-

Area 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்

என்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்பார்ப்பதாக சொல்லி இருந்தார்கள். ஒரு சிலது மட்டுமே பெரிய பதிவாக எழுத முடியும், சிலது பத்து வரிகளில் கூட முடிந்து விடும், சிலது ஒரே வீடியோ கூட போதும். இந்த பதிவில் ஏரியா 51 பற்றிய விபரத்தை தொகுத்து எழுதுகிறேன். 
ஏரியா 51 என்பது வேற்றுகிரகவாசிகளை பரிசோதிக்கும் இடமாக உள்ளது. இது எப்போது ஒரு ரகசிய யாடமாகவே இருக்கிறது. "Independence Day" என்ற ஆங்கில படத்தில் கூட அந்த இடம் தெளிவாக காட்டி இருப்பார்கள். மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவத்தளம் தான் இந்த ஏரியா 51. நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின்(Groom Lake) தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய இரகசிய இராணுவ விமானத்தளம். இந்த இராணுவ தளத்தின் முதன்மை வேலையானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதுதான்.


அமெரிக்க விமானப் படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் தளங்களை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வருகிறது. எனினும் குரூம் தளமானது, அதன் அருகிலுள்ள 186 மைல் (300 km) மொஜாவெ பாலைவனத்தின்(Mojave desert) எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது. அது விமானப் படை பறக்கும் சோதனை மையம் என்றே சொல்கிறார்கள்.இவ்விடத்திலேயே அமெரிக்க எரிசக்தி துறை தனது 928 சோதனைகளில் 739 சோதனைகளை அங்கேயே நிகழ்த்தியது. யூக்கா மலை அணு கழிவு சேமிப்புக் கிடங்கு ஏறக்குறைய 40 miles (64 km) குரூம் ஏரியின் தென்மேற்கேயுள்ளது.

குரூம் லேக் மரபு ரீதியிலான விமானப் படைத்தளம் அல்ல, முன்னனி படை விமானங்கள் பொதுவாக அங்கு நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக புதிய விமானங்களைப் பயிற்றுவிக்க, சோதிக்க, மேம்படுத்தக் கூடிய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க விமானப் படையாலோ அல்லது CIA போன்ற வேறு முகமையாலோ அங்கீகரிக்கப்பட்ட பின்பு அவை பொதுவாக சாதாரணமான விமானப் படைத்தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

குரூம் லேக் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசவும் சுடும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கைவிடப்பட்டுக் கிடந்தது.லாக்ஹீட் நிறுவனம், அவசரத் தேவைக்கான தளத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தியது, அப்போது அது சைட் இரண்டு அல்லது "த ராஞ்ச்" என அழைக்கப்பட்டது. அதில் சிறிய அளவிலான குடில்களும், பணிமனைகளும், இழுத்துச் செல்லக்கூடிய வீடுகளில் வசித்துவந்த சிறு குழுக்களும் இருந்தன. மூன்றே மாதங்களில் 5000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு ஜூலையில் பயன்பாட்டிற்கும் வந்தது தான் ஆச்சர்யம்.

இந்த தளத்தில் மொத்தம் ஏழு ஓடுபாதைகள் இருக்கின்றன.நிலத்துக் கீழே மிகப்பெரிய இரயில்சாலை அமைப்பு இருப்பதை அவர்கள் மறுத்தாலும் ஏரியா 51 இன் பல நடவடிக்கைகள் (இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது) நிலத்திற்குக் கீழேயே நடைபெறுவது வழக்கம்.


ஏரியா 51 சதிக் கோட்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றித் தெரியும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வைத்திருந்த வேற்றுலக விண்கலத்திற்காக பணிபுரிய அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏரியா 51 இன் S-4 இல் (பாப்பூஸ் ஏரியில் இருக்கும் ஒரு தளம்) அவர் பணிபுரிந்திருப்பதாக 1989 ஆம் ஆண்டில் பாப் லாசர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, 1996 ஆம் ஆண்டு புரூஸ் பர்கஸால் இயக்கப்பட்ட டிரீம்லாண்ட் என்ற ஆவணப்படத்தில், 71 வயதான இயந்திரப் பொறியாளர் ஒருவர் 1950-களில் ஏரியா 51 இல் பணியாளராக பணியாற்றினார் என்று குறிப்பிடும்படியான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. விழுந்து நொறுங்கிய புவிக்கப்பாலான கலத்திலிருந்த ஒரு தட்டை அடிப்படையாகக் கொண்டு "செயற்கையாக பறக்கும் தட்டு உருவாக்குதலில்" அவர் வேலை செய்தார் மற்றும் அமெரிக்க வானூர்தி ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்பதும் அவர் குறிப்பிட்டவைகளில் அடங்கியது.

ஏரியா 51 இல் வேற்றுலக நோய்க்கிருமிகளை குளோனிங் செய்வதில் பணிபுரிந்ததாகவும் "J-ராட்" என்று வேற்றுலக ஜந்துவிற்கு பெயரிடப்பட்டது என்றும் 2004 ஆம் ஆண்டு டான் புருஸ்ச் (டான் கிரெய்னின் மறுபெயர்) குறிப்பிட்டுள்ளார். புருஸ்சின் கல்வியியல் சான்றாவணங்கள் மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாயிற்று. ஏனெனில் அவர் 1989 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பேரல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார், அதே நேரத்தில் அவர் Ph.D பட்டத்தையும் வாங்கினார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.


ஏரியா 51 பகுதியை புவிக்கப்பாலானவைகளுக்கான ஒரு புகலிடமாகத் தான் பிரபலமான கலாச்சாரங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. ஏரியா 51ஐ குறித்த ஏராளமான சதிக் கோட்பாடுகளின் காரணமாக பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பாக அறிவியல் புதினம் போன்றவற்றில் அது அதிமுக்கியத்துவம் பெற்றது. பலவகையான படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கற்பனை நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. பின்வருபவை அது போன்ற ஊடகத்தின் பட்டியலாகும்:

* 1947 ஆம் ஆண்டின் ரோஸ்வெல் UFO சம்பவத்திலிருந்து விழுந்து நொறுங்கிய தேடுதல் பணியில் இருக்கும் வாகனத்தை ஆய்வு செய்வதை 1996 ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆக்ஷன் திரைப்படம் காண்பிக்கிறது. திரைப்படத்தின் கதாநாயகர்கள் தளத்தின் விமானத்தளங்களில் இருந்துகொண்டு அவர்களுடைய இறுதித் தாக்குதலை நடத்தும்போது ராண்டி குவேய்டின் கதாப்பாத்திரமான ரசல் கேசி ஒரு சமயத்தில் நெவிடாவின் மாநில வரைபடத்தில் தளம் காண்பிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையை மறைமுகமாக வெளிக்காட்டும்.

* 1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்திலிருந்து மீட்கப்பட்ட வேற்றுலகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு காலப் பயணக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மறைவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் (NSA) நடவடிக்கை மூலம் அந்தத் தளம் நடத்தப்படுகிறது என்பது போல காண்பித்த, செவன் டேஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும்பாலும் ஏரியா 51 வளாகத்திலேயே படம்பிடிக்கப்பட்டிருந்தது.

* டாம் ரைடர் 3 என்ற படத்தில் வரும் லாரா கிராஃப்ட் எனும் பாத்திரம் ஏரியா 51 பற்றி வெளிப்படுத்தும். அந்தப் படத்தில் "தனிமம் 115 என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கல்லை அவள் கண்டு பிடிக்கவேண்டும்."

* வீடியோ கேமான பெர்ஃபெக்ட் டார்கில் ஜோனா டார்க் ஏரியா 51 வழியாகச் செல்வார். அதில் இரகசிய ஏஜெண்டுகளைச் சந்தித்து, இறந்துவிட்டது என்று கருதப்படுகிற வேற்றுலக உயிரான "எல்விஸ்" என்பதின் பிரேதப்பரிசோதனைக் கூடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதே அவளுடைய இலக்கு.

* இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் த கிரிஸ்டல் ஸ்கல் என்ற படத்தின் ஆரம்பத்தில், "ஹாங்கர் 51" என்பது அரசாங்க கிடங்காக காட்டப்படுகிறது, அதே நேரம் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் படத்தின் கடைசிப் பகுதியில் புனிதப் பேழை பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. அங்கு ரோஸ்வெல் வேற்றுலகவாசியை மீட்பதற்காக KGB ஏஜெண்டுகள் போகிறார்கள். கடைசியாக, படிகநிலை எலும்புக்கூட்டுடன் பலபரிமாண உருவங்களை வெளிக்காட்டுகிறார்கள். ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51க்கு இடையே இருக்கும் தொடர்புகளைக் குறித்த பிரபலமான நம்பிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக 51 என்ற எண்ணை எழுத்தாளரான டேவிட் கூப் ஒப்புக்கொள்கிறார்.

* ஸ்டார்கேட் SG-1 என்ற தொலைக்காட்சித் தொடர்களில், பிற கிரகங்களிலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புவிக்கப்பாலான தொழில்நுட்பத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் தளமாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டுள்ளது.

* NBC இல் ஒளிபரப்பான நைட் ரைடர்ஸ் என்ற தொடரின் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட தொடரின் நைட் டூ கிங்ஸ் பான் என்ற பகுதியில் மைக்கேல் நைட் KITTஐ மீட்பதற்காக ஏரியா 51 இல் இருக்கும் சேகரிப்புத் தளத்தின் வழியாகச் செல்வார். அதற்குப் பிறகு அது NSA ஏஜெண்டுகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.

* திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு உலகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் சூழ்ச்சியுடன் கட்டுப்படுத்திக் கையாளும் த பாட்ரியட்ஸ் என்று அழைக்கப்படும் குழுவின் தலைமை இடங்களில் ஒன்றாக ஏரியா 51 மாறியிருப்பதைப் போல் மெட்டல் கியர் என்ற தொடர்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

* சூப்பர்மேன்: ரெட் சன் என்ற நகைச்சுவைப் படத்தில், J. எட்கர் ஹூவரின் ஆணையின் படி அபின் சரின் உடல் ஏரியா 51 இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களை உருவாக்குவதற்காக, தளத்திற்கு லெக்ஸ் லூதர் வருவதற்கு ஜான் F. கென்னடி அனுமதி கொடுப்பார்.

* ஆவணப்படத் தொடரான UFO ஹண்டர்ஸ், சீசன் டூ என்ற தொலைக்காட்சித் தொடர்களின் நிறைவுப் பகுதிக்காக 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியா 51 படம்பிடிக்கப்பட்டது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அந்நிகழ்ச்சி ஹிஸ்டரி சேனலில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட்டது.

* ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம், மிட்வே கேம்ஸினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மேலும் இந்த லிங்கில் சென்று வேற்றுகிரகவாசிகளின் படங்கள் மற்றும் இந்த பூமியில் அவர்கள் வந்து போன தடயத்தை விட்டு சென்றுள்ளதையும் காணலாம்.டிஸ்கி 1:  மேலே  லைசென்ஸ் மட்டுமே போலியான படம். மற்றது உண்மையானது.

டிஸ்கி 2:   மேற்கொண்டு யாரிடாவது மேலதிக தகவல் இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


16 comments:

சக்தி கல்வி மையம் said...

போற்றுவார்.. போற்றட்டும்..
நீங்க கலக்குங்க...

Peter John said...

Good topic. But even though all these information are still not proved. there is no authentication for all the information. But interesting facts and figures. please keep posts like this highly confidential information.

Sathish said...

thanks karun,peter

ஜோதிஜி said...

உங்கள் தகவலுக்கு நன்றி. மிகுந்த ஆச்சரியத்தை உருவாக்கிய பதிவு. கூகுள் பஸ்ஸில் இணைத்து உள்ளேன். தொடர்ந்து எழுதுங்க.

Chitra said...

Whenever you have time, read:

http://konjamvettipechu.blogspot.com/2011/02/blog-post_28.html
I have written something about it...
Also, I had a chance to visit the vicinity of Area 51. It was fun to learn more about it. :-)

Gnana Prakash said...

nice information..

Unknown said...

super

Speed Master said...

அருமை தொடருங்கள்

Unknown said...

Great Boss super....

Sathish said...

பாராட்டிய அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.. ஒட்டு போடுங்கப்பா

Anonymous said...

அடேங்கப்பா பயமுறுத்துதுப்பா தகவல் எல்லாம்..கலக்கல்..அடுத்த சீரியல் என்ன

Anonymous said...

சூப்பர் இது நல்ல முயற்சி...இதே ஸ்டைலை பிடிச்சிக்கவும்

sathishsangkavi.blogspot.com said...

Very Good Information...

Kousalya Raj said...

வேலை அதிகம் என்பதால் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை...

இந்த பதிவு மிக முக்கியமான ஒன்று...ஆச்சரியமாக இருக்கிறது...

இப்படி அரிதான விசயங்களை தேடி எடுக்குற உங்கள் உழைப்பிற்கு என் நன்றியும், பாராட்டுகளும் சதீஷ்.

Sathish said...

மிக்க நன்றி கௌசல்யா,சங்கவி

Madurai pandi said...

Very gud info!!!