
மக்கள் பாடம் கற்பித்தது உங்களுக்கு மட்டுமில்லை ஜாதி கட்சிகளுக்கும் தான். 

உங்கள் கடைசி காலம் நெருங்கி விட்டது தலைவரே. போய் சற்று ஓய்வெடுங்கள். அல்லது தீரன் சின்னமலை படத்திற்கு வசனம் எழுதுங்கள். நீங்கள் சாகும் போதும் பதவியில் தான் இருப்பீர்கள் என்று உங்கள் ஜோசியக்காரன் சொன்னதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். அது முதல்வர் பதவி இல்லை வெறும் MLA பதிவிதான் என்று இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் வயதிற்கு கிடைத்த மரியாதையாக நினைத்து கொண்டு மக்கள் உங்களை அடிக்காமல் விரட்டியிருகிரார்கள் என்று சந்தோஷபடுங்கள்.இனிமேல் கட்சியை ஸ்டாலின் பார்த்து கொள்வார், உங்கள் மகளை ஜெயில் பார்த்து கொள்ளும், உங்கள் சொத்துக்களை உங்கள் பேரன்கள் பார்த்து கொள்வார்கள்.

நீங்கள் இதை விட பெரிய தோல்வியை 1992 -ம் வருடமே பார்த்து இருக்குறீர்கள். பின்பு மீண்டும் எழுந்து வந்து ஆட்சியை பிடித்தும் இருக்குறீர்கள். இந்த முறை அது சற்று கடினமே. உங்கள் அரசியல் வாழ்கையில் என்னை போன்ற இளம் வயதினருக்கு நீங்கள் கற்று கொடுத்தது ஒன்றே ஒன்று தான். உங்களை போன்ற சுயநலவாதிகளை இனம் காண செய்வதது தான் அது.

எங்களுக்கு தேவை உங்களை போன்ற வயோதிகர்கள் இல்லை. ஒழுக்கம், நேர்மை, ரௌத்திரம், அதிக மனோபலம், தியாக மனப்பான்மை கொண்ட கொண்ட உன்னத தலைவன்.

ஒரு தன்னலமற்ற தலைவன்.
இன்னமும் காத்து இருக்கிறோம்.
என்னை போன்றவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கொடுங்கள்.
உலகை மாற்றிகாட்டுகிறோம்.

1980- களில் நடந்த தேர்தல்களில் புரட்சி தலைவரின் பிரசாரம், ஆடியோ வடிவில்.



5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா நல்ல நேரம் சதீஷ் பார்த்தா சந்தோசப்படுவாரே?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஜெயலலிதா மீது மக்களுக்கு திடீர்னு பாசம் வந்துருச்சுன்னு யாரும் நினைக்க போறதில்ல. கண்டிப்பா எல்லோருக்கும் தெரியும், அந்த தமிழின துரோகியை வீட்டுக்கு அனுப்பிடுவோம் என்று. எனக்கு அப்பவே பட்சி சொல்லுச்சு, நிச்சயம் காட்சிகள் மாறும்னு.

செம காண்டு போல ஹா ஹா

Sathish said...

ஆமா தல செம காண்டு... முடியல...

பொன் மாலை பொழுது said...

நீங்கள் எழுதி விட்டீர்கள். பலபேர் இன்னமும் மனதில் வைத்து குமுறிகொண்டுள்ளோம். அனேகமாக அனைவரின் எண்ணமும் இப்படித்தான் இருக்கிறது இந்நாளில்.

தினேஷ்குமார் said...

ஏம்பா இவ்வளவு நீளமா பதிவு இருக்கு... கொஞ்சம் டைம் கொடுத்தால் ரெண்டு நாள்ல படிச்சிட்டு சொல்வேன்