-

வர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
சமீபத்தில்  BBC-யின்  "Home" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய முதல் ஆவணபடமாகிய இந்த படத்தை Luc Besson, என்ற தயாரிப்பாளர் உதவியால் எடுத்து இருக்கிறார். இதற்கு பின்னணி குரல் கொடுத்து இருப்பவர் Glenn Close. இந்த படம் 54 நாடுகளில் 120 இடங்களில் 217 நாட்கள் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது. இந்த படத்தில் சிறப்பம்சமே முழுக்க முழுக்க டாப் ஏங்களில் படம் பிடிக்கப்பட்டது தான். அதாவது முழு படமும் நீங்கள் ஹெலிகாப்டரில் இருந்தோ அல்லது சிறிய விமானத்தில் இருந்தோ பார்ப்பது போன்றே இருக்கும். ஒரு முறை கூட பூமியில் உள்ள நிலத்தை தொட்டு ஒரு காட்சிகள் கூட இருக்காது. தரையில் இருந்து 50-100-200 அடி உயரத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு உங்களுக்கு மிகுந்த வித்தியாசமான உணர்வை தரும். கடந்த 2 லட்சம் வருடங்களில் நம்முடைய பூமி பந்து எவ்வளவு மாறியிருக்கிறது என்றும் இனி எப்படியெல்ல வீணாய் போக போகிறது அல்லது நாம் எப்படி அதையெல்லாம் மீறி நம்முடைய வளங்களை காபாற்றபோகிறோம் என்பது போன்ற விமர்சனங்கள் கருத்துகளை முன் வைக்கிறது இந்த ஆவண படம்.


இந்த படத்தில் இதுவரை மக்கள் பார்க்காத இடங்களை தேடி அழகான இயற்கை காட்சிகளை கண்முன்னர் நிறுத்தியிருகிரார்கள். நிச்சயம் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்து இருகிறார்கள் என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரியும். இதற்கு முன்னர் கூட நேஷனல் ஜாக்ராபிக் சேனல் எடுத்த "Planet Earth" பார்த்து விக்கித்து போயிருந்தேன். இப்போது இந்த "Home" என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது. இப்படியெல்லாம் நம்முடைய பூமியில் இடங்கள் இருகிறதா என்று உங்களுக்கு ஆச்சர்யத்தை தரும் இந்த 120 நிமிட படம். கட்டாயம் பாருங்கள். என்னை போல ஆச்சர்யத்தால் வார்த்தைகளற்று வர்ணிக்க முடியாமல் போனால், உங்கள் கருத்துகளையாவது சொல்லிவிட்டு போங்கள். இந்த வீடியோவை EMBED செய்ய முடியவில்லை. அதன் லிங்க் கீழே.

http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU

இந்த பதிவை தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். இந்த காட்சிகளை அவர்களும் ரசிக்க வையுங்கள். நான் பெற்ற இன்பத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டது போல....


13 comments: