ஆனால் சாகும் வரை குடிசையிலும், வாழும் போது வறுமையிலும் வாடி நாட்டுக்காக பல நல்ல காரியங்கள் செய்த கக்கன் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கலைஞரை பற்றி பக்கம் பக்கமாய் படிக்கும் இன்றைய பள்ளி குழந்தைகள் பாட புத்தகத்தில், கக்கனுகென்று நிலையான பக்கங்கள் இல்லாதது வருத்தமானது..
கக்கன் (Kakkan, ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981), தலித் இனத் தலைவர், விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.
இளமைக்காலம்
கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர் . தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.
இந்திய விடுதலை போராட்டம்
கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி
கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார்.
நற்பணிகள்
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
இறுதி காலம்
1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப்பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
அரசு மருத்துவமனையில் இடமில்லாமல்....
மேனாள் தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கும் பொருட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கே தற்செயலாக படுக்க படுக்கை கூட இன்றி தரையிலே படுத்துக் கிடந்த ஒரு நோயரைக் கண்டதும் அவரருகில் சென்று அவர்நிலை கண்டு வருந்தினார். அந் நோயர் வேறு யாருமல்லா். தியாகி கக்கனே!
தனிக் கருத்து போக்கு
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குறிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் பெரியார் உறுதியுடன் சென்னை மெரினாவில் திராவிடர் கழகம் சார்பில் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றார்.
.
7 comments:
ஒரு பெரிய தலைவரை பற்றி எழுதியதுக்கு உங்களுக்கு என் நன்றிகள்.
அவரது கடைசி காலம் கலங்க வைக்கிறது. சுயநலம் இல்லாத நேர்மையானவர்களின் இறுதிகாலம் பெரும்பாலும் இப்படிதான் கழியும் போல...!?
இவரை பற்றி இன்றைய மாணவர்கள் நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டும்.
ஒரு பெரிய தலைவரை பற்றி எழுதியதுக்கு உங்களுக்கு என் நன்றிகள்.
இவரை பற்றி இத்தனை விரிவாக வாசித்தது இல்லை. பகிர்வுக்கு நன்றி.
Kousalya, chitra sister,karun
thanx you all
பகிர்விற்கும் நினைவிர்கும் நன்றி
சுதந்திர இந்தியாவின் இந்தியாவின் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக (1946-1950), மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக (1951-1957), மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அந்த அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் (1957-1962), சமயநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (1962-1967), அந்த அரசின் விவசாயத்துறை அமைச்சராகவும் ( 1962-1963), பின்பு மாநில உள்துறை அமைச்சராகவும் (1963-1967) வரை பல்வேறு உயர்ப்பதவிகளை வகித்த ஒருவரின் புகைப்படம் கூட நமக்கு தாபால் தலை வடிவத்தில்தான் கிடைக்கிறது என்பது ஒரு சோகம். இறுதிநாட்களின் அரசு மருத்துவமனையில் படுக்க இடமிலாமல் தரையின் கிடந்தார் என்பது நாடு வெட்கப்படவேண்டிய ஒரு விஷயம். அவர் அமைச்சராக இருந்தப்போது, எங்கு சென்றாலும் போது பேருந்தில் பயணச்சீட்டு வாங்கித்தான் பிரயாணம் செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான், அவரின் இறுதிக்கால ஏழ்மை! இவரை போன்ற பிழைக்கத்தெரியாத மற்றொருவர் நம்ம கர்மவீரர். தற்காலத்தில் அப்படி ஒருவர் உள்ளாரென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சின் நல்லக்கண்ணு ஒருவர்தான் என்பது கேள்வி. எல்லோரும் படிக்கவேண்டிய ஒரு அருமையானப் பதிவு. வாழ்த்துக்கள் நண்பா!
@M.S.E.R.K.
உண்மைதான் நண்பரே.. இவருடைய புகைப்படம் எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லை.. யாராவது லிங்க் கொடுப்பார்களா என்று காத்திருக்கிறேன்..
Post a Comment