-

உங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
இன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும் லோட் ஆக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உங்கள் தளத்தில் பொதுவாக ஒவ்வொரு மாதத்தில் உள்ள பதிவுகளும் அதன் லிங்க் லோட் ஆகும், அதனால் கொஞ்சம் தாமதமாகவே உங்கள் பக்கம் தெரிய தொடங்கும். இனி நான் சொல்லும் முறையை கொஞ்சம் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் முன்பை விட உங்கள் தளம் சற்று வேகமாகவும் இயங்கும், மாறுபட்டு தெரியும். உதாரணத்திற்கு என்னுடைய தளத்தையே சொல்லலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். முன்பு எப்படி தோற்றமளித்தது, பின்னர் எப்படி மாறியது என்று.நேராக களத்தில் இறங்குவோம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தளத்தை ஒருமுறை Backup எடுத்து வைத்து கொள்ளவும்.

1)  Design --- Page Elements --- Blog Archive --- Select Flat list

இதில் Flat list என்று இருந்தால் மட்டுமே இந்த code வேலை செய்யும் இல்லையென்றால் அதுவே உங்களை மாற்ற சொல்லி ஒரு செய்தியை சொல்லும்.

2) பின்பு இங்கே கிளிக் செய்து ஒரு Text பைலை ஓபன் செய்து அதில் உள்ளவற்றை காபி செய்து கொள்ளவும்.

3)  Edit HTML சென்று (கவனிக்கவும்) EXPAND WIDGET - ல் tick இருக்க கூடாது. உங்கள் டெம்ப்ளேட்டில்  

<b:widget id='BlogArchive1' locked='false' title='Blog Archive' type='BlogArchive'>

என்ற வார்த்தையை தேடவும். இதில் type='blog archive' என்பது தலைப்பு. 

(கவனிக்கவும் : என்னுடைய தளத்தில் 'இதுவரை' என்று தலைப்பு இருக்கும். மேலே சொன்ன Code அப்படியே தேடினால் கண்டு பிடிக்க முடியாது.உங்கள் தளத்திலும் blog archive என்பதை ஏதேனும் தலைப்பு மாற்றம் செய்து இருந்தீர்களானால் அந்த வார்த்தையை கொண்டு தேடவும்.)

மேலே நீல நிறத்தில் மேற்கோள் காட்டிய வார்த்தையை நீக்கி விட்டு, அந்த இடத்தில் புதிதாய் Text பைலில் காபி செய்தவற்றை Paste செய்யவும்.... நன்றாக கவனித்து செய்யவும்.


4) பின்பு உங்கள் டெம்ப்ளேட்டில் </head> என்ற வார்த்தைக்கு மேலே கீழ் வரும் வரிகளை காபி செய்யுங்கள்.

<script src='http://pixsathish.googlecode.com/files/calenderviewblogarchive.js' type='text/javascript'/>

<script src='/feeds/posts/summary?max-results=0&amp;alt=json-in-script&amp;callback=timezoneSet'/>

5) இப்போது உங்கள் டெம்ப்ளேட்டை சேமித்துவிட்டு, உங்கள் தளத்தை பார்க்கவும் அல்லது Preview பட்டனை அழுத்தி பார்க்கவும்.

இது கொஞ்சம் சிரமமான வேலை என்ற போதும் உங்கள் தளத்தை கொஞ்சம் அழகாக்கும் என்பதில் கொஞ்சமும் மாற்றமில்லை. இது ப்ளாகரில் மட்டுமே வேலை செய்யும்.  முயற்சி செய்யுங்கள்,  முடியாவிடில் உங்கள் டெம்ப்ளேட்டை எனக்கு E-Mail  அனுப்புங்கள் நான் மாற்றி தருகிறேன். என்னுடைய மின்னஞ்சல் - 007sathish@gmail.com

படிச்சா மட்டும் போதாதுங்க, ஒட்டு போட பழகனும். தேர்தல் நேரத்துல ஒட்டு போடறது எப்படின்னு கத்துக்க கொஞ்சம் முன்னோட்டமா இருக்க இந்த பதிவுக்கு ஒட்டு போட்டு போங்க. (பின் குறிப்பு: இங்கே கள்ள ஓட்டும் போடலாம் ..ஹி ஹி )18 comments: