-

உங்கள் வலைதளத்தின் அலெக்சா ரேங்கிங் , Backlinks அதிகரிக்க..

வலைபதிவு வைத்திருக்கும் எல்லோருக்கும் அலெக்சா ரேங்கிங் அதிகமாக வேண்டும் என்று நினைப்பது இயல்பு.  தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் நமக்கு Backlinks மிக முக்கியம். (Backlinks - இதுக்கு தமிழ்ல என்னனு யாராவது சொல்லுங்கப்பா) . Backlinks அதிகமாக அதிகமாக உங்கள் ப்ளாக் அதிக பிரபலமாக ஒரு சிறந்த வழியாக இது இருக்கும்.அதற்கு என்ன செய்வது என்று சுருக்கமாக சொல்கிறேன்.



1. உங்கள் தளத்தில் dashboard--> layout- -> Edit HTML செல்லுங்கள்

2. Expand Widget Template சென்று இருக்குமிடத்தில் கிளிக் செய்யவும்.

3. அதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை சவேசெய்து கொள்ளுங்கள்.

4. அதன் பின்னர் பின்வரும் வரியை கண்டுபிடியுங்கள் .

<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

5. அந்த வரியில் rel='nofollow' என்ற வார்த்தையை  rel='dofollow'  என்று மாற்றிவிடவும்.. அல்லது rel='nofollow'வார்த்தையை நீக்கி விடவும். (காரணம், அந்த nofollow நீக்கி விட்டால் தானாகவே dofollow என்று வலைத்தளம் எடுத்துகொள்ளும்.)

இதை ஏன் செய்கிறோம் என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக தேடுதளங்களில் நம்முடைய பதிவின் Body பகுதில் உள்ள வார்த்தைகளை மட்டுமே தேடும். பின்னூட்டத்தில் தேடாது. மேற்சொன்ன மாற்றத்தை நீங்கள் செய்து விட்டால், உங்கள் தளத்தில் வேறு யாராவது பின்னூட்டம் இட்டாலோ அல்லது நீங்க வேறு தளத்தில் பின்னூட்டம் இட்டாலோ அதில் உள்ள வார்த்தைகளையும் தேடும். பின்னூட்டத்தில் உங்கள் தளத்தின் முகவரியோ அல்லது உங்கள் பதிவின் இணைபையோ கொடுத்து விட்டு, அதற்குரிய சிறிய விளக்கமும் கொடுத்தால், நிச்சயம் உங்கள் ஹிட்ஸ் சில நாட்களில் அதிகமாகும் என்பது 100% உண்மை..

உதாரணதிற்கு  ஒன்று சொல்கிறேன்..

என்னுடைய தளம் அதிகமாக கூகிள் தேடலில் வந்தால், எனக்கு அதிக Backlinks உள்ளது என்பது தெளிவான ஒன்று.. அதேநேரம், என்தளத்தில் வந்து எனது பதிவை பற்றி கருது சொல்லிவிட்டு உங்கள் தளத்தின் இனைபையும் கொடுத்தால், உங்களுக்கு கூகிள் தடலில் அதிக ஹிட்ஸ் கிடைக்க வாய்ப்புண்டு.. இதே போல உங்கள் தளம் அதிக கூகிள் தேடல் இல்லை என்றாலும் நான் உங்கள் தளத்தில் பின்னூட்டத்தில் எனது இணைப்பை கொடுத்தால், நம் இருவருக்குமே ஹிட்ஸ் அதிகமாகும். (இதுக்குத்தானா இவ்ளோ பில்ட் அப்புனு கேட்காதிங்க.) நீங்க என்னோடதும், நான் உங்க பின்னோட்டத்தையும் பதிவிடாம போனா உங்களுக்கும் ஹிட்ஸ் கிடைக்காது எனக்கும் ஹிட்ஸ் கிடைக்காது.

பொதுவா நம்ம வலைபதிவு உலகில் அடுத்தவர் பதிவில் நம்முடைய இணைப்பை கொடுத்தால் எதோ கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். அது என்னைபோல அதிக ஹிட்ஸ் இல்லாத பதிவர்களுக்கு இல்லை. பிரபல பதிவர்கள் எப்படியும் ஹிட்ஸ் கிடைக்க பெறுவார்கள். மற்றவர்கள் இது போல தொழில்நுட்ப ஜாலங்கள் செய்தால் மட்டுமே அலெக்சா ரேங்கிங் மற்றும்  Backlinks அதிக படுத்த முடியும்.

9 comments:

Unknown said...

பதிவர்களுக்கு மிக பயனுள்ள பதிவு..

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .
இது அனைவருக்கும் பயனுள்ள பதிவு .
பகிர்வுக்கு நன்றி ...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

சக்தி கல்வி மையம் said...

நறுக்குனு 3 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

Sathish said...

thank you bharathbharathi, sakthistudycentre-கருன்...

சி.பி.செந்தில்குமார் said...

அட .. கலக்கறீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

>>>நம் இருவருக்குமே ஹிட்ஸ் அதிகமாகும். (இதுக்குத்தானா இவ்ளோ பில்ட் அப்புனு கேட்காதிங்க.) நீங்க என்னோடதும், நான் உங்க பின்னோட்டத்தையும் பதிவிடாம போனா உங்களுக்கும் ஹிட்ஸ் கிடைக்காது எனக்கும் ஹிட்ஸ் கிடைக்காது.

Read more: உங்கள் வலைதளத்தின் அலெக்சா ரேங்கிங் , Backlinks அதிகரிக்க.. -|- Sathish


இந்த டீல் நல்லாருக்கே...

Unknown said...

னா ரொம்ப தான்க்க்சுங்கன்னா

இப்ப சரியா!

Sathish said...

thanks cp senthi, viki ulagam

TJ said...

அருமையான தகவல்....