-

சில கேள்விகள் சில விளக்கங்கள்

5 comments
பொதுவா தேர்தல் வந்தாலே நமக்கு எப்பவும் ஒரு குழப்பம் இருந்துட்டே இருக்கும். இந்த முறை யாருக்கு ஒட்டு போடலாம், யாருக்கு போட வேண்டாம்னு மனசுக்குள்ளே ஒரு பட்டி மன்றமே நடத்துவோம். ஆனால் இந்த முறை அந்த குழப்பமே இல்லாமல் மக்கள் வாக்களித்து இருகிறார்கள் என்பது நேற்று தெளிவானது. என்னமோ ஜெயலலிதா மீது மக்களுக்கு திடீர்னு பாசம் வந்துருச்சுன்னு யாரும் நினைக்க போறதில்ல. கண்டிப்பா எல்லோருக்கும் தெரியும், அந்த தமிழின துரோகியை வீட்டுக்கு அனுப்பிடுவோம் என்று. எனக்கு அப்பவே பட்சி சொல்லுச்சு, நிச்சயம் காட்சிகள் மாறும்னு.

என்னை கவர்ந்த பாடல்

5 comments
நம்ம நாட்டின் மதிப்பு நம்ம மக்களுக்கு தெரியுதோ இல்லையோ மற்ற நாட்டு மக்களுக்க் நல்லாவே தெரியும் போல. சமீபத்தில் இரண்டு வீடியோக்களை பார்த்தேன். கென்யா நாட்டை சேர்ந்தவர்களை கொண்டு நம் நாட்டின் ஜன கன மன பாடல் மற்றும் வந்தேமாதரம் பாடல்களை படமாகி உள்ளனர். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது,உங்களோடும் பகிர விரும்புகிறேன். நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary

12 comments
சமீபத்தில்  BBC-யின்  "Home" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய முதல் ஆவணபடமாகிய இந்த படத்தை Luc Besson, என்ற தயாரிப்பாளர் உதவியால் எடுத்து இருக்கிறார். இதற்கு பின்னணி குரல் கொடுத்து இருப்பவர் Glenn Close. இந்த படம் 54 நாடுகளில் 120 இடங்களில் 217 நாட்கள் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது. இந்த படத்தில் சிறப்பம்சமே முழுக்க முழுக்க டாப் ஏங்களில் படம் பிடிக்கப்பட்டது தான். அதாவது முழு படமும் நீங்கள் ஹெலிகாப்டரில் இருந்தோ அல்லது சிறிய விமானத்தில் இருந்தோ பார்ப்பது போன்றே இருக்கும். ஒரு முறை கூட பூமியில் உள்ள நிலத்தை தொட்டு ஒரு காட்சிகள் கூட இருக்காது. தரையில் இருந்து 50-100-200 அடி உயரத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு உங்களுக்கு மிகுந்த வித்தியாசமான உணர்வை தரும். கடந்த 2 லட்சம் வருடங்களில் நம்முடைய பூமி பந்து எவ்வளவு மாறியிருக்கிறது என்றும் இனி எப்படியெல்ல வீணாய் போக போகிறது அல்லது நாம் எப்படி அதையெல்லாம் மீறி நம்முடைய வளங்களை காபாற்றபோகிறோம் என்பது போன்ற விமர்சனங்கள் கருத்துகளை முன் வைக்கிறது இந்த ஆவண படம்.