-

பெனசீர் பூட்டோ



பெனசீர் பூட்டோ (Sindhi: بينظير ڀٽو, உருது: بینظیر بھٹو, IPA: [beːnəziːɾ bʱʊʈːoː]; 21 ஜூன் 1953 – 27 டிசம்பர் 2007), பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார்.


அவரின் குடும்பம் சிந்திகளின் பூட்டோ வம்சாவழியில் இருந்து வந்தது.சிந்தி வம்சாவழியில் வந்த ஒரு பாகிஸ்தானியரும், ஷியா முஸ்லீமில் நம்பிக்கை கொண்டவருமான முன்னாள் பிரதம மந்திரி ஜூல்பிகார் அலி பூட்டோவிற்கும், ஈரானிய-குர்திஷ் வம்சாவழியில் வந்த ஒரு பாகிஸ்தானியரும், அதேபோல ஷியா முஸ்லீமில் நம்பிக்கை கொண்டவருமான பேகம் நஸ்ரத் பூட்டோவிற்கும் மூத்த குழந்தையாக பூட்டோ பிறந்தார். அவரின் தந்தைவழி தாத்தா சர் ஷா நவாஜ் பூட்டோ ஆவார். இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பட்டோ காலன் என்ற அவரின் சொந்த ஊரில் இருந்து சுதந்திரத்திற்கு முன்னாள் சிந்தில் உள்ள லார்கானா மாவட்டத்திற்கு வந்தவராவார்.


பூட்டோ, தமது 35வது வயதில், 1988ல் முதன்முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார், ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி குலாம் இஷாக் கானின் உத்தரவின் கீழ் 20 மாதங்களுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.1993ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதேபோன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, இந்த முறை ஜனாதிபதி பரூக் லெஹரியினால் மீண்டும் 1996ல் நீக்கப்பட்டார். அவர் 1998ல் தானே முன்வந்து நாடு விட்டு துபாய் சென்றார்.



பூட்டோ 18 அக்டோபர் 2007ல் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார், பின்னர் ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப்புடன் ஒரு புரிதலுக்கு வந்தவுடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது, அத்துடன் அவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டன. திட்டமிடப்பட்டிருந்த 2008 பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், அப்போது அவர் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தார், 27 டிசம்பர் 2007ல் பாகிஸ்தான் நகரமான ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் புறப்பட்ட போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.அதற்கடுத்த ஆண்டு, மனித உரிமைகளுக்கான துறையில் ஐக்கிய நாடுகள் சபையின் விருதை வென்ற ஏழு வெற்றியாளர்களில் ஒருவராக அவரின் பெயர் பட்டியலிடப்பட்டது.

குடும்பம்

பெனாசீரின் தந்தையான பிரதம மந்திரி ஜூல்பிகார் அலி பூட்டோ, 1977ல் அப்போதிருந்த முதன்மை இராணுவ தளபதி முஹமது ஜியா-அல்-ஹக்கின் தலைமையில் நடந்த ஓர் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இராணுவ சட்டம் கொண்டு வந்த முஹமது ஜியா-அல்-ஹக், மூன்று மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.இருந்த போதினும், பொது தேர்தல்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மாறாக, கருத்து வேறுபாடு கொண்ட அரசியல்வாதி அஹ்மது ரஜா கசோரியின் தந்தையைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்காக திரு. பூட்டோவை தளபதி ஜியா சிறையிலடைத்தார்.திரு. ஜூல்பிகார் அலி பூட்டோ இராணுவ சட்ட நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்டார்.


இந்த குற்றச்சாட்டு "பொதுமக்களால் பரவலாக சந்தேகிக்கப்பட்ட போதினும், வெளிநாட்டு தலைவர்களால் மிதமாக பல முறையீடுகள் இருந்த போதினும், ஜூல்பிகார் அலி பூட்டோ 4 ஏப்ரல் 1979ல் தூக்கிலிடப்பட்டார். அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதியான தளபதி ஜியாவால் இந்த மிதமான முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன.தூக்கிலிடப்பட்டதற்கு பின்னர், மே மாத இறுதி வரை பெனசீர் பூட்டோவும், அவரின் அன்னையும் ஒரு "போலீஸ் முகாமில்" தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.


1985ல், பெனசீர் பூட்டோவின் சகோதரர் ஷாநவாஜ் பிரான்சில் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டார்.பின்னர் 1996ல், அவரின் மற்றொரு சகோதரரான மிர் முர்தாஜாவின் கொலை, இரண்டாவது முறையாக பிரதம மந்திரியாக இருந்த பதவி காலத்தை ஸ்திரமின்மைக்கு கொண்டு வருவதில் பங்கு வகித்தது.

பெண்களுக்கான கொள்கைகள்


தேர்தல் பிரச்சாரங்களின் போது, பூட்டோ அரசாங்கம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு பிரச்சனை உட்பட பெண்களின் சமூக மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கான அதன் கவலைகளுக்காக குரல் கொடுத்தது.பெண்கள் போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வங்கிகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பூட்டோ அறிவித்தார்.இந்த திட்டங்கள் இருந்த போதினும், பெண்களின் சுகாதார சேவைகளை அதிகரிக்க எவ்வித சட்டத்தையும் கொண்டு வரவில்லை.அவரின் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாகிஸ்தானில் பெண்கள் உரிமையைக் குறைக்கும் முரண்பாடு சட்டங்களை (ஹூதூத் மற்றும் ஜீனா சட்டங்கள் போன்ற) நீக்குவதாக அவர் உறுதியளித்தார். பூட்டோ கருக்கலைப்புக்கு எதிரானவர் என்பதுடன் கருக்கலைப்புக்கு எதிராக அவர் கடுமையாக பேசினார். குறிப்பாக கெய்ரோவில் நடந்த மக்கள்தொகை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச மாநாட்டில் பேசினார். "தமக்கென சொந்த சமூக பண்பாடுகளைக் கொண்டுள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் மதங்களின் மீது கட்டுப்பாடற்ற உடலுறவு, கருக்கலைப்பு, பாலியல் கல்வி மற்றும் இதுபோன்ற பிறவற்றை திணிக்க" மேற்கு விரும்புவதாக அவர் அந்த மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.


ஜீனா சட்டம் இறுதியாக 2006 ஜூலையில் பர்வீஜ் முஷாரப்பினால் வெளியிடப்பட்ட ஜனாதிபதி உத்தரவால் நீக்கப்பட்டது. பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகளின் ஒரு வலையமைப்பான உலக பெண் தலைவர்களின் கழகத்தை நிறுவிய மற்றும் அதில் செயல்பட்டு வந்த ஒரு உறுப்பினராகவும் பூட்டோ இருந்தார்


தாலிபான் கொள்கை

1996 செப்டம்பரில் தாலிபான் காபூலை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.பூட்டோ ஆட்சியின் போது தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் முக்கியத்துவம் பெற்றது. தாலிபான்களை ஒரு குழுவாகவும், அது ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்தும் என்றும், அது மத்திய ஆசிய குடியரசுகளுக்கு வர்த்தக அனுமதியை வழங்கும் என்றும் அந்த காலத்தில் இருந்த பல தலைவர்களைப் போலவே அவரும் கருதினார் என்பது ஆசிரியர் ஸ்டீபன் காலின் கருத்தாகும். அமெரிக்காவைப் போன்றே, அவரின் அரசாங்கமும் தாலிபான்களுக்கு இராணுவத்தையும், நிதி உதவிகளையும் அளித்தது, அத்துடன் ஆப்கானிஸ்தானிற்குள் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறிய பிரிவு ஒன்றையும் கூட அனுப்பியது.


மிக சமீபத்தில், தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அவர், தாலிபான்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றம்மிக்க பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டனம் செய்தார்.



2007 அவசரகால நிலையும், பிரதிபலிப்புகளும்


2007 நவம்பர் 3ல், ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மற்றும் நாட்டில் உள்ள மத தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அவசரகால நிலையை அறிவித்தார்.துபாயில் குடும்பத்தைச் சந்திப்பதற்கான பயணத்தை வெட்டிவிட்டு பூட்டோ நாடு திரும்பினார்.விமான நிலையத்தில் கோஷங்கள் எழுப்பிய ஆதரவாளர்களுடன் அவர் வரவேற்கப்பட்டார்.பல மணி நேரம் அவரின் விமானத்திலேயே இருந்த பின்னர், அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் லாகூர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.பாகிஸ்தான் ஓர் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது என்பதை ஒப்புக்கொண்ட போதினும், முஷாரப்பின் அவசரகால நிலை நீக்கப்பட்டால் ஒழிய, நியாயமான தேர்தல்களை நடத்துவது மிகவும் சிரமம் என்று அவர் குறிப்பிட்டார்."தீவிரவாதிகளுக்கு ஒரு சர்வாதிகாரம் தேவைப்படுகிறது, சர்வாதிகாரத்திற்கு தீவிரவாதிகள் தேவைப்படுகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.



2007 நவம்பர் 8ல், அவசரகால நிலைக்கு எதிராக ஒரு பேரணியை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.



அமெரி்க்காவில் உள்ள நேஷனல் பப்ளிக் ரேடியோவுடனான ஒரு தொலைபேசி நேர்காணலின்போது, "எனக்கு வீட்டிற்குள் உலாவ சுதந்திரம் உள்ளது.வீட்டிற்கு வெளியே உலாவ எனக்கு சுதந்திரம் இல்லை.அவர்கள் வீட்டிற்குள் பலத்த போலீஸ் காவலை ஏற்படுத்தி உள்ளார்கள், என் வீட்டின் நான்கு சுவர்களைச் சுற்றி ஒவ்வொரு பக்கமும் 1,000 பேர் என்ற வகையில் 4,000 போலீஸ்காரர்களின் ஒரு மிக பெரிய போலீஸ் படை உள்ளது.அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களின் வீட்டிலும் கூட நுழைந்திருக்கிறார்கள்.நீங்கள் எங்களுக்காக இருக்கிறீர்களா?நீங்கள் ஒசாமா பின்லேடன் போன்று உங்களுக்கு தெரியவில்லையா? என்று நான் ஒரு போலீஸ்காரரிடன் கேட்டேன்."மன்னிக்க வேண்டும் மேம், இது எங்களின் வேலை.எங்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை நாங்கள் செய்கிறோம்." என்று அவர் தெரிவித்தார்.


அதற்கடுத்த நாள், பூட்டோவின் கைது ஆணை திரும்ப பெறப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. அவர் பயணிக்கவும், பொது பேரணிகளில் தோன்றவும் சுதந்திரம் அளிக்கப்பட்டார்.எவ்வாறிருப்பினும், பிற எதிர்கட்சிகளின் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேச தடைவிதிக்கப்பட்டு இருந்தார்கள்.

படுகொலை

2007 டிசம்பர் 27ல் (பாக்சிங் நாளுக்கு அடுத்த நாள், 2004 இந்திய பெருங்கடல் பூகம்பத்தின் மூன்றாமாண்டு நினைவுதினத்தின் போது), ஜனவரி 2008 பாராளுமன்ற தேர்தல்களுக்கான போட்டியில் கட்சி ஆதரவாளர்களுக்கு ஓர் உற்சாகமான உரையை அளித்த பின்னர், லியாகட் நேஷனல்பாக்கில் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கான ஒரு பிரச்சார பேரணிக்கு புறப்பட்ட போது பூட்டோ கொல்லப்பட்டார்.



அவரின் குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறிய பின்னர், அதன் மேற்கூரையின் வழியாக கூட்டத்தை நோக்கி கையசைக்க பூட்டோ ஏறி நின்றார்.அந்த நிமிடம், ஒரு துப்பாக்கி ஏந்திய மனிதன் அவரை நோக்கி சுட்டான், அதன் தொடர்ச்சியாக வாகனத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன, இதில் சுமார் 20 மக்கள் கொல்லப்பட்டார்கள். மிகவும் கடுமையாக காயப்பட்ட பூட்டோ, ராவல்பிண்டி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.உள்ளூர் நேரம் 17:35க்கு அறுவை சிகிச்சைக்காக உள்ளே கொண்டு செல்லப்பட்ட அவர், 18:16க்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.




பெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட பகீர் காட்சிகள்

பூட்டோவின் உடல் அவரின் சொந்த நகரமான சிந்த்தில் லார்கானா மாவட்டத்தில் உள்ள கார்ஹிகுடா பக் ஷிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்ப கல்லறையில் இடத்தில் அவர் தந்தைக்கு அருகில் எரிக்கப்பட்டார். இந்த இறுதி ஊர்வலத்தில் நூறு ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.



அவர் இறப்பின் காரணத்தில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தன.பூட்டோவின் கணவர் ஒரு பிரேத பரிசோதனைக்கோ அல்லது அறுவை சிகிச்சை ஆய்விற்கோ உட்படுத்த அனுமதி மறுத்து விட்டார். 2007 டிசம்பர் 28ல், பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், "வாகனத்திற்குள் குனிய முயன்ற போது, பூட்டோ கொல்லப்பட்டார், குண்டுவெடிப்பின் அதிர்வலைகள் மேற்கூரையில் இணைந்திருந்த ஒரு லீவரை அவர் தலை மேல் விழச்செய்தது, இதனால் அவர் மூளைஓடு உடைந்தது." என்று அறிவித்தது. எவ்வாறிருப்பினும், அவர் தலையில் உலோகத்துண்டு காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதுவே அவர் மரணத்திற்கான காரணம் என்றும் ஒரு மருத்துவமனை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.  பூட்டோவின் உதவியாளர்களும் உள்துறை அமைச்சகத்தின் கருத்தையே வழிமொழிந்தார்கள்.  டிசம்பர் 31ல், சந்தேகத்திற்குரிய அவசர சிகிச்சை அறை நுழைவு அறிக்கையை சிஎன்என் ஒரு பிடிஎப் கோப்பாக வெளியிட்டது.சிகிச்சைக்கு சேர்த்த அனைத்து மருத்துவர்களாலும் கையெழுத்திடப்பட்டிருந்த அந்த ஆவணம், காயத்திற்குள் எந்த பொருளும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடுகிறது.



அல்-கொய்தா கமாண்டர் [[முஸ்தபா அபு அல்- யாஜித்|முஸ்தபா அபு அல்-யாஜித்]], பூட்டோவை "ஒரு மிக மதிப்புமிக்க அமெரிக்க சொத்தாக" எடுத்துரைத்து, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தார். இந்த படுகொலைக்கு பின்னால் அல்-கொய்தா இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கமும் அறிவித்தது.சிஎன்என் அறிக்கை குறிப்பிட்டதாவது: "தற்கொலைப்படை குண்டுவெடிப்பாளர், நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதாக அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு போராளி குழுவான லஸ்கர் ஐ ஜஹான்ங்வியைச் சேர்ந்தவர் என்று முன்னதாக உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அறிவித்தது".  இந்த படுகொலைக்கு பின்னால் பெய்துல்லாஹ் மெஹ்சூத்தின் மூளை இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது. 54 வயதான பெனாசீரையும், அவருக்கருகில் இருந்த சுமார் 20 பார்வையாளர்களையும் கொல்வதில், 1999ல் முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப்பைக் கொல்ல முயன்ற, அல்-கொய்தாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வஹாபி முஸ்லீம் தீவிரவாத அமைப்பான லஸ்கர் ஐ ஜஹான்ங்வி முழு பொறுப்பாகும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், பூட்டோ குடும்பத்தாலும், பூட்டோவால் தலைமை தாங்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியாலும், பெய்துல்லாஹ் மெஹ்சூத்தினாலும் இது கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது. 2008 ஜனவரி 3ல், பெனசீர் பூட்டோவின் படுகொலையில் பங்களிப்பளிக்கவில்லை என்றும், அவருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க தவறவில்லை என்றும் ஜனாதிபதி முஷாரப் உத்தியோகப்பூர்வமாக மறுத்தார்.



 பாகிஸ்தானில் எதிர்வினை

படுகொலைக்கு பின்னர், ஆரம்பத்தில் அங்கு பல கலகங்கள் தோன்றின, இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட தோராயமாக 20 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.சுமார் 250 கார்கள் எரிக்கப்பட்டன; கோபமும், ஆத்திரமும் கொண்டிருந்த பூட்டோவின் ஆதரவாளர்கள், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியிலிருந்து கற்களை வீசினார்கள். 2007 டிசம்பர் 29 முதல், கலகக்காரர்கள் ஒன்பது தேர்தல் அலுவலகங்களையும், 176 வங்கிகளையும், 34 எரிவாயு நிலையங்களையும், 72 இரயில் கார்களையும், 18 இரயில் நிலையங்களையும், நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் கடைகளையும் சிதைத்து விட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.[118] போட்டி எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ந) -இன் தலைவர் நவாஜ் ஷெரீப், "இது அவர் கட்சிக்கும், நம் கட்சிக்கும் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஏற்பட்டிருக்கும் சோகம்" என்று குறிப்பிட்டார்.  ஜனாதிபதி முஷாரப் மூன்று நாட்களைத் துக்க நாளாக அறிவித்தார்.



2007 டிசம்பர் 30ல், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களின் ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில், 19 வயது நிரம்பிய பெனாசீரின் மகன் பிலாவல் அவர் அன்னை வகித்த கட்சியின் தலைமை பதவியை வகிப்பார் என்றும், அவர் மகன் ஆக்ஸ்போர்டு கிறிஸ்ட் சர்ச்சில் அவர் படிப்புகளை முடிக்கும் வரை கட்சியை அவர் தந்தை நடத்துவார் என்றும் மனைவியை இழந்திருந்த பெனாசீரின் கணவர் ஆசீப் அலி ஜர்தாரியும், மகன் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும் அறிவித்தார்கள். "நான் திரும்பும் போது, என் அன்னை விரும்பியவாறே கட்சியின் தலைமை ஏற்று நடத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்." என்று பிலாவல் தெரிவித்தார்.2008 ஜனவரி 8ல் திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்ற தேர்தல்கள் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட பாகிஸ்தான் மக்கள் கட்சி அழைப்பு விடுத்தது, மேலும் துணை தலைவர் மக்தூம் அமீன் பாஹிம் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக இருக்க கூடும் என்று ஆசீப் அலி ஜர்தாரி அறிவித்தார். (பாராளுமன்ற தேர்தலில் நிற்க பிலாவல் சட்டரீதியாக வயது பூர்த்தி அடையாமல் இருந்தார்.)



பெனாசீரின் படுகொலை குறித்து விசாரணை நடத்துவதில் இங்கிலாந்து அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் உதவ வேண்டும் என்று டிசம்பர் 30ல், பூட்டோவின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கேட்டுக் கொண்டது. பிலாவல் பூட்டோ ஜர்தாரி மறைந்த எதிர்கட்சியாக இருந்த அவர் அன்னையின் பாகிஸ்தான் அரசியல் கட்சியின் சேர்மேனாக நியமிக்கப்பட்டார். பிலாவல் 19 வயது மட்டும் நிரம்பி இருந்தார். பாகிஸ்தான் திரும்புவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது அவர் கொல்லப்படுவதற்கு வெறும் 12 வாரங்களுக்கு முன்னர், பெனசீர் எழுதிய திருமதி. பூட்டோவின் அரசியல் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சி 2008 பிப்ரவரி 5ல் வெளியிட்டது. கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் கணவர் ஆசீப் அலி ஜர்தாரி கட்சியின் தலைவராக இருப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



சர்வதேச எதிர்வினை

பூட்டோவின் படுகொலைக்கு சர்வதேச எதிர்வினை, சர்வதேச சமூகத்திடையே மிக வலுவான கண்டனத்தைக் கொண்டிருந்தது.ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, அந்த படுகொலைக்கு ஒருமனதாக கண்டனம் தெரிவித்தது. அரேபிய லீக்கின் ஜெனரல் செக்ரட்டரி அமர் மௌஸ்சா, "நாங்கள் இந்த படுகொலையையும், பயங்கரவாத நடவடிக்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம், அவரி்ன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்." என்று தெரிவித்தார்.  இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் கூறுகையில், "திருமதி. பெனாசீரின் பூட்டோவின் கொடுமையான படுகொலையைக் கேட்டு தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும்... ஒரு பயங்கரமான வீச்சை சந்தித்திருக்கும் அவர் குடும்பத்திற்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்" அறிவித்தார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஜோர்டான் பிரௌன், "பெனசீர் பூட்டோ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் பாகிஸ்தானில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய பயங்கரவாதிகளை அனுமதிக்க கூடாது. மேலும் இங்கோ, அங்கோ அல்லது உலகின் எங்குமே பயங்கரவாதிகள் வெற்றி பெற முடியாது என்ற நமது உறுதிப்பாட்டை இந்த கொடூரம் மேலும் பலப்படுத்துகிறது." என்று தெரிவித்தார். "பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் நடத்தப்பட்டது" என்று இந்த படுகொலையைக் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோசோ, "பாகிஸ்தான் அதன் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப அதன் பாதையில் உறுதியாக நிற்கும் என்று நம்புவதாகவும்" குறிப்பிட்டார்.  "கொலைகார தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான நடவடிக்கை" என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ், "ஜனநாயக நிகழ்முறைக்காக தைரியமாக பெனசீர் பூட்டோ தம் வாழ்வையே அளித்தார். ஜனநாயக நிகழ்முறையை தொடர்வதன் மூலம் அவர் நினைவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று பாகிஸ்தானை அவர் ஊக்குவித்தார்.  "அவரின் குடும்பத்திற்கும், மற்றும் மொத்த பாகிஸ்தான் தேசத்திற்கும் புனித தந்தை அவரின் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆன்மீக ஆசிகளைத் தெரிவிக்கிறார்." என்று கூறி, வாடிகன் வெளியுறவுத்துறை செயலாளர் டார்சியோ பெர்டோன், போப் பெனிடெக்ட் XVI -இன் வருத்தத்தை தெரிவித்தார்.  "பாகிஸ்தானின் எதிர்கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது" என்றும், "இந்த பயங்கரவாத தாக்குதலை சீனா பலமாக கண்டிக்கிறது" என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குன் கேங்க் தெரிவித்தார். 


ஸ்காட்லாந்து படை புலனாய்வு

அந்த படுகொலை குறித்து விசாரிக்க பிரிட்டிஷ் புலனாய்வாளர்களைப் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.குற்ற சம்பவங்கள் நீண்டிருப்பதாலும், ஆசீப் ஜர்தாரி பிரேத பரிசோதனைக்கு மறுக்கும் காரணத்தாலும் புலனாய்வில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கான தடைகளை வெளியிட்டிருந்த போதினும், 2008 பிப்ரவரி 8ல், வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேற்கூரையில் இருந்த பிடியால் ஏற்பட்ட விளைவால் பெனசீர் பூட்டோ கொல்லப்பட்டதாக அவர்கள் அறிவித்தார்கள்.





















zulfikar ali bhutto, benazir bhutto, bhutto, benazir, benazir bhutto pictures, benazir bhutto biography, benazir bhutto death, benazir bhutto assassination, benazir bhutto photos, images of benazir bhutto, benazir bhutto wiki, benazir bhutto video, benazir bhutto hot, bilawal bhutto, bhutto, benazir, benazir bhuto, benazir bhutto, bhutto benazir, zulfiqar ali bhutto, benazir bhutto pic,

3 comments:

Anonymous said...

யேயப்பா சூப்பர்..இவ்ளோ தகவல்களா..ஃபோட்டோஸ் எல்லாம் சூப்பர்

Madurai pandi said...

பொது அறிவு களஞ்சியமா இருக்கு..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Speed Master said...

பகிர்தலுக்கு நன்றி என் தங்கைக்கு இந்த பெயர்தான் வைத்தேன்