-

சில கணங்கள்சில கணங்கள்


உன்னுடான் ஊருக்குப் பேருந்தில் பயணம் செய்த நாள்
குளிர் என்று என் கையைப் பற்றிக்கொண்டு
என் தோள்களில் நீ சாய்ந்திருந்த பொழுதுஇத்தனை சீக்கிரமே ஊர் வந்து விட்டதே என்று
நீ கூறிய போது உன் கண்களில் நான்
தவிப்பை உணர்ந்த கணம்


தோழியின் கை கோர்த்து ஊர் சுற்ற வேண்டுமென்
சின்ன சின்ன ஆசையை மணிக்கணக்கில் நடந்து
நிறைவேற்றிய அந்த இனிய நாட்கள்


இருவர் வீட்டின் நடுவில் இருந்த
முச்சந்தி சந்திப்பில் நின்று மணிக்கணக்கில்
உரையாடி மகிழ்ந்த நாட்கள்


நம்மிருவர்க்குமிடையே இருப்பது நட்புதான்
என்பதை ஊர்ஜிதப்படுத்த முழுதாய் ஒருவாரம்
பேசாமலிருந்து மீண்டும் பேசிய அந்த நாளின் இரவு 11 மணி


நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஊர் சுற்றி விட்டு
உன் பேருந்தில் நீ விடை பெற, சில வினாடிகளில் சிணுங்கிய
என் செல் பேசியில் நீ சொன்ன "I miss you da"


நீ பாடுவதை கேட்டபடியே
உன் கைகோர்த்து சில கிலோ மீட்டர்கள்
நடந்தே கடந்த நாட்கள்


இவையெல்லாம் மீறி என் மனதை இன்னும்
கீறிக்கொண்டிருக்கிறது SMS-ல் உன் வார்த்தைகள்
என் உயிர் கிழித்த அந்நாள்


இத்தனை நாட்களாகியும் இந்த வலியைக் கூற இயலாத
நானும், புரிந்து கொள்ள இயலாத நீயும்
தோல்வியுற்ற நண்பர்களோ?

- ஒரு முகம் தெரியாத நண்பனின் உணர்வு


சுட்டது தான்.. ஆனா எங்கேனு தெரியல..நல்லாயிருக்குன்னு பதிவுல போட்டு இருக்கேன்..

0 comments: