-

நாட்டு நடப்பு 11.04.2011

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
அன்னா ஹசாரே தான் இன்று இளையதலைமுறைக்கு ஹீரோ. காந்தியவாதிதான் என்றாலும், அஹிம்சை போராட்டம் தான் என்றாலும் அவர் எடுத்த அஸ்திரம் உண்மையிலேயே அதிரடிதான். லோக்பால் விஷயத்தில் மெத்தனம் காட்டுவது அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இன்று மிரட்டல் விடுத்தும்,குண்டு வெடித்தும் பல விஷயங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு சாதிக்கபடுகிறது. அவர்களுக்கு நடுவில் ஒரு காந்தியவாதி அஹிம்சா வழியில் போராடி வெற்றி பெற்றது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்.நம் நாட்டில் கொஞ்சம் நிறையவே நம்பிக்கை துளிர்விட தொடங்கி இருக்கிறது, லஞ்ச ஒழிப்பு விஷயத்தில் இவருடைய குரல் கம்பீரமாக ஒழிக்க தொடங்கியதில் இருந்து. இனி போலிஸ் கேசெல்லாம் கிடையாது, நேராக சி பி ஐ விசாரணைதான்.


இனி அந்த விஷயம் நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் என்பது என்னுடைய பயம். இளைஞர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய தாகத்தை ஏற்படுத்தும் என்று மதிய அரசு துளியும் எதிர்பாத்து இருக்காது. உலகத்தில் அத்துணை பத்திரிகைகளும் மீடியாவும் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்க, வழக்கம் போல தென்னிந்திய மீடியா கலைஞரின் கையில் இருப்பதால் ஜெயலலிதாவை வசைபாடுவதையே மூலதனமாக கொண்டு இயங்கிகொண்டு இருந்தது. அழகிரியை பற்றி வடமாநிலங்கள் முழுவதும் நாறிகொண்டிருக்க இங்கே யாரும் அதை பற்றி மூச்சு கூட திறக்க வில்லை.எங்க நாடு முன்னேரிடுமோ, நாம நாசமா போயடுவோமோ என்று எண்ணவே இவர்களுக்கு சரியாக இருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் பதிவில் ஏராளமான விஷயங்கள் எழுதுவதாக கூறியிருந்தேன். கடந்த மாதம் அலுவலக வேளைகளில் மும்முரமானதால் அதை தொடர முடியவில்லை. இன்னும் சில வாரங்களுக்கு அலுவலகத்தில் வேலைபளுவால் எனக்கு பெண்டு நிமிர இருக்கிறது. வருட கடைசி வேறு, கணக்கு வழக்குகள் முடிக்க இருப்பதால் கொஞ்சம் பிசி. இனி வரும் நாட்களில் அந்த கட்டுரைகளை தொடருவேன். பலரும் அது பற்றி கேட்க தொடங்கி விட்டனர். இருப்பினும் கொஞ்சம் பொறுமையாக விலாவரியாக எழுத இருக்கிறேன். முக்கியமாக நல்ல நேரம் சதீஷ் எப்போ அந்த மாதிரி சமாசாரங்களை எழுத போறிங்கன்னு துளைத்து எடுக்கிறார். அடுத்த மாதத்தில் இருந்து வரிசையாய் வரும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஓவியத்தில் உலகின் மிக பிரபலமான, வரலாற்றில் இடம்பிடித்த முக்கியமான நபர்கள் கிட்டதட்ட  100 பேர் இருகிறார்கள். என்னால் 90 பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது, மிச்சம் இருப்பவர்கள் யாரென்றே தெரியவில்லை. முடிந்தால் நீங்கள் முயலுங்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

டேவிட் பெக்காம் மாதிரி இன்னொருத்தன் பிறந்து தான் வரணும். அதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..


இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.


இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.

(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)


ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக

கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள் நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது


- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.


இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை
தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம்
வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)


அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??


அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்கிவிடும்.


இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.


இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.


இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு
மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.

11 comments: