-

த டார்க் நைட் ரைசஸ் 2012 விமர்சனம்

1 comments
007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
 
த டார்க் நைட்டில் கூறப்பட்டவை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் காத்தம் நகரில் அமைதி நிலவுகிறது. காவல் துறை ஆணையர், டென்ட் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு சட்ட ஒழுங்கை நிறுவிகிறார். டென்ட் செய்த குற்றங்களை மறைத்து, அவனை மக்கள் மனதில் ஒரு முன்மாதிரி ஆக்கிவிட்ட போதும், ஆணையர் கோர்டன் தவறு செய்து விட்டதாக வருந்துகிறார். டென்டின் நினைவு விழ்ழவில் இதை சொல்ல வந்தும், பின்னர் இது சமயமல்ல என்று சொல்லாது விட்டுவிடுகிறார். அவ்விழாவில் கடத்தப்பட்ட ஆட்சியாளர் ஒருவரை தேடி செல்லும் போது கோர்டன் சுடப்படுகிறார்; அவர் உண்மையை கூறவென்று எழுதி வைத்திருந்த உரை தீயவனான பேன் கைகளில் சிக்குகிறது. கோர்டன் ப்ளேக்கை பதவியுயர்த்தி, அவரிடம் நேரடியாக அறிவிக்கும் உரிமையையும் வழங்குகிறார்.