டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு அல்லது முதலாம் குளோடியசு (ஆகஸ்ட் 1, கிமு 10– அக்டோபர் 13, கிபி 54) என்பவன் நான்காவது ரோமப் பேரரசன். இவன் ஜனவரி 24, கிபி 41 முதல் இறக்கும் வரை கிபி 54 வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய பிரான்சில் பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன்.
-
கார்பன் நானோகுழாய்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் carbon nanotubes
கார்பன் நானோகுழாய்கள் (CNTக்கள்) என்பவை உருளைவடிவ நானோகட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். நானோகுழாய்கள் நீளம்-விட்டம் விகிதத்தில் 28,000,000:1 வரை உருவாக்கப்படுகின்றன, இவை மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமானது ஆகும். இந்த உருளை வடிவ கார்பன் மூலக்கூறுகள் புதுமையான பண்புகளை உடையவை, அதனால் அவை நானோதொழில்நுட்பம், மின்னணுவியல், ஒளியியல் மற்றும் மற்ற பொருட்கள் அறிவியல் துறைகள் ஆகியவற்றில் ஆற்றல்மிக்க பல பயன்பாடுகள் உருவாக்கப் பயனுள்ளதாக இருக்கின்றன, அத்துடன் கட்டடக்கலைத் துறைகளிலும் ஆற்றல்மிக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு
இவரது குடும்பம் வியட்நாம் திரைப்பட துறையில் பங்காற்றுகிறது. இவரது பாட்டனார் லியன் ஃபெங் வான் என்ற தற்காப்புக்கலையை உருவாக்கியவர். இவரது அண்ணன் சார்லி ஙுயென் ஒரு திரைப்பட இயக்குநர். இவரது தாய் சீனாவை சேர்ந்தவர். மேலும் இவருக்கு ஒரு தமக்கையும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.
சலார் ஜங் அருங்காட்சியகம்
சலார் ஜங் அருங்காட்சியகம் இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் மூசி ஆற்றின் தென்கரையில் உள்ள தார் உல் சிஃபாவில் அமைந்துள்ளது. இது ஒரு கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.
லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum), தென் கென்சிங்டனின், கண்காட்சித் தெருவில் அமைந்துள்ள மூன்று பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்று. அறிவியல் அருங்காட்சியகமும், விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகமும் ஏனைய இரண்டும் ஆகும். இதன் முன்புறம் குரோம்வெல் சாலையில் அமைந்துள்ளது. பண்பாடு, ஊடகம் மற்றும் விளையாட்டு வாரியத்தின் ஆதவுடன் இயங்கும் ஒரு பொது நிறுவனமாகும்.
இந்த புகைப்படம் மிக பெரிய அளவு கொண்டது. இதை டவுன்லோட் செய்து பொறுமையாகவும் பார்க்கவும் :-) |
இத படிங்க முதல்ல
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.
உங்கள் புகை படங்களை ஸ்டைலான வீடியோ ஸ்லைட் ஷோவாக மாற்ற
சமீபத்தில் ஒரு தளம் கண்ணிற்கு பட்டது. உங்கள் போடோக்களை எல்லாம் மிக ஸ்டைலான ஸ்லைட் ஷோவாக மாற்றி தருகிறது. வித விதமான வீடியோவாகவும். பல விதமான பின்னணி இசையும் கலக்கலாக நாமே தேர்வு செய்து உருவாக்கலாம். இது ஊர் சுற்றி பார்க்கும் மக்களுக்காக என்றாலும் நாமும் அதை அழகியலாக உபயோகபடுத்தலாம். வீடியோ ஓடும் போது ஏதேனும் புகைபடத்தில் கிளிக் செய்து பார்க்கும் புதிய தொழில்நுட்பம் கூட இதில் உண்டு. கீழே ஒரு வீடியோ உதாரணத்திற்காக
சார்லமேன் - ஒரு பக்க வரலாறு
சார்லமேன் -கி.பி 800 -களில் பிராங்குகளின் அரசர். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலியைக் கைப்பற்றிய இவர், கிபி 800 டிசம்பர் 25 ஆம் நாள் பேரரசர் அகஸ்டஸ் என்னும் பெயருடன், மூன்றாம் பாப்பரசர் லியோவினால் முடிசூட்டப்பட்டார். இவர் கான்ஸ்டன்டினோப்பிளில் அமைந்திருந்த பைசன்டைன் பேரரசருக்குப் போட்டியாக விளங்கினார். கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக கலை, மதம், பண்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட கரோலிங்கிய மறுமலர்ச்சிக்கும் இவரது ஆட்சி காரணமாக அமைந்தது.
இவரது வெளிநாட்டுக் கைப்பற்றல்களும், உள்நாட்டில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும், மேற்கு ஐரோப்பாவிற்கும், மத்திய காலத்துக்கும் ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுத்தன. பிரான்ஸ், ஜேர்மனி, புனித ரோமப் பேரரசு ஆகியவற்றின் அரசர்கள் பட்டியலில் இவர் முதலாம் சார்ல்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
நீரோ மன்னன் - ஒரு பக்க வரலாறு
கனிமொழி - ஒரு பக்க வரலாறு
கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, தற்போது இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகள். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.
மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. அதற்கு அடுத்த ஆண்டு கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவருக்கு அப்போது வயது 44. (இதுல உள்குத்து எதுவும் இல்லை சாமியோவ்)
சில கேள்விகள் சில விளக்கங்கள்
பொதுவா தேர்தல் வந்தாலே நமக்கு எப்பவும் ஒரு குழப்பம் இருந்துட்டே இருக்கும். இந்த முறை யாருக்கு ஒட்டு போடலாம், யாருக்கு போட வேண்டாம்னு மனசுக்குள்ளே ஒரு பட்டி மன்றமே நடத்துவோம். ஆனால் இந்த முறை அந்த குழப்பமே இல்லாமல் மக்கள் வாக்களித்து இருகிறார்கள் என்பது நேற்று தெளிவானது. என்னமோ ஜெயலலிதா மீது மக்களுக்கு திடீர்னு பாசம் வந்துருச்சுன்னு யாரும் நினைக்க போறதில்ல. கண்டிப்பா எல்லோருக்கும் தெரியும், அந்த தமிழின துரோகியை வீட்டுக்கு அனுப்பிடுவோம் என்று. எனக்கு அப்பவே பட்சி சொல்லுச்சு, நிச்சயம் காட்சிகள் மாறும்னு.
என்னை கவர்ந்த பாடல்
நம்ம நாட்டின் மதிப்பு நம்ம மக்களுக்கு தெரியுதோ இல்லையோ மற்ற நாட்டு மக்களுக்க் நல்லாவே தெரியும் போல. சமீபத்தில் இரண்டு வீடியோக்களை பார்த்தேன். கென்யா நாட்டை சேர்ந்தவர்களை கொண்டு நம் நாட்டின் ஜன கன மன பாடல் மற்றும் வந்தேமாதரம் பாடல்களை படமாகி உள்ளனர். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது,உங்களோடும் பகிர விரும்புகிறேன். நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary
சமீபத்தில் BBC-யின் "Home" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய முதல் ஆவணபடமாகிய இந்த படத்தை Luc Besson, என்ற தயாரிப்பாளர் உதவியால் எடுத்து இருக்கிறார். இதற்கு பின்னணி குரல் கொடுத்து இருப்பவர் Glenn Close. இந்த படம் 54 நாடுகளில் 120 இடங்களில் 217 நாட்கள் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது. இந்த படத்தில் சிறப்பம்சமே முழுக்க முழுக்க டாப் ஏங்களில் படம் பிடிக்கப்பட்டது தான். அதாவது முழு படமும் நீங்கள் ஹெலிகாப்டரில் இருந்தோ அல்லது சிறிய விமானத்தில் இருந்தோ பார்ப்பது போன்றே இருக்கும். ஒரு முறை கூட பூமியில் உள்ள நிலத்தை தொட்டு ஒரு காட்சிகள் கூட இருக்காது. தரையில் இருந்து 50-100-200 அடி உயரத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு உங்களுக்கு மிகுந்த வித்தியாசமான உணர்வை தரும். கடந்த 2 லட்சம் வருடங்களில் நம்முடைய பூமி பந்து எவ்வளவு மாறியிருக்கிறது என்றும் இனி எப்படியெல்ல வீணாய் போக போகிறது அல்லது நாம் எப்படி அதையெல்லாம் மீறி நம்முடைய வளங்களை காபாற்றபோகிறோம் என்பது போன்ற விமர்சனங்கள் கருத்துகளை முன் வைக்கிறது இந்த ஆவண படம்.
வெளிநாட்டவர் வளர்த்த தமிழ்
செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.
டிராபிக் ராமசாமி
டிராபிக் ராமசாமி (வயது 75) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்திய பொதுநலசேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை சீர்படுத்துவது இவரது பழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது அவரது பாணி.
இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார். ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.
Area 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்
என்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்பார்ப்பதாக சொல்லி இருந்தார்கள். ஒரு சிலது மட்டுமே பெரிய பதிவாக எழுத முடியும், சிலது பத்து வரிகளில் கூட முடிந்து விடும், சிலது ஒரே வீடியோ கூட போதும். இந்த பதிவில் ஏரியா 51 பற்றிய விபரத்தை தொகுத்து எழுதுகிறேன்.
உங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger
இன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும் லோட் ஆக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உங்கள் தளத்தில் பொதுவாக ஒவ்வொரு மாதத்தில் உள்ள பதிவுகளும் அதன் லிங்க் லோட் ஆகும், அதனால் கொஞ்சம் தாமதமாகவே உங்கள் பக்கம் தெரிய தொடங்கும். இனி நான் சொல்லும் முறையை கொஞ்சம் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் முன்பை விட உங்கள் தளம் சற்று வேகமாகவும் இயங்கும், மாறுபட்டு தெரியும். உதாரணத்திற்கு என்னுடைய தளத்தையே சொல்லலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். முன்பு எப்படி தோற்றமளித்தது, பின்னர் எப்படி மாறியது என்று.
பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan
சமீபத்தில் திரை இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னமும் என்னுடைய தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இந்த அற்புத நாவலை படிக்காமல் இருப்பது வருத்தமான விஷயம். அதை கருத்தில் கொண்டு இந்த நாவலை பற்றி சிறு குறிப்பும், முழு நாவலை தரவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த பதிவு உதவும். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy
பொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம் ஆஸ்கார் கிடைக்காதது நல்லது தான் என்ற ரீதியில் பேசுவதுண்டு. உண்மையில் இந்திய படங்களுக்கு கொடுத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்பது ஆஸ்கார் குழுவின் எண்ணம், அதனால் கடைசி பிரிவு வரை இந்திய படங்களை கொண்டு சென்று விட்டு ஏதாவது ஒரு காரணம் சொல்லி விருது தராமல் புறந்தள்ளி விடுவதுண்டு..
உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories
இந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் சொல்லி இருக்காரு. நாம பத்திரிகைல படிக்கற மாதிரி எல்லா விஷயங்களும் உண்மையாவே அப்படியே நடக்கறது இல்ல. தொலைகாட்சியில் பாக்கற மாதிரி எதுவும் நிஜம் இல்லை. கேமரா கோணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு நம்மை ஏமாற்றபடுவது தான் உண்மையாகவே நடக்குது.
ஆஸ்கார் விருதுகள் 2011
இந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லையென்றால் நம்ம ரகுமானுக்கு. கடந்த முறை 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உங்கள் தளத்தில் Table of Contents கொண்டு வர எளிய முறை
உங்கள் தளத்தில் Table of Contents கொண்டு வர எளிய முறை ஒன்றை சொல்ல போகிறேன். இதன் உபயோகம் யாதெனில் உங்கள் தளத்தில் உள்ள அணைத்து பதிவுகளின் இணைப்பும் ஒரே இடத்தில வந்து விடும். உங்கள் வலை தளத்தில் பதிவின் கீழேயோ அல்லது தனி பக்கம் உருவாகியோ இதை நிறுவிக்கொள்ளலாம். இதனால் ஒருபோதும் உங்கள தளம் ஓபன் ஆக தாமதமாகாது.
உங்கள் தளம் வேகமாக ஓபன் ஆக ஒரு சிறந்த வழி
உங்கள் தளம் வேகமாக ஓபன் ஆக ஒரு சிறந்த வழி உண்டு என்றால் அது நீங்கள் மேற்கொள்ளும் சில வழிமுறைகள் தான். தேவை இல்லாத Gadgets வைப்பது கூடாது. பெரிய படங்கள் கூட வைக்கலாம், அனால் பெரிய கொள்ளளவு கொண்ட படங்களை போட கூடாது. தேவையில்லாமல் பின்னூட்டங்கள் உங்கள் தளங்களில் போடுவதை தவிர்க்க Anonymous சேவையை நிறுத்துங்கள். மேலும் பின்னூட்டங்கள் அதிகம் இருந்தால் உங்கள் தளம் ஓபன் ஆக நேரம் பிடிக்கும். அதற்கு ஒரு மாற்று வழி சொல்லவே இந்த பதிவு.
மானம் கெட்ட தமிழன்
தமிழ்நாட்டில் மானங்கெட்டவன் என்ற வார்த்தை தமிழனுக்கே, அதுவும் ஒட்டு போடுகிற மக்களுக்கே பொருத்தமான வார்த்தை. காவிரி பிரச்சனை, இலங்கை மீனவர் படுகொலை, எஸ் பேண்ட் விவகாரத்தில் 2 லட்சம் கோடி ஊழல், கங்கை காவிரி இணைப்பு என எத்தனையோ விஷயத்தை மறந்து விட்டு யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ஒட்டு போடுவதற்கு என்று அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஏன்னா இப்போதைக்கு அவனுக்கு அது தான் பிரச்சனை.
உங்கள் வலைதளத்தின் அலெக்சா ரேங்கிங் , Backlinks அதிகரிக்க..
வலைபதிவு வைத்திருக்கும் எல்லோருக்கும் அலெக்சா ரேங்கிங் அதிகமாக வேண்டும் என்று நினைப்பது இயல்பு. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் நமக்கு Backlinks மிக முக்கியம். (Backlinks - இதுக்கு தமிழ்ல என்னனு யாராவது சொல்லுங்கப்பா) . Backlinks அதிகமாக அதிகமாக உங்கள் ப்ளாக் அதிக பிரபலமாக ஒரு சிறந்த வழியாக இது இருக்கும்.அதற்கு என்ன செய்வது என்று சுருக்கமாக சொல்கிறேன்.
விவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்
உண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல.
நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து நான் இதுவரை எதையும் பார்க்க வில்லை வறுமையை தவிர.. உழைத்து உழைத்தே உடல் வழி தீர்க்க புகைபிடித்து பலியானார் தந்தை, மிச்ச உயிரையும் உருக்கி படிக்க வைத்தார் என் தாய்.
அப்துல் கலாம்
ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார்.
பெனசீர் பூட்டோ
பெனசீர் பூட்டோ (Sindhi: بينظير ڀٽو, உருது: بینظیر بھٹو, IPA: [beːnəziːɾ bʱʊʈːoː]; 21 ஜூன் 1953 – 27 டிசம்பர் 2007), பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார்.
பால் தாக்கரே
கக்கன் என்றொரு தலைவன்..
ஆனால் சாகும் வரை குடிசையிலும், வாழும் போது வறுமையிலும் வாடி நாட்டுக்காக பல நல்ல காரியங்கள் செய்த கக்கன் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கலைஞரை பற்றி பக்கம் பக்கமாய் படிக்கும் இன்றைய பள்ளி குழந்தைகள் பாட புத்தகத்தில், கக்கனுகென்று நிலையான பக்கங்கள் இல்லாதது வருத்தமானது..
விவசாயம் - ஒரு பக்க வரலாறு
நரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள்
வறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் இச்சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில்
ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்
தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
வலைப்பதிவு - ஒரு நீண்ட வரலாற்று தகவல்
ஒசாமா பின் லாடன் ஒரு பக்க வரலாறு
மன்மோகன் சிங் ஒரு பக்க வரலாறு
டுவெயின் ஜான்சன் "தி ராக்" - ஒரு பக்க வரலாறு
டுவெயின் டக்ளஸ் ஜான்சன் (மே 2, 1972 -இல் பிறந்தவர்) , என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார். ஜான்சன் கல்லூரி நிலை கால்பந்து வீரராக இருந்தார். 1991 -ஆம் ஆண்டில், அவர் மியாமி பல்கலைக்கழக தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்று இருந்தார். பின்னாளில் அவர் கனடிய கால்பந்து லீகில்
கேல்கரி ஸ்டாம்ப்டர்ஸ் என்ற அணிக்காக விளையாடினார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதம் விளையாட்டில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த காரணத்தால், தன்னுடைய தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தனது தந்தை ராக்கி ஜான்சன் ஆகியோரைப் போல
Subscribe to:
Posts (Atom)