-

எளிய மருத்துவக் குறிப்புகள்

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
புற்று நோயை கட்டுப்படுத்த, குணம் பெற மருத்துவத்துடன் யோகா

உடலின் சக்தியை, மன, ஆன்மீக சக்திகளுடன் யோகப் பயிற்சியின் மூலம் இணைத்து புற்று நோயை குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவர் ஷாஜி குடியாத் கூறியுள்ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக உள்ள மருத்துவர் ஷாஜி வி.குடியாத், ஆளைக் கொல்லும் புற்று நோயை குணப்படுத்த யோகம், பிரார்த்தனை, மருத்துவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை ஆகிய இடங்களில் ஏற்படும் புற்று நோயை இப்படிப்பட்ட முறையை கையாண்டு குணப்படுத்த முடியும் என்று குடியாத் கூறியுள்ளார்.

உடல் சக்தி, உடல், ஆன்மா ஆகியவற்றிற்கு இடையிலான பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அறிவியல் முறையை உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.
“ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் ஆளைக் கொல்லக் கூடிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்தலாம். சரியான உணவும், மனமும், சிந்தனையும் மிக முக்கியமானவை. சிந்தனை பெருமளவிற்கு உடலைப் பாதிக்கிறது. எனவே எதையும் நல்லதாக சிந்திப்பது நோயைக் குணப்படுத்த அவசியமாகிறது” என்று கூறியுள்ளார். 

எளிய மருத்துவக் குறிப்புகள்


  • அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
  • சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.
  • தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.
  • வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.
  • கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம். 

5 comments: