-

ஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு



பாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 ல், காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்.




இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு,காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அகில உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

இவர் பண்டிட் நேரு என்றும்,( பண்டிட் என்றால் சமஸ்கிருதத்தில் "கல்வியாளர்" என்று அர்த்தம்) இந்தியாவில் பண்டிட்ஜி என்றும் அழைக்கப்பட்டார். (ஜி என்பது பெயருக்கும் பின் மரியாதை நிமித்தமாக சேர்க்கப்படுகிறது), வழக்குரைஞரும், செல்வந்தரும், அரசியல்வாதியுமான, மோதிலால் நேருவின் மகனான நேரு, மிக இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸின் இடது சாரி தலைவரானார்.
மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸின் தலைவரானார்.நேரு துடிப்புமிக்க, மற்றும் புரட்சித் தலைவராக , ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுத்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி கெளரவம் நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம, உலகியல்வாதம், ஏழைகள் , தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அக்கறை, போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அவை, சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை "நவீன இந்தியாவின் சிற்பி " என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள்,இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக சேவை புரிந்திருக்கிறார்கள்.

வாழ்க்கை வரலாறு:

இன்றைய,உத்திரப் பிரதேசம் மாநிலம் அலஹாபாத்தில் செல்வந்தர் மற்றும் வழக்குரைஞருமான மேதிலால் நேரு|மோதிலால் நேருவுக்கும் ஸ்வருப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார்.உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்ற வார்த்தையிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.


காஷ்மீர் மக்கள்|காஷ்மீர் அய்யர்|பிராமண குலத்தில் இருந்து வந்தவர்கள் நேரு குடும்பத்தார். பல வருடங்களுக்கு முன்பாகவே அலகபாத்திற்கு வந்து வெற்றிகரமான வழக்குரைஞர்தொழில் புரிந்தார். இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேரு மற்றும் அவரின் இரு சகோதரிகளுமான,விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரியமாளிகையில் வளர்க்கப்பட்டனர். இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர். அவர்களுக்கு,ஹிந்தி மொழி, சமஸ்கிருதம்,மற்றும் இந்தியக்கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.


மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர்,பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும் , தங்குமிடத்தின் நிலை வீட்டில் இருந்து வெகுதொலைவு வந்ததை உணர்த்தியது, மற்றும் தாங்கமுடியாததாக இருந்ததாக உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் இன் நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி,ட்ரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார்.

சுதந்திர வெளிப்பாட்டிற்கு பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம்,வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.. ஹாரோ மற்றும் கேம்ப்ரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை, மாறாக தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் வருட இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார்.சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.


எப்படியோ விரைவில் அவரை அரசியல் ஆட்க்கொண்டது.குறிப்பாக காங்கிரஸ் நடத்திய இந்திய சுதந்திரப் போராட்டம் . 1919 இல் ஜாலியன்வாலாபாகில் போராட்டக்காரர்களை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது, நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் மகனின் அரசியல் பிரவேசம் மோதிலாலுக்கு, பிடிக்காவிட்டாலும், இந்திய சுதந்திரத்தின் நோக்கத்தில் காங்கிரஸின் முயற்சியில் கடைசியாக அவரும் சேர்ந்து கொண்டார். நேரு, மிக வேகத்தில் காந்தியின் நம்பிக்கைக் குரிய வரானார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும்,அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது.

சிறையில் இருந்த நாட்களில்,நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934)," சுயசரிதை,"(1936) மற்றும் "இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய அரசியல் கௌரவம் மகாத்மா காந்திக்கு அடுத்தப்படியாக மதிக்கப்பட்டது.

கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை, 1916 பிப்ரவரி 8 இல் மணந்தார். அவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார்,ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார்.நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைஸ்ராயான எட்வினா மவுன்ட்பேட்டனுடன் தொடர்புப்படுத்தி வதந்திகள் வந்தன. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகள் மற்றும் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவர்களுடன் வாழ்ந்தார்.
























































jawaharlal nehru medical college, india, rajasthan, india.com, kashmir, jnpt, jawaharlal nehru university, rangoli, www.sbi.co.in, indian express, gujarat samachar, jawaharlal nehru, nehru history, prime minister nehru, nehru autobiography, nehru biography, jawaharlal nehru university new delhi, jawaharlal nehru biography, pandit jawaharlal nehru, speech of jawaharlal nehru, about jawaharlal nehru, jawaharlal nehru port trust, jawaharlal nehru photos, picture of jawaharlal nehru, pt. jawaharlal nehru, jawaharlal nehru quotes, biography of jawaharlal nehru, jawaharlal nehru national solar mission, life of jawaharlal nehru, jawaharlal nehru stadium, indian express, india, rajasthan, kashmir, india.com, rangoli, indian express, jawaharlal nehru technological university results, gujarat samachar, www.sbi.co.in, jawaharlal nehru, nehru jawaharlal, jawaharlal nehru university entrance exam, jawaharlal nehru vishvavidyalaya, jawaharlal nehru university in delhi, jawaharlal nehru university delhi, jawaharlal nehru univ, jawaharlal nehru university, jnpt, pandit nehru, autobiography of nehru, nehru autobiography, jawaharlal nehru university admission, pandit jawaharlal, nehru biography, biography of nehru, biosketch of jawaharlal nehru, autobiography of jawaharlal nehru, jawaharlal nehru autobiography,

9 comments:

சேலம் தேவா said...

அரிய படங்களை தொகுத்துள்ளீர்கள். :)

Chitra said...

Thank you.

Speed Master said...

இவரின் பஞ்சசீல கொள்கையின் விளைவு தான் நாம் இன்று
படும் பாடு

ஸ்பெக்ரம் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் வழி வகுத்தவர்

திருப்பூர் சரவனக்குமார் said...

உண்மையிலேயே மிக மிக அரிய புகைப்படங்கள்...

Raja said...

அரிய படங்களை தொகுத்துள்ளீர்கள் நன்றி...படங்களில் உள்ள பிரபலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கலாம் .....

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்.. நேத்துக்கூட நல்லாத்தானே பேசிட்டு இருந்தீங்க.. என்ன ஆச்சு? இப்படி நல்ல பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க.. பாருங்க இனி நானும் இதே மாதிரி ஒண்ணு போட்டாகனும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமான பதிவு..

Anonymous said...

hai sathish!this is prisy its very useful,ur website is simply superb and also ur way of speech

Anonymous said...

hai ur slang is nice and i was impressed by pricy