-

நான் ஒரு 'குடி'மகன் - பிரபலங்கள் சொன்னது..


gallery thumbnail


இன்று அரசாங்கமே மது விற்பனை செய்யுது. ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய தோழி ஆரம்பித்த சரக்கு கம்பெனிய எப்படி முன்னேற்றலாம்னு ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துட்டு யோசிச்சாங்க. அப்போ தோணின ஐடியா தான் 'டாஸ்மாக், நீங்கள் எல்லாம் பாஸ்மார்க்'அதுக்கப்புறம் தூர போன்ற ஓனான தூக்கி வேட்டிக்குள்ள விட்ட மாதிரி ஆகிடுச்சு நம்ம மக்களுக்கு. அந்த அம்மாவை ஜெயிக்க வச்சது எவ்ளோ தப்புன்னு நகர மக்கள் நொந்து போய்ட்டாங்க. ஆனா அதுலயும் ஒரு நன்மை இருந்துச்சு, தனியார் சரக்கு கடை, கள்ள சாராயம்னு உசிர விட்டவங்க எல்லாம் இங்க வர தொடங்கினதும் அரசாங்கத்துக்கு வருமானம் எக்கு தப்ப எகிறி போச்சு.அதை அப்படியே கப்புன்னு புடிச்சாரு நம்ம தமிழின கொலைஞர்... மன்னிக்கவும்.. தமிழின கலைஞர்... அப்புறம் அவருக்கு புடிச்சவங்களுக்கெல்லாம் டெண்டர் விட்டாரு. சில நூறு கோடிகள்ள வந்த வருமானம் பல ஆயிரம் கோடின்னதும் தலைவருக்கு மண்டைல்ல உடனே ஒரு பல்பு எரிஞ்சது.
 அப்படியே மூணு பேரும் தெரிசுட்டாய்ங்க. கப்புன்னு மேல மேல பாஞ்சுருவாங்க போல

 
அழைத்தார் வாரிசுகளை,அத்தனை சரக்கு கம்பனிகளையும் பினாமி பெயரில் வளைத்து போட்டார். இளைஞன் படத்தை 32 கோடியில் தயாரித்த மார்டினுக்கு ஒரு கம்பனியை தாரைவார்த்தார்.. அதாவது டெண்டரை கொடுத்தார். இல்லனா உப்பு சப்பிலாத அந்த படத்துக்கு 32 கோடியை செலவு செய்ய மார்டின் என்ன மடையனா?

அதுவும் நம்ம தலைவருக்கு சரக்கு மேல கூட அவ்ளோ ஆசை இருந்துருக்காது, அதுல கிடைக்கற காசை பார்த்ததும் பலமுறை வெட்கம்கெட்டதனமா அறிக்கையெல்லாம் விட்டாரு. தென்னை மரத்திலிருந்து இறக்கும் தென்னம்பாலைகூட 'கள்ளை குடித்து உயிரை விடாதே'ன்னு மக்களை நாசூக்கா மிரட்டினாரு. இதுனால கொங்கு இன மக்களின் கோபத்திற்கு ஆளானது தெரிஞ்சது தான். எங்களோட பக்கத்து நகரமான கோவையில் இவருக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிடுச்சு. என்ன பண்றதுன்னு யோசிச்சு பாத்து அங்கே செம்மொழி மாநாடு நடத்தினார். கோவை மாநகரம் மிக குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்டது. ரோட்டில் துளி கூட குப்பை இல்லாம மாற்றினார்கள். (அனால் இப்போது பழையபடி மாறி விட்டது.) அப்ப கூட தமிழக அரசியல் வரலாற்றிலே எந்த முதல்வரும் சொல்லாத ஒரு படுகேவலமான அறிக்கை விட்டாரு பாருங்க அடங்கொப்புரானே, 'டாஸ்மாக் ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் அந்த 15 நாளும் உழைக்க வேண்டும்'னு அவர் சொன்னத படிச்சதும் எந்த கேட்ட வார்த்தைய சொல்லலாம்னு யோசிச்சேன்.


10 வருஷமா அரசியல் படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து அவர் மேல வச்சுருந்த அத்தன மரியாதையும் தூக்கி குப்பைல போட்டாச்சு. இப்படி காசு காசுன்னு சம்பாதிச்சு எத்தன பெற கொல்ல போறாங்கன்னு தெரியல. பதிவிய வச்சுக்கிட்டு என்ன தான் பிரயோஜனம். அது சரி கட்சிக்காக ஒட்டு போடறேன்னு சொல்லிட்டு திரியற பரதேசி மக்கள் இன்னும் இருகிறதால தான்  இவங்க எல்லாம் நம்மள குடிகாரனாகவும், ரேஷன் கடையில் நிக்க வைக்கவும் செய்கிறார்கள். யோசிச்சு பாருங்க, நாட்டில் விலைவாசிய குறைக்க எங்களிடம் மந்திரகோல் இல்லைன்னு பகிரங்கமா சொல்ற கட்சியோட தான் கூட்டணி வைக்க போறாங்க. இவங்க விலை குறைப்பு செய்திருந்தால் நாம ஏன் குறைந்த விலைக்கு கிடைக்குதுன்னு ரேஷன் கடைக்கு போறோம்.

அம்மாவும் சரியில்லை, அய்யாவும் சரியில்லை வேற யாருக்கு ஒட்டு போடறதுன்னு பாத்தா களத்திலே ராமதாசும், விஜயகாந்தும் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒட்டு போடறதுக்கு பதிலா அய்யாவுக்கும் அம்மவுக்குமே ஒட்டு போட்டறலாம். பேசாம 49 O போர்ம் எழுதி கொடுதிடலாம்னு இருக்கேன். ஹ்ம்ம் தலைப்புக்கு வருவோம்..


பிரபலங்கள் ஏன் மது குடித்தார்கள் என்று அவர்களே சொன்னதாய் ஒரு புத்தகத்தில் படித்தேன். அது சற்றே நகைச்சுவை இழையோடிய வரிகள் என்பதால் அதை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

"இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்து சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே சொல்லிக்கொள்கிறேன், ' சுயநலத்துடன் என்னுடைய ஈரலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இந்த பீரை குடித்து அவர்களின் கனவை நிறைவேற்றுவதே சிறந்தது என்று முடிவெடுக்கிறேன்" - ஜாக் ஹாண்டி"குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை" - ஹென்றி யங்மேன்"குடிக்காதவர்களைப் பற்றி பரிதாபப்படுகிறேன். அவர்கள் காலையில் எழுந்ததும் அவர்கள் என்ன உணர்கிறார்களோ அதனைத்தான் நாள் முழுவதும் உணரவேண்டும்" - ப்ராங்க் சினாட்ரா

"ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது" - எர்னஸ்ட் ஹெமிங்வே


"ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன ?" - ஸ்டாபன் ரைட்"நாம் குடிக்கும்போது, நாம் குடிபோதை ஏறிவிடுகிறோம். நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்." - ப்ரையன் ஓ-ரோர்க்கே


"கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பீரே அத்தாட்சி" - பெஞ்சமின் ப்ராங்க்ளின்
டிஸ்கி : மேலே படம் போட்டுருக்கற பசங்கள நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்ல. தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கபிடாது.ஒட்டு போடாம போனிங்கன்னா ஒரு குடிமகனின் பாவம் உங்கள சும்மா விடாது

10 comments:

சக்தி கல்வி மையம் said...

ஒட்டு போடாம போனிங்கன்னா ஒரு குடிமகனின் பாவம் உங்கள சும்மா விடாது./// ஓட்டு போட சொன்னா போடரோம் அதுக்காக மிரட்டக்கூடாது..
பதிவு அருமை..

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

பொன் மாலை பொழுது said...

/ மேலே படம் போட்டுருக்கற பசங்கள நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்ல. //

ரொம்ப கொழுப்புதான் :)))

சக்தி கல்வி மையம் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா

Unknown said...

மது விற்றால் வருமானம் நன்றாக வருகிறது என்றால் அரசே மது தயாரித்தால் என்ன இன்னும் லாபம் தானே. யாருக்கு என்பதில்தான் பிரச்சனை என்கிறீர்களா. அதுவும் சரிதான்.

Anonymous said...

ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன //
அடேயப்பா ஒரு மணி நேரத்துக்கு ஒரு பீரா ..வயிறு எப்படி இருக்குமோ

Anonymous said...

சிறந்த குடிமகள் இவள்தான்

Unknown said...

ஓ இப்படித்தான் பிரபலங்கலானாங்களா ஹி ஹி

அய்யா போட்டுட்டேன் உட்டுருங்கோ

Chitra said...

பிரபலங்கள் சொல்லியதை தொகுத்து - நியாயப் படுத்துறாங்கப்பா.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

டக்கால்டி said...

நெப்போலிய நெஞ்சன் என்று இன்று முதல் நீ அழைக்கப் படுவாய்...
எல்லாம் கலைஞரின் திருவிளையாடல்...

Speed Master said...

ஓகே ஓகே