-

நாட்டு நடப்பு 24.03.2011

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
நம்ம நாட்டுல யாரு யாருக்கு யார் பயபடராங்கன்னே தெரியல. கலைஞர் சோனியாவுக்கு பயந்து சீட்டு தரேன்கறார். ஜெயலலிதா நிலைமை இன்னும் மோசம். நம்ம நாட்டுகாரங்களுக்கு பயந்து போனா கூட பரவால்ல, தமிழ் ஈழத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துருக்கும் ராஜபக்ஷேவை கண்டு பயந்து, வைகோவிற்கு சீட்டு இல்லையென்று சொல்லி விட்டார். தன்னுடைய பினாமி பெயரில் கிட்ட தட்ட 200 ஏக்கரில் திராட்சை, கடலை, பருப்பு, தேயிலை என்று பெரிய தோட்டமே அங்கு நடத்துகிறார் ஜெயலலிதா. அதற்கு பிரச்சனை வராமல் இருக்க வைகோ தேர்தலில் நிக்க கூடாதென மிரட்டல் வர,
அதற்கு பணிந்து போய் அவபெயரை சேர்த்து கொண்டுள்ளார் அம்மா. கேவலம் போயும் போயும் ராஜபக்ஷே நம்முடைய தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிப்பதா என்பதை யோசிக்க இங்க எவனுக்கும் நேரமில்லை. ஆகமொத்தம் அய்யாவிற்கும் அம்மாவிற்கும் பதிவிதான் முக்கியமே தவிர கொள்கையோ கட்சியோ மக்களோ முக்கியமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Paranormal activity  என்ற திரைப்படம்  தற்பொழுது இந்தியாவில் வெளி வர இருக்கிறது. நானும் இந்த படத்தை ஒரு வருடத்திற்கு முன்பே பார்த்து விட்டேன். செம திகிலான படம். படம் முழுக்க முழுக்க கையில் எடுத்து செல்லும் கேமராவில் பார்ப்பது போன்றே படத்தை எடுத்து இருக்கிறார்கள். இதன் இரண்டாம் பாகம் கூட வந்து விட்டது. கதைப்படி முதல் பாகத்தின் கதையில் வரும் முந்தைய நாட்களை இரண்டாம் பாகத்தில் காட்டி இருகிறார்கள். படம் பார்க்கும் போது, உண்மையாகவே ஹேண்டி கமெராவில் படம் பிடித்து நிஜமாகவே நடப்பது போன்ற உணர்வை தருகிறார்கள். எதோ வித்தியாசமான ஜந்து இவர்களை துன்புறுத்துவது போல காட்டபட்டாலும், நிஜத்தில் கதாநாயகியின் பலகுணாதிசியத்தை சைக்கோ போல சித்தரித்து காட்டியிருக்கிறார்கள். உண்மையாகவே திகில் படம் தான். முழு படத்திலும் துளி கூட ஆபாசம் இல்லை என்றாலும் பெண்களும் குழந்தைகளும் பார்க்க முடியாது. வெறும் பத்து லட்சத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் 850 கோடி ருபாய் உலகளவில் வசூலித்து அதிரவைத்து கொண்டிருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லிபியாவில் தன மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினார் என்பதால் கடாபி ராணுவம் மீது அமெரிக்க கூட்டு படையினர் தாக்குதல்  நடத்துகிறார்கள். இதே நிலைமை இலங்கையில் நடந்த போது சீனாவை சேர்ந்த பான் கி மூன் என்ற அமெரிக்க வேலைக்காரன், பேசி பேசியே நாட்களை கடத்தி விட்டு கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது என்று பிதற்றினார். அப்போதெல்லாம் எங்கே போனது ஐக்கியநாடுகள் சபையின் கொள்கைகளும் விதிமுறைகளும்.. வெட்கம் கெட்ட அமெரிக்கா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தற்பொழுது பல ஆங்கில படங்கள் வெளி வர இருக்கிறது. உலகில் பல நாடுகளில் அதிகம் எதிர் பார்க்கப்படும் படங்களின் முன்னோட்டத்தை இங்கே தருகிறேன்.

முதலில் சூப்பர் 8 என்ற திரைப்படம். இது நம்ம சமாசாரம், வேற கிரகத்துல இருந்து வர உயிரினத்தை ஏரியா 51 பகுதிக்கு கொண்டு செல்லும் போது ஏற்படும் விபத்தில் தப்பிக்கிறது. அப்போது ஒரு சிறுவன் தனக்கு புதிதாய்  கிடைக்கும்  சூப்பர் 8 காமெராவில் அதை படம் பிடித்து, அவனுடைய தந்தை அந்த புதிய உயிரினத்தை கண்டுபிடிப்பது பற்றிய கதை. ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தயாரிப்பில் வெளி வர இருக்கிறது இந்த படம்.

http://en.wikipedia.org/wiki/Super_8_%28film%29அடுத்து Fast Five. கடந்த சில ஆண்டுகளாக வெளி வரும் Fast and Furious படத்தின் ஐந்தாம் பாகம். கார்களும் பைக்குகளும் பறக்கும் வீர சாகச திரைப்படம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

6 comments: