-

டுவெயின் ஜான்சன் "தி ராக்" - ஒரு பக்க வரலாறு

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4

டுவெயின் டக்ளஸ் ஜான்சன்  (மே 2, 1972 -இல் பிறந்தவர்) , என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார்.  ஜான்சன் கல்லூரி நிலை கால்பந்து வீரராக இருந்தார். 1991 -ஆம் ஆண்டில், அவர் மியாமி பல்கலைக்கழக தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்று இருந்தார். பின்னாளில் அவர் கனடிய கால்பந்து லீகில்
கேல்கரி ஸ்டாம்ப்டர்ஸ் என்ற அணிக்காக விளையாடினார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதம் விளையாட்டில் சேர்க்கப்படாமல் இருந்தார்.  இந்த காரணத்தால், தன்னுடைய தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தனது தந்தை ராக்கி ஜான்சன் ஆகியோரைப் போல
தானும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவது என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரு மல்யுத்த வீரராக வொர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மன்ட் (World Wrestling Entertainment - WWE) -இல் மிகவும் பிரபலமானார், இந்த அமைப்பு 1996 முதல் 2004 -ஆம் ஆண்டு வரை வொர்ல்ட் ரெஸ்லிங் ஃபெடரேஷன் (World Wrestling Federation - WWF) என்றழைக்கப்பட்டது. ரெஸ்லிங் வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்றாம் தலைமுறை மல்யுத்த சூப்பர்ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றார். WWE -இல் ராக்கி மிக வேகமாக வளர்ச்சியடைந்தார், முதலில் "ராக்கி மைவியா" என்றும், அதன் பின்னர் "தி ராக்" என்றும் அறியப்பட்டார், இவர் நேஷன் ஆஃப் டாமினேஷன் என்ற குழுவின் உறுப்பினராக இருந்தார். WWF -இல் இவர் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஜான்சன் WWF சாம்பியன்ஷிப்பை வென்று, அந்த நிறுவனத்தின் மிகப் பிரபலமான வீரர்களில் ஒருவராக மாறினார். மேலும் இவர் பேட்டிகள் மற்றும் முன்னோட்டங்கள் தருவதில் பிரபலமானவர் ஆனார். 2001 -ஆம் ஆண்டில், அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார், சில நேரங்களில் ரிங்கிலும் பங்கேற்றார். டுவெயின் தற்போது நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்.

தொழில்முறை மல்யுத்தத்தில், ஜான்சன் மொத்தம் ஒன்பது முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், அதில் ஏழு முறைகள் WWF/E சாம்பியன்ஷிப்பையும் (அவருடைய கடைசி வெற்றி WWE அங்கீகரிக்கப்படாத சாம்பியன் என்ற நிலையில் உள்ளது), இரண்டு முறை WCW/உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஷிப்களுடன், WWF இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் WWF டேக் டீம் சாம்பியன்ஷிப்பை ஐந்து முறைகளும் வென்றுள்ளார். WWF/E ட்ரிபிள் கிரவுன் என்பதன் ஆறாவது சாம்பியனாகவும், 2000 ராயல் ரம்பிளின் வெற்றியாளராகவும் ஜான்சன் திகழ்கிறார்.

ஜான்சன் ஒரு நடிகரும் ஆவார். அவர் 2001 ஆம் ஆண்டில், தி ஸ்கார்ப்பியன் கிங் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அதற்கு, முதல்முறையாக முதல் பட நடிகர்களின் சம்பளத்தில் அதிகபட்ச தொகையாக, $5.5 மில்லியன் சம்பளமாக பெற்றார். இதன் பின்னர், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவை தி ரன்டவுன் , பி கூல் , வாக்கிங் டால் , கிரிடிரன் கேங் , தி கேம் பிளான் , கெட் ஸ்மார்ட் , ரேஸ் டூ விட்ச் மவுன்டைன் , பிளானட் 51 மற்றும் டூம் ஆகியனவாகும்.


3 comments: