-

நாட்டு நடப்பு 11.03.2011

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
மும்பையில் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியின் வீடும் தீ விபத்தில் சிக்கியது.

டைரக்டர் க்ரிஷ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் வானம் படத்தின் பாடல் காட்சிக்காக மும்பையில் 1 கோடி ரூபாய் செலவில் செட் போட்டு சூட்டிங் நடைபெற்று வந்தது. இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது.பந்த்ரா குடிசை தீ விபத்தில் சிறுமி ரூபினா அலியின் வீடு பறிபோனதை அறிந்த துரை தயாநிதி அழகிரி, அவரை தேடி கண்டுபிடித்து வானம் படத்தின் ஆடியோ உரிமைபெற்ற வீனஸ் ஆடியோஸ் அலுவலகத்திற்கு  வரவழைத்தார். பின்னர் ரூபினா அலிக்கு ரூ.50ஆயிரம் ரொக்கபணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். இதனை நடிகர் சிம்பு, ரூபினாவிடம் கொடுத்தார். அதேபோல் வீனஸ் ஆடியோ கம்பெனி டைரக்டர் சம்பக்கும் தன் பங்கிற்கு ரூ.21 ஆயிரம் நிதியுதவி செய்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் தூதராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறிய ஐக்கிய நாடுகள் தலைவர் பான் கி மூன், தாம் ராஜதந்திரத்தைக் கற்றுக் கொண்டது இந்தியாவில் தான் என்றார்.ஐக்கிய நாடுகள் சபையின்தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், "ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்," என்றார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பாக தென் கொரியாவின் தூதராக பதவி வகித்த பான் கி மூன், டெல்லியில் தென் கொரிய தூதராக பொறுப்பேற்று தனது வெளியுறவுப் பணியைத் தொடங்கினார்.தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுப்பதற்கு போட்டியிட முடிவு செய்துள்ள பான் கி மூனுக்கு இந்தியா தனது ஆதரவை குறிப்பால் தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.


 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நாரதர் கழகம் நன்மையில் முடியுதோ இல்லையோ கலைஞரின் நாடகம் அவருக்கே ஆப்பாக முடிந்து விட்டது. இனிமேல் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் காங்கிரசோடு கை கோர்த்து தான் ஆகவேண்டும். ஒரே ஒரு வீடியோ.

 


 ------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய போன பதிவில் ஒரு வீடியோவை இணைக்க முடியாமல் பொய் விட்டது அதை இங்கே இணைக்கிறேன். இந்த வீடியோவை நீங்கள் ஏற்கனவே பார்த்து கூட இருக்கலாம். ஆனா இதில் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை. முதல்ல போன பதிவிற்கு ஒட்டு போடுங்கப்பா. கிட்ட தட்ட 3500 பேரு வாசிச்சு இருக்கீங்க, வெறும் சில ஒட்டு தான் விழுந்துருக்கு. (இப்பெல்லாம் சில விஷயங்களை கேட்டு தான் வாங்கணும் போல) பின்னோட்டம் கூட வெறும் 15 தான். அந்த மாதிரி பதிவெல்லாம் கொஞ்சம் பிரபல படுதுங்கப்பா.

7 comments: