-

ரியோ 3D 2011 திரை விமர்சனம்

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
இது தான் என்னோட முதல் சினிமா விமர்சனம். அதுவும் ஆங்கில படத்தோட விமர்சனம். அதுவும் என்னோட கனவு சினிமா உலகில் எனக்கு பிடித்த, என்னை இன்னமும் சிறுவனாகவும், சுறுசுறுப்போடு எப்போதும் இயங்க வைக்கும் அனிமேஷன் படம் மூலம் துவங்குகிறேன். எத்தனையோ அனிமேஷன் படங்கள் இருந்தாலும் சமீபத்தில் நான் பார்த்ததில் எனக்கு பிடித்ததில் ஒரு படத்தை பற்றி எழுத இருக்கிறேன்.



படத்தின் பெயர் ரியோ(Rio). இது எதோ நாயகனின் பெயர் என்று நினைத்து தான் படம் பார்க்க துவங்கினேன், ஆனால் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் கதை நகர்வதால் அந்த தலைப்பு. முப்பரிமான திரைப்படமாக வெறும் 50 கோடி ரூபாயில் தயாரிக்க பட்ட இந்த படம், தற்போது ரிலீசான சில மாதங்களில்  1800 கோடிகளை தாண்டி வசூலித்து கொண்டு இருக்கிறது.

 படம் ரொம்ப காமெடியாவும், இசை அதிகம் உள்ள படமாகவும் இருக்கு. ஆனா சில நேரங்கள்ல உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அதிகம் இருக்கு. ஆரம்ப காட்சியில் அமெரிக்காவில் உள்ள ஒரு காட்டுக்குள்ளே ஆட்டம் பாட்டம் என இருக்கும் பறவை கூட்டத்தில் ஒரே ஒரு சிறிய பறவை அதையெல்லாம் சந்தோஷத்தோடு பார்த்து ரசித்து கொண்டு இருந்தது. புதிதாய் பிறந்ததால் பறக்க இறகை இல்லாமல் இருந்தது. தானும் கொண்டாடத்தில் கலந்து கொள்ளும் ஆசையிலும் பறக்க துடிக்கும் ஆர்வத்திலும், மரத்தின் விளிம்பில் வந்து நிற்கிறது. கனபொழுதில் வேட்டையர்களின் பிடியில் பல பறவைகள் சிக்க, மரத்தின் விளிம்பில் நின்ற நம்முடைய குட்டி கதாநாயகனும் பயத்தில் கீழே விழுந்து மாட்டி கொள்கிறான்.

போகும் வழியில் வழக்கம் போல ஒரு டிராபிக் ரோட்டில் நம்முடைய ஹீரோ பறவை இருக்கும் பெட்டி மட்டும் கீழே விழிந்து விட, அது ஒரு சிறுமியின் கைக்கு கிடைகிறது. அவள் பெயர் லிண்டா. தான் கண்டு எடுத்த பறவைக்கு ப்ளு (Blu) என்று பெயர் வைக்கிறாள். காட்சிகள் மாறுகிறது, சிறுமி வளர்கிறாள் பறவையும் அவளின் உற்ற தோழனாக வளர்கிறார்கள்.  பளுவிற்கு சிறகும் வளர்கிறது ஆனால் பறக்க மட்டும் கற்று கொல்லாத பறவையாகவே இருக்க,எல்லோரும் ஆச்சர்யபடுகிறார்கள். 

முதல் முறை பறக்க ஆசைப்பட்டு மரத்தில் நின்ற பொது என்ன படபடப்பு இருந்ததோ அதே பயம் எப்போது இருந்து கொண்டே இருந்தது. லிண்டா தன்னுடைய தோழனின் அழைப்பை ஏற்று பிரேசில் நாட்டிற்கு செல்கிறாள். ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் திருவிழாவை காண செல்கிறார்கள். அங்கு அவளுடைய நண்பனின் பறவை தான் கதையின் நாயகி ஜுவெல் (Jewel). ப்ளூவிற்கு பறக்க கற்று கொடுக்கும் முயற்சியில் ஜுவெல் தோற்று போகிறது.

இந்த நேரத்தில் இரு பறவைகளும் ஒரு சிறுவன் கையில் சிக்க, அவனோ அதை பணத்திற்காக விற்று விடுகிறான். அந்த இரு பறவைகளும் ஒரு கொடூர கழுகின் பாதுகாப்பில் வைக்க படுகிறது. படத்தின் வில்லனும் இந்த கழுகு தான்.
கழுகிடமிருந்து தப்பிக்கும் சேசிங் காட்சிகள் தான் படத்தின் ஹைலைட். இதே போல மறுபடியும் கழுகிடம் மாடி கொண்டு தப்பிக்கும் அடுத்த சேசிங் காட்சி இன்னும் மிரட்டல். கடைசியில் தப்பித்தார்கள, ஹீரோ பறவை பறக்க கற்று கொண்டதா என்பதை பரபரப்பான காட்சிகளில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Carlos Saldanha இயக்கம் அருமை. ஜான் போவெல் இசை படத்திற்கு பெரிய பலம்.கட்டாயம் பார்க்க வேண்டிய டைம் பாஸ் படம் :-) உங்க வீட்டு வாண்டுகள் போல நாமும் குழந்தையாக மாறினால் நிச்சயம் நமக்கு படம் பிடித்து போகும்.மேலும் படத்தின் தகவல்களுக்கு இங்கே
 


முதல் விமர்சனம்கரதால கொஞ்சம் பிசிறு இருக்கும் அடுத்த முறை சரி பண்ணிக்குவோம்.

9 comments: