-

ஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி

ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல்,
கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.

அசான்ச் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.

அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அசான்ச், இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இணையதளம். இது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இந்த இணையத்தளம் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளிப்பைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் இந்த இணையத்தளம் நிறுவப்பட்டது. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானில் அமெரிக்க படையினரின் ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது. தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.

0 comments: