-

லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

0 comments
இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum), தென் கென்சிங்டனின், கண்காட்சித் தெருவில் அமைந்துள்ள மூன்று பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்று. அறிவியல் அருங்காட்சியகமும், விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகமும் ஏனைய இரண்டும் ஆகும். இதன் முன்புறம் குரோம்வெல் சாலையில் அமைந்துள்ளது. பண்பாடு, ஊடகம் மற்றும் விளையாட்டு வாரியத்தின் ஆதவுடன் இயங்கும் ஒரு பொது நிறுவனமாகும்.
இந்த புகைப்படம் மிக பெரிய அளவு கொண்டது. இதை டவுன்லோட் செய்து பொறுமையாகவும் பார்க்கவும் :-)  

இத படிங்க முதல்ல

8 comments

http://www.freetranslation.com/media/Freetranslation-click2translate.jpgபதிவை நீளமா எழுதாம சுருக்கமா முடிச்சுக்கறேன். இது வரைக்கும் தமிழ் வலை பதிவர்களுக்கு கிடைக்காத ஒரு அருமையான சேவையை கூகிள்  நமக்கு வழங்கி இருக்கிறது. இனிமேல் உலகின் எந்த ஒரு தளத்தையும் நாம் தமிழில் படிக்கலாம். அதே நேரம் மற்றவரும் நம்முடைய தளத்தை வேறு மொழிகளில் படிக்கலாம். அதற்கு முன்னர் சில தொழில்நுட்ப தளங்களை நீங்கள் தமிழில் படிக்க இங்கே வழிவகை செய்து இருக்கிறேன். அதன் லிங்கில் கிளிக் செய்து நேரடியாக தமிழில் படியுங்கள்.

சாரு நிவேதிதா

0 comments
சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.

உங்கள் புகை படங்களை ஸ்டைலான வீடியோ ஸ்லைட் ஷோவாக மாற்ற

0 comments

சமீபத்தில் ஒரு தளம் கண்ணிற்கு பட்டது. உங்கள் போடோக்களை எல்லாம் மிக ஸ்டைலான ஸ்லைட் ஷோவாக மாற்றி தருகிறது. வித விதமான வீடியோவாகவும். பல விதமான பின்னணி இசையும் கலக்கலாக நாமே தேர்வு செய்து உருவாக்கலாம். இது ஊர் சுற்றி பார்க்கும் மக்களுக்காக என்றாலும் நாமும் அதை அழகியலாக உபயோகபடுத்தலாம். வீடியோ ஓடும் போது ஏதேனும் புகைபடத்தில் கிளிக் செய்து பார்க்கும் புதிய தொழில்நுட்பம் கூட இதில் உண்டு. கீழே ஒரு வீடியோ உதாரணத்திற்காக

சார்லமேன் - ஒரு பக்க வரலாறு

0 comments
சார்லமேன் -கி.பி 800 -களில் பிராங்குகளின் அரசர். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலியைக் கைப்பற்றிய இவர், கிபி 800 டிசம்பர் 25 ஆம் நாள் பேரரசர் அகஸ்டஸ் என்னும் பெயருடன், மூன்றாம் பாப்பரசர் லியோவினால் முடிசூட்டப்பட்டார். இவர் கான்ஸ்டன்டினோப்பிளில் அமைந்திருந்த பைசன்டைன் பேரரசருக்குப் போட்டியாக விளங்கினார். கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக கலை, மதம், பண்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட கரோலிங்கிய மறுமலர்ச்சிக்கும் இவரது ஆட்சி காரணமாக அமைந்தது.

இவரது வெளிநாட்டுக் கைப்பற்றல்களும், உள்நாட்டில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும், மேற்கு ஐரோப்பாவிற்கும், மத்திய காலத்துக்கும் ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுத்தன. பிரான்ஸ், ஜேர்மனி, புனித ரோமப் பேரரசு ஆகியவற்றின் அரசர்கள் பட்டியலில் இவர் முதலாம் சார்ல்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நீரோ மன்னன் - ஒரு பக்க வரலாறு

1 comments
நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் (Nero Claudius Caesar Augustus Germanicus) (சரி படிக்க முடியலனா விடுங்க, ரொம்ப ட்ரை பண்ணாதிங்க)   டிசம்பர் 15, கிபி 37 – ஜூன் 9, கிபி 68 காலத்தில் வாழ்ந்தவன்., ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் தான் இந்த நீரோ. அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான்.

கனிமொழி - ஒரு பக்க வரலாறு

1 comments
கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, தற்போது இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகள். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.
மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. அதற்கு அடுத்த ஆண்டு கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவருக்கு அப்போது வயது 44. (இதுல உள்குத்து எதுவும் இல்லை சாமியோவ்)