-

இந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
நீங்கள் பேபால் உபயோக படுத்துபவரா... உங்களுக்கு வச்சாச்சு ஆப்பு. கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தி இருக்கிறது. இதை முன்பே தெரிவிக்காததற்கு மன்னிப்பும் கேட்கிறது அந்த நிறுவனம்.


ரிசர்வ் வங்கியை பகைத்து கொண்டதன் பலனாக இனிமேல் Goods and services காரணத்திற்க்காக இனிமேல் நீங்கள் உங்கள் அக்கௌண்டில் இருந்து பணம் கட்ட முடியாது. அது மட்டுமின்றி உங்கள் பேபால் கணக்கிற்கு வந்த பணத்தையும் ஒரு வாரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி விட வேண்டும். இல்லையேல் பணம் பணாலாகிவிடும்.

ஏற்றுமதி காரணதிற்காக பணம் செலுத்த விரும்பினால் $500 மட்டுமே ஒரே தவணையில் கட்ட முடியும், அதற்க்கு மேல் கட்ட அடுத்தமுறை தான் முயல வேண்டும். இதற்க்கு முன்பு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இந்தியாவில் இருந்தது. இப்போது அதற்க்கு கடிவாளம் போடபட்டுவிட்டது. பணத்தை வேறு பேபால் கணக்கிற்கு மாற்றும் போதும்,வங்கி கணக்கிற்கு மாற்றும் போதும் அதிக கமிஷன் எடுக்கபடுவதாக புகர் கிளம்பி இருக்கிறது..

இது பற்றிய பேபால் நிறுவனத்தின் முழு அறிவிப்பை இங்கு காணவும். அதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை (ஒட்டு போட்டு) நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.
.9 comments: