-

வறுமை

வறுமை
உலக அதிசயத்தில்
இடம் பெறாமல் போன
இன்னொரு அதிசயம்...
வறுமை அகற்ற முடியாத
அடிமை - உலகை விட்டு
விரட்ட முடியாத கொடுமை...
பல நாடுகளில்
தேசிய கீதமாய் ஒலிக்கின்றன
பசி என்ற சொல்...
பட்டினி சாவு
அவ்வபோது சில என
பத்திரிக்கைகள்
காட்டுகின்றன படம் போட்டு - ஆனால்
உணவு இல்லாமல் இறந்தோர்
உண்மை பட்டியல்
வெளியிடப்படாமலெ மறைந்திருக்கின்றன
வெட்கப்பட்டு...
வறுமையை வெல்ல முடியாமல்
வாய் விட்டு சொல்ல முடியாமல்...
உணவு இல்லாமல்
உலகிற்கு தெறியாமல்...
வெளிச்சம் காணாமலே
இருட்டறைக்குள்ளே
சமாதிகளாகின்றன
பல உயிர்கள் சப்தம் இல்லாமல்...
விஞ்ஞானம்
உலகை வேகமாய் கொண்டு செல்ல
வருமை
உயிர்களை மெதுவாய் கொண்டு போகிறதே...
என்று தீரும் இந்த சபம்...
வருமை பற்றிய விவாதம்
உயர்ந்த இடங்களில்
குளிர்ந்த அறைகளில்
பெரிய விருந்துடன்
பசிக்காத வயிற்றுடன்...

1 comments:

டக்கால்டி said...

அருமை என்ற ஒற்றை சொல் இந்த கவிதைக்கு பத்தாது நைனா..