-

மானம் கெட்ட தமிழன்

தமிழ்நாட்டில் மானங்கெட்டவன் என்ற வார்த்தை தமிழனுக்கே, அதுவும் ஒட்டு போடுகிற மக்களுக்கே பொருத்தமான வார்த்தை. காவிரி பிரச்சனை, இலங்கை மீனவர் படுகொலை, எஸ் பேண்ட் விவகாரத்தில் 2 லட்சம் கோடி ஊழல், கங்கை காவிரி இணைப்பு என எத்தனையோ விஷயத்தை மறந்து விட்டு யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ஒட்டு போடுவதற்கு என்று அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஏன்னா இப்போதைக்கு அவனுக்கு அது தான் பிரச்சனை.


இந்த நேரத்தில் இதோ தமிழக காங்கிரஸ் கண்டுபிடித்து விட்டது..

தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என...!

தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு முன் இவர்கள் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.சில வருடங்கள் முன்பு, அ.தி.மு.க மக்கள் விரோத அரசு என்று சொல்லி தி.மு.க வுடன் கூட்டு என்றார்கள்.

இதோ இன்று,

மீண்டும் தி.மு.க மக்கள் ஊழல் அரசு என்று ஆரம்பித்து விட்டார்கள்.

சீட்டுக் கட்டில் இருக்கும் 'ஜோக்கர் ' மாதிரி இவர்கள். எதனுடன் வேண்டுமானாலும் 'செட்டு ' சேர்வார்கள்.இங்கும் அங்கும் மாறி மாறி சேர்ந்து ஆட்டத்தில் சுவாரசியம், திடீர் திருப்பம் எல்லாம் ஏற்படுத்துவார்கள்.முதலில் இவர்கள் விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே, தி.மு.க அ.தி.மு.க இரண்டும் நம்மளைப் பார்த்து கொஞ்சம் யோசிக்கும்.

தி.மு.க அ.தி.மு.க வை விட பதவி சுகத்திற்கும் அதிகார சுகத்திற்கும் இந்த காங்கிரஸார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது, நடந்து முடிந்த சில ஆண்டு கால ஆட்சிகாலம் சாட்சி...

தாங்கள் வந்தால் 'காமராஜர் ஆட்சி ' தருவோம் எனச் சொல்பவர்கள், தங்களின் கூட்டணி அபிலாஸைகளுக்கான இடமாக அதை வைத்துக் கொண்டார்கள்.

காமராஜுடன் தி.மு.க நாகரிக உறவு வைத்திருந்ததா... ?

1967 தேர்தலில் கோஷங்களாக சில அநாகரிக சொற்றொடர்களை பயன்படுத்தியது தி.மு.க.

உதாரணமாக,

'காமராஜீ நாடாரு கறித் தின்ன மாட்டாரு.. சுண்டெலியைக் கண்டா சும்மா விட மாட்டாரு.. ' என்றும்,

' ஆப்பரிக்க நாட்டில் வாழும் 'மொபோம்போ ' எனும் மிருகத்தை விட அசிங்கமானது காமராஜ் மூஞ்சி ' என்றும்

தமிழகம் முழுக்க பரவலாக கோஷம் எழுப்பினவர்கள்.

தமிழக பொருளாதார மேம்பாட்டைப் பற்றி எதுவும் பேசாமல் இம்முறையில் அணுகிய இலக்கியவாதிகள்.

அது மட்டுமல்ல, காமராஜர் இறந்த போது தான் பேசும் கூட்டத்தில் எல்லாம், 'காமராஜர் முதல் நாள் தன்னைப் பார்த்த போது தன்னைக் கட்டிக் கொண்டு 'தேசம் போச்சு.. தேசம் போச்சு ' என்று அழுததாகவும் கூசாமல் கதை வசனம் எழுதியவர்தான் கருணாநிதி... இப்பவும் அவரைத்தான் தமிழின தலைவர் என்று புகழ் பாடுகிறார்கள். 1990 -ல் 64 கோடி போபர்ஸ் ஊழல் விஷயம் வெளி வந்த போது 'ஐயோ அவ்வளவு பணமா, யாருடையது,மக்கள் காசு இப்படி நாசமா போகிறதே' என்று வானுக்கும் பூமிக்கும் குதித்தவர் தான் இந்த கருணாநிதி.அன்று வெள்ளைகாரனை வெளியேற்றினோம் இன்று இத்தாலி அம்மையாரையும் வெளியேற்றுவோம் என்று கொக்கரித்தவர் இந்த தலைவர். ஆனால் அவர் இல்லையென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் ஜெயிக்கவே முடியாது அதுவும் கூட்டணியில்.

'தேசத்தைக் காக்க கருணாநிதி ஒருவரால் தான் முடியும் எனச் சொல்லி கருணாநிதியைத் தலைவராக்குங்கள் என அண்ணா இறந்த போது சொன்னார் காமராஜர் 'எனும் வெற்றிகொண்டான் பேச்சுக்கு பதிலில்லை. காமராஜர் எந்த நிலையிலும் அடுத்த கட்சி விஷயத்தில் தலையிட்டதேயில்லை. இது அனைவருக்கும் தெரியும்.

அந்தக் கூட்டத்தில் வித்தியாசப்பட்டவராக, ப.சிதம்பரம். 'தமிழ்நாடு ' பெயர் சூட்டலின் விஷயத்தைச் சொல்ல, முரசொலியில் மறுத்து, நையாண்டி செய்து,  இலக்கியம் படைத்து அவமானம் தேடிக்கொண்டார் கருணாநிதி.அது ஏதோ சிதம்பரம் - கருணாநிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மாதிரி பாரமுகமாய் மற்ற காங்கிரஸார் அப்போது இருந்து விட்டனர்.எதிரில் இருப்பவன் கொட்டாவி விட வாய் திறந்தாலே பதில் சொல்ல ஆரம்பித்து விடும், ஈ.வி.கே.எஸ் இவ் விஷயத்தில் வாயைத் திறக்கக் காணோம்.

சரி இந்த சிதம்பரமாவது ஒரே நிலைப்பாடு எடுக்கிறாரா... ?

இலங்கை, தமிழக மீனவர் துப்பாக்கி சூடு, ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். இவரை விட அதிகம் படித்த அதிகம் வெளிநாடு அனுபவம் வாய்ந்தவர் தான், காந்தியடிகள். கட்சி பணி ஆரம்பித்தவுடன்,கறுப்புக்கோட்டை கழட்டி எறிந்திடவில்லையா.. ?

ஆனால் இவர்.. ? இவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் தமிழகம் செழிக்கும் அதுவரை எனக்கு வக்கீல் வேலை தான் முக்கியம் எனும் மனநிலையோடு இருந்தவர். பதிவி வந்தவுடன், அதையும் கலட்டி தூர எறிந்துவிட்டார். அவ்வபோது மட்டுமே தன்னுடைய ஜல்றாக்களுக்காக வக்கீல் வேலை செய்கிறார்.ஏதோ காவிரி, பொடா, சிசுக்கொலை, ஸ்பெக்ட்ரம், இலங்கை மீனவர் படுகொலை என மக்கள் பிரச்சனை என்று கோர்ட் மிதித்தால் பரவாயில்லை... எல்லாம் தனியார் கேஸ்கள் மட்டுமே..!

மேலும், சோனியா மாதா கீ ஜே..!! என்பார், ஆனால், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஜன்நாயக பேரவை எனும் தனி ஆவர்த்தனம்..!! ஏன் அப்புறம் காங்கிரஸுடன் இலவச இணைப்பு மாதிர் ஒட்டிக் கொண்டு... ? ? ?

இவர்கள் ஆடும் ஜோக்கர் ஆட்டம் புரிந்து, நம்மளை ஜோக்கர் ஆக்கும் காங்கிரஸ் விஷயத்தில் முடிவெடுத்து ஒரு முற்றுப் புள்ளி வைத்து பின் தி.மு.க அ.தி.மு.க விஷயத்திற்கு மாற்று யோசிப்போம்... போன முறை இவர் தோற்றது தெரிந்தும், மீண்டும் ஜெயித்து விட்டதாக அறிவித்த போதே எனக்கு இன்னொன்று புலப்பட்டு விட்டது. இனி நிச்சயம் அதே முறை தான் இந்த தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

நாம் என்ன செய்தாலும் ஒரு ஸ்திரமான வாக்கு வங்கி தமக்கு இருக்கிறது எனும் காங்கிரஸ் நினைப்பை சிதறடிப்போம்.இல்லையெனில் நாம் தோற்றுக் கொண்டே தான் இருப்போம்..!!!

சீமான் ஒரு பெட்டியில் கேட்பார். "கக்கனும் காமராஜரும் பேணிக்காத்த உண்மையும், நேர்மையும், ஒழுக்கமான அரசியல் பண்புகளையெல்லாம் நாசமாகியது யார்?" இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் நிச்சயம் சூரியனுக்கும் காங்கிரஸாருக்கும் ஒட்டு போட மாட்டார்கள்.



6 comments:

சக்தி கல்வி மையம் said...

இந்த பதிவில் உங்களது உழைப்பு அருமை...

பொன் மாலை பொழுது said...

சூடாக இருந்தாலும் நேர்மையான நியாயமான பதிவுதான்.பரவாயில்லையே நிறைய பழைய விஷயங்களை எடுத்து விட்டு விளாசி யுள்ளீர்கள். கருணாநிதியின் கேவலமான, நேர்மையற்ற ,சுயநல அரசியலால் நல்லவர்கள் எல்லாம் ஒழிந்துபோய் இப்போது தான் தன்குடும்பம் தன் பணம், பிசினஸ் என்ற ஒரு சர்வாதிகார தனத்துடன் இருபது தெளிவு. உண்மையில் கருணாநிதிக்கு காமராசரை பற்றி பேசவே நியாயம் இல்லை. அடுத்து இந்த சோனியா (காங்கிரஸ்) கொத்தடிமைகளுக்கு துளியும் யோக்கிதை இல்லை காமராசர் பெயர் சொல்ல.

Sathish said...

வேடந்தாங்கல் - கருன்,S.Sudharshan, கக்கு - மாணிக்கம் ...thanks you all

தாராபுரத்தான் said...

தி.மு.க...காங்கிரஸ்க்கு எத்தனை சீட் ஒதுக்குதோ அவ்வளவு சீட் அம்மா திமு்க வெற்றி ன்னு இப்பவே அறிவித்து விடலாம்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஒரு ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் இல்லாத ஒரு விஷயத்தை பேசுவதும் அது தனக்கு வந்தால் நியாய படுத்துவதும் மிக நியாயமான அரசியல் வாதிகளின் வேஷம் போட்டு நடிப்பதும் தேர்தல் வந்தால் வந்துவிடுகிறது .
அதை ஆதாரபூர்வமாக உங்கள் பதிவில் சொல்லிவிட்டீர்கள் .அருமை .

என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

Unknown said...

தாராபுரத்தான் said...

தி.மு.க...காங்கிரஸ்க்கு எத்தனை சீட் ஒதுக்குதோ அவ்வளவு சீட் அம்மா திமு்க வெற்றி ன்னு இப்பவே அறிவித்து விடலாம்.//

சரியா சொன்னீங்க. ப ம க ஓட்டு உள்ள ஏரியாக்களை ப ம க வாங்கி விட்டது. கூட்டணியால் தி மு கா விற்க்கு என்ன லாபம்-னுதான் தெரியலா