-

ஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy

பொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம் ஆஸ்கார் கிடைக்காதது நல்லது தான் என்ற ரீதியில் பேசுவதுண்டு. உண்மையில் இந்திய படங்களுக்கு கொடுத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்பது ஆஸ்கார் குழுவின் எண்ணம், அதனால் கடைசி பிரிவு வரை இந்திய படங்களை கொண்டு சென்று விட்டு ஏதாவது ஒரு காரணம் சொல்லி விருது தராமல் புறந்தள்ளி விடுவதுண்டு..

ஆஸ்கார் எனப்படும் அகடமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாக இது இருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படங்களுக்கு இணைந்து வழங்கபடுகிறது. முதலில் எந்தெந்த படங்கள் இறுதி சுற்று வரை செல்ல வேண்டும் என்பது நடுவர்கள் தீர்மானிப்பார்கள். பின்பு இறுதி சுற்றில் ஒவ்வொரு விருதிற்கும் 5 திரைப்படங்கள் போட்டியிடும், இறுதியில் எந்த படத்திற்கு விருது என்பதை நடுவர் குழுவும் ஆஸ்கார் குழுவும் தீர்மானிக்கும்.

இதில் 2002 -ம் ஆண்டு லகான் திரைப்படம் ஆஸ்கார் வெல்வதற்கான அணைத்து தகுதிகளும் இருந்தும், வெள்ளையனை எதிர்க்கும் ஒரு படமாக இருந்ததால் கடைசி சுற்றில் புறக்கணிக்கப்பட்டது. அமீர்கான், ரகுமான், அசுதோஷ் கோவாரிகர் மற்றும் சிலருக்கு சர்வதேச அளவில் அட்டகாசமான அறிமுகம் அந்த படம். ஆனால் நிலைமை வேறுமாதிரி ஆனது. அதுவரை இல்லாத அளவிற்கு, அதற்க்கு பின் வந்த ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடுகளில் அதிக வருமானம் ஈட்டியது இந்திய திரைப்படத்துறை. ஆஸ்கார் வெல்வதே குறி என்று பலரும் கங்கணம் கட்டிக்கொண்டு தரமான திரைப்படங்களை எடுத்தார்கள். மேலை நாடுகளில் அதிக வசூலை ஈட்டியது. அந்தந்த நாடுகளின் அரசாங்கத்திற்கும் நல்ல முறையில் பணம் கிடைத்தது.

இது தான் அவர்கள் எதிர்பார்த்த தந்திரமான பொருளாதார லாபம். தொடர்ந்து இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்காததால் நம் நாடு ஆஸ்கார் திரைப்பட அமைப்பு வருத்தம் தெரிவித்தது. தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்ததும், அணைத்து தகுதிகளும் இருந்தும் இந்திய படங்கள் புறக்கணிக்கபடுவது ஏற்றதக்கதல்ல என்று கூறி, கடந்த 2009 -ம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு எந்த திரைப்படத்தையும் அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அது நிறைவேற்றபட்டும் விட்டது. அந்த ஆண்டு "ஸ்மைல் பிங்கி"  என்ற உதடு பிளவு கொண்ட சிறுமியின் ஆவணப்படம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு ஆவண படங்களும் அனுப்பப்பட்டது.

இதனால் விழித்துக்கொண்ட ஆஸ்கார் நிறுவனம், இனி இப்போதைக்கு இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கொடுபதில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டது. மேலும் இந்திய படங்கள் மூலம் அவர்கள் அரசுக்கு நல்ல வருமானம் கிடைப்பதால், அதையும் இழக்க விரும்பாமல் இந்தியாவில் இருக்கும் திரைப்பட வல்லுனர்களுக்கு விருது கொடுத்து தங்கள் கௌரவத்தை காப்பாற்ற முனைந்தனர். அதனால் கடைசி நேரத்தில் இதையறிந்த இந்திய அதிகாரிகள் எதோ ஒரு படத்தை ஆஸ்கார் குழுவிற்கு அனுப்பியதாகவும் செய்தி உண்டு. 

சிலம்டாக் மில்லியனர் படத்திற்கு 8 விருதுகளை அள்ளிகொடுத்து இந்திய அதிகாரிகளையும் ரசிகர்களையும் திருப்திபடுதினர். அனால் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும், அது இங்கிலாந்து படம்தானே தவிர இந்திய படம் இல்லை. அனால் இந்தியர்களுக்கு விருது பெற்று தந்த படம் என்று தான் நினைகிறார்கள் நம் மக்கள். இதனால் ரகுமானுக்கு ஒன்றும் போனால் போகுது என்று கொடுக்கப்படவில்லை. ரகுமானுக்கு ஏற்கனவே லகான் படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய விருது, சற்று தள்ளிபோய் ஆறு ஆண்டுகள் கழித்து இரட்டை சந்தோஷமாய் அமைந்தது. 

சிலம்டாக் மில்லியனர் படம் ஒன்றும் அனைத்து தகுதிகள் உள்ள படம் என்று நினைத்துவிடாதிர்கள். அது City of God என்ற பிரேசில் நாட்டு படத்தின் உல்டா. நான் சிறு வயதிலேயே அந்த படத்தை பார்த்து இருக்கிறேன். அந்த படத்தின் திரைகதை, எடிட்டிங்,கேமரா என பல விஷயங்களையும் சிலம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தி இருகிறார்கள். கதை மட்டுமே சிறிய மாற்றம். அது பிரேசிலில் நடக்கிறது, இது இந்தியாவில் நடக்கிறது. மட்ட்றபடி அனைத்தும் காபியே. இருபினும் இப்போது முன்பை விட வெளிநாட்டு வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்து உள்ளது என்பதுதான் உண்மை. இவை அனைத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள் தானே தவிர மறுக்கப்படும் உண்மைகள் இல்லை. முடிந்தவரை ஒட்டு போட்டும் பிரபலபடுதுங்கள், உங்கள் நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

12 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

இதிலேயும் அரசியலா?

Sathishkumar said...

இப்பதான போஸ்ட் போட்டேன். ஒரு நிமிஷம் கூட ஆகல.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

m..super

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது ஓகே .....இன்னும் பல ரகசிய அபூர்வ தகவல்களை எதிர்பார்க்கிறோம்

Sathishkumar said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது ஓகே .....இன்னும் பல ரகசிய அபூர்வ தகவல்களை எதிர்பார்க்கிறோம்//

கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவரும்.

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. அண்ணன் கிட்டே பல மேட்டர் இருக்குடோய்

Anonymous said...

VERY NICE

Speed Master said...

இந்த செய்தியை நானும் கேள்விப்பட்டுள்ளேன்

நம்ம பதிவு
நல்லவன் vs கெட்டவன்
http://speedsays.blogspot.com/2011/03/vs.html

கிருஷ்ணமூர்த்தி said...

மேலும் வேற்று மொழிபடங்களுக்கு ஒரே ஒரு விருது மட்டுமே பரிந்துரை செய்யப்படுகிறது .

Jayadev Das said...

\\
இதில் 2002 -ம் ஆண்டு லகான் திரைப்படம் ஆஸ்கார் வெல்வதற்கான அணைத்து தகுதிகளும் இருந்தும், வெள்ளையனை எதிர்க்கும் ஒரு படமாக இருந்ததால் கடைசி சுற்றில் புறக்கணிக்கப்பட்டது. \\ஆஸ்கார் பெரும் அளவுக்கு லகான் படத்தில் சரக்கு இல்லை. மேலும் Slum Dog Millionaire படம் ஆஸ்கார் வாங்குவதற்கு முன்னரே Bafta போன்ற பல சர்வதேதேச விருதுகளைக் குவித்த படம், அதற்க்கு ஆஸ்கார் கிடைத்ததின் பின்னணியில் அரசியல் இருப்பதாக நம்ப முடியவில்லை.

Sathishkumar said...

நன்றாக கவனித்து பாருங்கள் Bafta மற்றும் ஆஸ்கார் விருதுகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து வழங்குகின்றன. இதில் ஆஸ்கார் அமெரிகாவினுடைது, Bafta இங்கிலாந்து நாட்டின் விருதுகள்.

tharsigan said...

super