-

டிராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி (வயது 75) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்திய பொதுநலசேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை சீர்படுத்துவது இவரது பழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது அவரது பாணி.

இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார். ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரீஸ் கார்னர் முன்னால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதில் உதவிசெய்தார். ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார்.
டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக்கொண்டு கட்டுபாடில்லாமல் ஓடிய மீன்பாடி வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குக் கட்டிடங்களை கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்கவைத்தார். பல கட்டிடங்கள் செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் கார் நிறுத்த வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுக்க பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச்செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி. இவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ராமசாமி தான், தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் தன் பணிகளை அவர் கைவிட்டதில்லை. 2000த்தில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராக போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். 2002ல் மீன் விற்பவர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். மேலும் பல்வேறு பொய்வேறு வழக்குகள் அவர்மீது காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது பணிகளுக்கு இவ்வாறு பல தடங்கலகள் இருந்தாலும், தொடர்ந்து இயங்க அவருகு பல பொது மக்கள் உதவி புரிகின்றனர்.

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

75 வயதில் இப்படி ஒரு சாதனை மனிதர்.வாழ்க..

Anonymous said...

அண்ணா ஹசாரே பத்தி எழுதற மாதிரி டிராபிக் ராமசாமி பத்தி சொல்லியிருக்கிங்க..?

Sathish said...

thanx அமுதா கிருஷ்ணா,ஆர்.கே.சதீஷ்குமார்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவருன் பொது நல வழக்குள் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்...

ஒவ்வொறுவரும் இப்படித்தான் இருக்க வேண்டும்..

அவருக்கு என் வணக்கங்கள்..

Speed Master said...

சிறந்த மனிதர்